Thursday, 12 October 2023

இனிய இஸ்லாம் எ த இ இ சூரா 111 அல் மசத்/ அபுலஹப் (ஈச்சங்கயிறு / அபுலஹப் ) 13 102023 வெள்ளி




 இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
சூரா 111 அல் மசத்/ அபுலஹப் (ஈச்சங்கயிறு / அபுலஹப் )
13 102023 வெள்ளி
26 , திருமறை 10
குரான் சூராக்கள் பற்றி எளிய விளக்கங்களைப் பார்த்து வருகிறோம்
சென்ற பதிவில் சூராஹ் 109 அல்காபிருன் பற்றிப் பார்த்தோம்.
அதன் நிறைவு வினா
திரு மறையில் பெயர் சொல்லி இறைவனால் சபிக்கப் பட்டவர் யார் ?
எந்த சூராஹ் ?
விடை
பெயர் சொல்லி இறைவனால் சபிக்கப் பட்டவர் ஒரே ஒருவர்தான்
அவர் பெயர்
அபுலஹப்
சூரா 111 அல் மசத்/ அபுலஹப் (ஈச்சங்கயிறு / அபுலஹப் )
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப்பெறுவோர்
சகோ
ஹசன் அலி – முதல் சரியான விடை
தல்லத்
மெஹராஜ்
சிராஜுதீன்
ஷிரீன் பாருக்
ஷர்மதா
விளக்கம்
அபு லஹப் என்று அழைக்கப்படும் அப்துல் உஜ்ஜா
நபி ஸல் அவர்களின் மிக நெருக்கமான உறவினரும் , சம்பநதியும் ஆவார்
நபி பெருமான் பிறந்த நல்ல செய்தியைக் கொண்டு வந்த அடிமைப் பெண்ணுக்கு உடனே விடுதலை அளித்தார்
அந்த அளவுக்கு பாசமுடன் இருந்த அவர் நபி ஸல் அவர்கள் ஓரிறைக் கொள்கையான இஸ்லாம் பற்றிப் பரப்புரை துவக்கியவுடன் நபிக்கும் ,இஸ்லாத்துக்கும் மிகப் பெரும் எதிரி ஆக மாறி விட்டார்
நபி பெருமானை சொல்லாலும் செயல்லாலும் நிந்தனை செய்வதையே வாழ்க்கை நடை முறையாக்கி கொண்டார்
நபியின் குலத்தில் நபியை மிகவும் வெறுத்த ஒரே உறவு இவர்தான்
நபி பெருமான் மகள்களை மணம் புரிந்திருந்த தன மகன்களை மண விலக்கு அளிக்கச் செய்தார்
அபுலஹபின் துணைவி நபி பெருமான் நடக்கும் இடங்களில் எல்லாம் முள்ளைப் பரப்பி மகிழ்ந்தார்
மக கடுமையான சொற்களால் இறைவன் சபிக்கிறான் என்றால் இவர்கள் கொடுமையின் அளவை எளிதில் புரிந்து கொள்ளலாம்
111. Surah Al-Masad Makkan surah
111:1 تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
111:2 مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
111:3 سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
111:4 وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:5 فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
தப்பத் யதா அபிலஹபின் வதப்ப
மா அக்ல அன்ஹு மாலுஹு வமா ஹசப்
சயஸ்ளா நாரன் தாதல் ஹபின்
வமர அதுஹு ஹம்மா ளதல் ஹதபி
பிஜிதிஹா ஹப்ளும் மிம்மசத் (111:1-- 5 )
மண்டை பிளந்து உடல் முழுதும் புண்ணாகி நெருங்கிய உறவினர்கள் கூட அருகில் வர அஞ்சும் அளவுக்கு கெட்டுபோய்
உயிர் போனபின் உடல் ஒரு குழிக்குள் தள்ளி விடப்பட்டு கற்களால் மூடப்பட்டது
இன்னும் அந்த இடத்தில் ஒரு துர் வாடை வருவதாய் சொல்கிறார்கள்
சூராஹ் இறங்கி பல ஆண்டுகள் அபுலஹாப் வாழ்ந்தும் மனம் திருந்தவில்லை ,கொடுமைகளை நிறுத்தவும் இல்லை
இந்த சூராஹ் கடுமையான சொற்களால் ஆனது
என்று சொல்லி இதை ஒதுவதை தவிர்ப்பது
தவறு
இன்றைய வினா
நபி ஸல் அவர்கள் மறைவுக்கு சில காலம் முன்பு இறங்கிய ஒரு சிறிய சுராஹ் இஸ்லாத்துக்கு கிடைக்கப்போகும் மாபெரும் வெற்றி பற்றி சொல்வதோடு நபி பெருமானின் பணி நிறைவுற்றது ( எனவே மறையும் நாள் நெருங்கி விட்டது ) என்பதையும் அறிவிப்பதாகச் சொல்கிறார்கள் அறிஞர்கள்
அது எந்த சூரா ( இந்த வினாவை விட அந்த சூராஹ் சிறியது )
இறைவன் நாடினால் நாளை தமிழிலும்
அடுத்த வாரம் குரானிலும் சிந்திப்போம்
27 ரபியுல் அவ்வல்(3) 1445
13 102023 வெள்ளி
சர்புதீன் பீ

Like
Comment
Share

No comments:

Post a Comment