இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
29 , திருமறை 13
குரான் சூராக்கள் பற்றி எளிய விளக்கங்களைப் பார்த்து வருகிறோம்
சென்ற பதிவில் சூராஹ் சுராஹ் 95 அட் டின் (அத்தி ) பற்றிப் பார்த்தோம்.
அதன் நிறைவு வினா
குதிரைகள் பற்றி ( குதிரை என்ற சொல் இல்லாமல் ) பல வசனங்களில் குறிப்பிடும் சுராஹ் எது ?
விடை
சூராஹ் 100 அல் ஆதியாத் (வேகமாகச் செல்லுபவை) மக்கத்து சுராஹ்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் முதல் சரியான விடை
பாப்டி
தல்லத்
பாடி பீர்
ஷர்மதா &
கதீப் மாமுனா லப்பை
சூரா அல்-அதியாத்தின் மையக் கருத்து
, இந்த சூரா மனிதன் தன் ரப்பிற்கு (அல்லாஹ்) இருப்பதை விட குதிரைகள் தங்கள் உரிமையாளர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது
Surah100 Al-Adiyat with Tamil Bismillaahir Rahmaanir Raheem
وَالْعَادِيَاتِ ضَبْحًا(1)
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
فَالْمُورِيَاتِ قَدْحًا(2)
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
فَالْمُغِيرَاتِ صُبْحًا(3)
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
فَأَثَرْنَ بِهِ نَقْعًا(4)
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
فَوَسَطْنَ بِهِ جَمْعًا(5)
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ(6)
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ(7)
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ(
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ(9)
அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ(10)
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ(11)
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
Bismillaahir Rahmaanir Raheem
1. Wal'aadi yaati dabha
2. Fal moori yaati qadha
3. Fal mugheeraati subha
4. Fa atharna bihee naq'a
5. Fawa satna bihee jam'a
6. Innal-insana lirabbihee lakanood
7. Wa innahu 'alaa zaalika la shaheed
8. Wa innahu lihubbil khairi la shadeed
9. Afala ya'lamu iza b'uthira ma filquboor
10. Wa hussila maa fis sudoor
11. Inna rabbahum bihim yauma 'izin lakhabeer
இறைவன் நாடினால்
நாளை சிந்திப்போம்
11 ரபியுல் ஆகிர் (4) 1445
27 102023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment