இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
சூரா 12 யூசுப் (முதல் பகுதி)
23, திருமறை 7
முந்தைய பகுதி வினா
அல்கவுதர் என்ற சிறிய சூரா நபி பெருமானார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக அருளியது என்று பார்த்தோம்
இன்னொரு ஓரளவு பெரிய முழு சூராவின் மூலமும் இப்படி ஆறுதல் சொல்கிறான்
இறைவன்
என்பது அறிஞர்கள் கருத்து
இது எந்த சூரா?
விடை
சூராஹ் 12
, யூஸுப்
குர்ஆனில் பல இடங்களில் இறைவன் தன் நபிக்கு ஆறுதல் சொல்லும் வசனங்கள் வருகின்றன
எனவே வந்த விடைகள் அனைத்துமே சரிதான்
எனவே ஆர்வத்துடன் சரியான விடை அனுப்பிய சகோ
சிராஜுதீன்
ஷிரீன் பாருக்
ஷர்மதா (சூராஹ் 52
சூராஹ் 93)
மூவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
இருந்தாலும் நான் சூரா 12 ஐக்
தெரிவு செய்ய சில சிறப்பான காரணங்கள் இருக்கின்றன
நபி பெருமானார் வாழ்வில் தொடர்ந்து துயரங்கள்
நபியின் பாதுகாவலராக தந்தை நிலையில் இருந்த அபூதாலிப் மறைவு
இஸ்லாத்தில் முதன் முதலில் இணைந்து வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உறு துணையாக இருந்த அருமை மனைவி அன்னை கதீஜா பிராட்டியார் மறைவு
அபுதாலிபின் மறைவுக்குப் பின் குறைஷிகளின் அட்டகாசம் எல்லை கடந்து போக பொறுக்க முடியாத நபி அவர்கள் ஆறுதல் தேடி தாயிப் நகருக்குப் போகிறாரகள்
அங்கோ கிடைத்தது கல்லடியும் சொல்லியும் தான்
உடலெங்கும் குருதி வடிய மக்காவுக்கு திரும்புகிறார்கள்
இப்படி ஒன்றன் பின் ஒன்றாக இன்னல்கள் நிகழ்ந்த இந்த ஆண்டை
Am Al huzun
துயர ஆண்டு என்ற வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்
இந்தத் துயர நிலையில் ஆறுதல் கூற நபி யூசுப்பின் வரலாறை இறைவன் எடுத்துச்
சொல்கிறான்
(Source Wikipedia)
111 ஆயத்துகள் கொண்ட இந்த சூராவில்
நபி பரம்பரையில் உதித்த நபி
யூசுப் அவர்கள் நபி ஆகுமுன் அடைந்த இன்னல்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன:
சிறுவனாக இருந்த போது மாற்றாந்தாய் மக்கள் பாழும் கிணற்றில் வீசியது
மீட்டெடுத்தவர்கள் அவர்கள் ஊர்த் தலைவனிடம் விற்றது
இளைஞராக இருக்கும்போது
ஊர்த் தலைவர் துணைவியால் ஏற்பட்ட சத்திய சோதனை
இறைவன் அருளால் தவறு செய்யாமல் தப்பித்தது
இருந்தும் செய்யாத தவறுக்கு சிறை தண்டனை
அதுவும் நீண்ட கால சிறை வாசம்
இதையெல்லாம் தாண்டி வந்து நாட்டில் ஒரு மிகப் பொறுப்பான பெரிய பதவி கிடைத்தது
இவை எல்லாம் கோர்வையாக
சொல்லப் படுகின்றன
காலையில் எதிர்பாராத மின் தடை
அதனால் இணையம் துண்டிப்பு என நேரம் கடந்து விட்டது
எனவே இத்துடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன்
இன்றைய வினா
நபி யூசுப் புக்கும்
சூரா யூசுப் புக்கும்
மிகப் பல சிறப்புகள் உண்டு
அவை என்ன?
இறைவன் நாடினால் நாளை விடைகளுடன் சிந்திப்போம்
1903(ரபியுல் அவ்வல்) 1445
05102023 வியாழன்
No comments:
Post a Comment