தமிழ் (மொழி ) அறிவோம்
குணங்கு
08102023 ஞாயிறு
முதலும் நான்காவதும் வல்லின உகரம்
சோர்வு தரும் சொல்
ஓர் எழுத்தை நீக்கி விட்டால் கொஞ்சும்
ஓர் எழுத்தை சேர்த்தால் ஒரு ஞானியின் அடையாளமாகும்
அந்த 4 எழுத்து சொல் எது ?
(4 எழுத்துக்கு இத்தனை குறிப்புகள் தேவையா? )
விடை
குணங்கு
இயல்பாக பேச்சு வழக்கில் நோய் பிடித்த கோழியை
கொணங்கிப் போச்சு என்றும்
உடல் நலக் குறைவால் ஏற்படும் சோர்வை கொணங்குதல்
என்றும் சொல்வது உண்டு
அதன் எழுத்து வடிவே குணங்கு
• குணங்குதல், வினைச்சொல்.
4. குணகுதல்
5. வளைதல்
6. சோர்தல்
]
..சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
ஒரு எழுத்து குறைந்தால்
• குணகு =கொஞ்சுதல்.
• குணுகியிட்டுள பொருள் பறித்து (திருப்பு. 676).
ஒரு எழுத்து சேர்த்தால் குணங்குடி –
குணங்குடி மஸ்தான் சாஹிபு – மிகப் பெரிய ஞானி
நிறைய சரியான விடைகள் எதிர்பார்த்தேன்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
௦௮௧௦௨௦௨௩
08102023 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment