தமிழ் (மொழி) அறிவோம்
கதிரை
011023 ஞாயிறு
மூன்றெழுத்துச் சொல்
மூன்றாம் எழுத்து குறிலா நெடிலா என குழப்பம் வரும் ஒரு இடையின நெடில்
உச்சரிப்பு வேகமான ஒரு விலங்கை நினைவூட்டும்
பக்தித் தலமொன்றின் பெயர்
ஒரு மூலிகை
என பல பொருள் கொண்ட
அண்டை நாட்டுச் சொல்
அது எது?
விடை
கதிரை
இலங்கைத் தமிழ்ச் சொல்
கதிரை(பெ)
பொருள்
நாற்காலி
கதிர்காமம்
கந்தகாரி - ஆடுதின்னாப்பாளை
எடுத்துக் காட்டு
நீச்சல் தடாகத்தில் பெண்கள் நீந்திக்கொண்டிருந்தார்கள் அல்லது ஓரத்துச் சார்மணக் கதிரைகளில் சாய்ந்து ஓய்வெடுத்தார்கள். (250 டொலர் லாபம், அ.முத்துலிங்கம்)
( மொழிகள் )
சான்றுகள் ---கதிரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
01102023 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment