இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
இந்தப் பகுதியில் துவங்கி சில சூராக்கள பற்றிப் பார்ப்போம்
முன்பே சொன்னது போல் குர்ஆனில் ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் ஆயத்தும் சிறப்பு மிக்கதுதான்
இன்று நாம் பார்க்கப் போவது சூரா 108 அல்கவ்தர்
108. Surah Al-Kawthar
108:1 إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
108:2 فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
108:3 إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்
மூன்று ஆயத்துகள கொண்ட மிகச் சிறிய சூரா
விளக்கம்
கவுதர் என்ற சொல்லுக்கு அளவற்ற நன்மை என்று பொருள் கூறப்படுகிறது
ஆனால்
சுவனத்தில் உள்ள கவ்தர் எனும் புனித நீர் நிலையை இந்தச் சொல் குறிக்கிறது
நபி பெருமானுக்கு இந்த தடாகம்
இறைவன் அருளால் சிறப்புப் பரிசாக வழங்கப்பட்டது
அரபு நாடுகளில் ஆண் வாரிசுகள் என்பது சொத்து சுகங்களுக்கு மேலாக ஒரு கௌரவச் சின்னமாக பெருமைமிக்க அடையாளமாக இருந்தது
நபி அவர்களின் ஆண் வாரிகள் எல்லாம் குழந்தைப் பருவத்தில் மறைந்து விட இதை வைத்து இஸ்லாத்தின் எதிரிகள் நபி பெருமானை ஒரு கேலிப் பொருளாக்கி
"தன் நபியை இறைவன் வாரிசு இல்லாதவனாக ஆக்கி பெரிதும் கீழ்மைப் படுத்த முயல்கின்றனர்
இந்த நிலையில் இந்த சிறிய சூர்யாவின் வழியே நபி பெருமானுக்கு ஆறுதல் சொல்கிறான் இறைவன்
இந்த உலகில் எந்த ஒரு மனிதருக்கும் --அவர் மிகப்பெரிய மதத் தலைவராக பேரரசராக அரசியல் இருந்தாலும் --
கிடைக்காத ஒரு சிறப்பை இறைவன் நபி பெருமானுக்கு வழ்ங்கி இருக்கிறான்
அதுதான் வாழ்த்தும் துவாவும் கலந்த சலவாத் என்பது
உலகம் உள்ளவரை மனித குலம் உள்ளவரை ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கானோர் நபி பெருமானுக்கு சலவாத்து சொல்லிக் கொண்டே இருந்தார்கள் இருக்கிறார்கள் இருப்பார்கள்
இன்றைய வினா
நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது
ஒரு குர்ஆன் சூராவின் பெயர்
நபி பெருமான் பிறந்த ஆண்டைக் குறிப்பிடுகிறது
அது எந்த சூரா?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
12 ரபியுல் அவ்வல் (3) 1445
28 09 2023 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment