இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
சுராஹ் 95 அட் டின் (அத்தி ) மக்கத்து சூராஹ்
29 , திருமறை 13
குரான் சூராக்கள் பற்றி எளிய விளக்கங்களைப் பார்த்து வருகிறோம்
சென்ற பதிவில் சூராஹ் 106 குறைஷ் பற்றிப் பார்த்தோம்.
அதன் நிறைவு வினா
மிக மிக எளிய வினா
பழத்தின் பெயரில் அமைந்த சூராஹ் எது ?
விடை
சுராஹ் 95 அட் டின் (அத்தி ) மக்கத்து சூராஹ்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் முதல் சரியான விடை
பாப்டி
ஷிரீன் பாருக்
ஷர்மதா
மெஹராஜ்
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
95:5 ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
என்பது இந்த சூராவின் மையக் கருத்து
95. Surah At-Tin
95:1 وَالتِّينِ وَالزَّيْتُونِ
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
95:2 وَطُورِ سِينِينَ
´ஸினாய்´ மலையின் மீதும் சத்தியமாக-
95:3 وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
95:4 لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
95:5 ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
95:6 إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
95:7 فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
95:8 أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
Is not Allah the most just of judges?
Bismillaahir Rahmaanir Raheem
1. Wat teeni waz zaitoon
2. Wa toori sineen
3. Wa haazal balad-il ameen
4. Laqad khalaqnal insaana fee ahsani taqweem
5. Thumma ra dad naahu asfala saafileen
6. Ill-lal lazeena aamanoo wa 'amilus saalihaati; falahum ajrun ghairu mamnoon
7. Fama yu kaz zibuka b'adu bid deen
8. Alai sal laahu bi-ahkamil haakimeen
அத்தி என்பது நுஹ் நபியின் கப்பல் தரை தொட்ட ஜூடி மலையைக் (Mount Judi)குறிக்கிறது
ஜைத்தூன் எனும் ஆலிவ் ஈசா நபி பிறந்த பாலஸ்தீனத்தில் உள்ள அல் அக்சாவை(Al-Aqsaக் குறிக்கிறது
என்பது அறிஞர்கள் கருத்து
இன்றைய வினா
குதிரைகள் பற்றி ( குதிரை என்ற சொல் இல்லாமல் ) பல வசனங்களில் குறிப்பிடும் சுராஹ் எது ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன்
நாளை சிந்திப்போம்
10 ரபியுல் ஆகிர் (4) 1445
26 102023 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment