இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
சூரா 109 அல்காபிருன்
25 , திருமறை 9
குரான் சூராக்கள் பற்றி எளிய விளக்கங்களைப் பார்த்து வருகிறோம்
சென்ற பதிவில் சூராஹ் 12 யூசுப் பற்றிப் பார்த்தோம்.
அந்தப் பகுதியின் நிறைவு வினா
மிக எளிய வினா
“உங்கள் வழி உங்களுக்கு
என் வழி எனக்கு “
மிக நன்றாகத் தெரிந்த குரான் வசனம்
இது எந்த சூராவில் வருகிறது ?
விடை சூரா 109 அல்காபிருன் (இறை நம்பிக்கையற்றோர்) வசனம் 6
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி –முத;ல் சரியான விடை
ஷிரீன் பாருக்
தல்லத்
முயற்சித்த சகோ ஷர்மதாவுக்கு நன்றி
சூராஹ் 109 அல் காபிரூன்
குல்யா அய்யுஹல் காபிரூன்
ளா அக்புது மாதக் புதூன்
வலா அன்தும் ஆபிதூன மா அக்புது
வலா அன ஆபிதூம் மா அ.பத்தும்
வலா அன்தும் ஆபிதூன் மா அக்புது
லகும் தீனுக்கும் வலியதீன் (109 :1—6)
விளக்கம்
நபி ஸல் அவர்கள் மேல் பல விதமான அழுத்தங்களைக் கொண்டுவர குறைஷிகள் முயற்சிக்கிறார்கள் –---
பொன்னும் பொருளும் கோடிக் கணக்கில் தருகிறோம்
மிக உயர்ந்த பதவியில் அமர்த்துகிறோம்
அழகிலும் குலத்திலும் சிறந்த பெண்ணை மணம் முடித்து வைக்கிறோம்
என்றெல்லாம் ஏக இறைத் தத்துவத்துக்கு தடை போட எண்ணுகிறார்கள்
மேலும் ஒரு முயற்சியாக
நாங்கள் உங்கள்( இஸ்லாமிய)மார்க்கத்தில் ஓராண்டு காலத்துக்கு இணைகிறோம்
அது போல் நீங்களும் (இஸ்லாமியரும்) எங்கள் மார்க்கத்தில் ஓராண்டு காலம் இணைந்திருக்க வேண்டும்
இரண்டிலும் உள்ள நல்லவற்றை எடுத்துக் கொள்வோம்
என்று சொல்லிப் பார்க்கிறார்கள்
இவை அனைத்துக்கும் தெளிவான மறுமொழியாக இந்த சூராவை இறைவன் அருளுகிறான்
ஏக இறை நம்பிக்கை , ஏக இறை மறுப்பு இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துச் சொல்லி மிக உறுதியான மறுப்பாக
உங்கள் வழி உங்களுக்கு
என் வழி எனக்கு என பொருள் படும்
லகும் தீனுக்கும் வலியதீன்
என்ற வரியோடு சூராவை நிறைவு செய்கிறான்
109. Surah Al-Kafirun
மக்கத்து சூராஹ்
109:1 قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
109:2 لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3 وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4 وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5 وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6 لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
இன்றைய வினா
திரு மறையில் பெயர் சொல்லி இறைவனால் சபிக்கப் பட்டவர் யார் ?
எந்த சூராஹ் ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
26 ரபியுல் அவ்வல் (3) 1445
12 102023 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment