Tuesday, 3 October 2023

கொசுறாக ஒரு பொது அறிவு வினா புல்லெட் தொடரி ,மீன் கொத்தி 041023 புதன்

 



கொசுறாக ஒரு

பொது அறிவு வினா



புல்லெட் தொடரி ,மீன் கொத்தி
041023 புதன்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பரவலாக அறியப்பட்ட பாவமன்னிப்பு திரைப்படப் பாடல்
அதி விரைவு தொடரி ஓன்று பறவையைக் கண்டு அதுபோல் வடிவம் மாற்றி அமைப்பக்கபட்டது ஒரு வெளி நாட்டில்
தொடரி, நாடு, பறவையின் பெயர் என்ன ?
விடை
புல்லெட், ஜப்பான் , மீன்கொத்தி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் –முதல் சரியான விடை
கணேச சுப்ரமணியம்
ரவிராஜ்
ஷிரீன் பாரூக்
சிவசுப்ரமணியன் &
ஹசன் அலி – தமிழில் விடை அனுப்பியதற்கு சிறப்பு பாராட்டு சகோ ஹசன் அலிக்கு
பங்கெடுத்த சகோ
ஆ ரா விஸ்வநாதனுக்கும்
பானுமதிக்கும் , நஸ் ரீனுக்கும்
நன்றி
விளக்கம்
டோக்யோ ஒசாக்கா நகர்களுக்கு இடையே
அதிவேக தொடரிச் சேவை 1964 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாளில் துவங்கியது
புல்லெட் ட்ரெயின் என்று அறியப்பட்ட அதன் பெயர் Shinkansen ஷிங்கன்சென்
மணிக்கு 300 கிமி வேகம் ( நிமிடத்துக்கு 5 கி மி)
இவ்வளவு வேகத்தில் tunnel எனும் குகைகளுக்குள் செல்லும்போது எழும் ஒலி
Supersonic எனப்படும் ஒலியின் வேகத்கைத் தாண்டிய ஒன்றாக இருக்கும்
இது அருகில் குடிஇருக்கும் மக்களுக்கு பல வகையிலும் சிரமத்தை ஏற்படுத்தும்
இந்த அதிர்வு ஒலியை எப்படிக் குறைப்பது என்று சிந்தித்த பொறியர்கள் கண்ணில் பட்டது
மீன் கொத்திப் பறவை
தண்ணீருக்கு அடியில் இருக்கும் மீனைப் பிடிக்க இந்தப் பறவை வேகமாக நீருக்குள் போகும்போது
தண்ணீரில் அதிர்வலைகள் (ripples) எதுவும் உண்டாவதில்லை
எனவே மீன் கொத்தியின் அலகைப் போல தொடரியின் முன் பகுதியை மாற்றி அமைத்து ஒலி, ஒலியினால் உண்டாகும் அதிர்வைக் குறைத்தார்கள்
(Source The Hindu Magazine 011020 23 )
எந்த தொழில் நுட்ப வளர்ச்சியும் இறைவன் படைப்புக்கு ஈடாகாது
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
04102023 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment