Saturday, 21 October 2023

தமிழ்( மொழி )அறிவோம் பாளம் 22102023 ஞாயிறு





 தமிழ்( மொழி )அறிவோம்

பாளம்
22102023 ஞாயிறு
மூன்றெழுத்தில் ஒரு சிறிய சொல்
இயல்பாக பேச்சிலும் எழுத்திலும் பயன்படும் சொல்
மாறுபட்ட பல்வேறு பொருள்கள்
ஒரு சில
உலோகக் கட்டி
காலில் தோல் உரிதல்
கனத்த தகடு
அழகாய் அச்சில் ஊற்றி செய்யப்பட்ட தின்பண்டங்கள்
வறண்ட நிலம்
இவற்றைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன் படுகிறது
முதல் எழுத்து வல்லின அகர நெடில்
மூன்றாம் எழுத்து மெல்லின ஒற்று
மற்றது இடையினம்
என்ன அந்தச் சொல் ?
விடை
பாளம்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் முதல் சரியான விடை
தல்லத்
ஹசன் அலி
பாளம்
அகராதி
பாளம், பெயர்ச்சொல்.
• தகட்டு வடிவம். (இலக். அக.) (W.)
• உலோகக்கட்டி (எ. கா.) உருக வெந்த பாளத்தை (சீவக. 2768)
• வெடித்த தகட்டுத் துண்டு (W.)
• தோலுரிவு(பித்த வெடிப்பு)
• வெடியுப்பு (சங். அக.)
• சீலையின் கிழிவு
பளபளப்பு (உள்ளூர் பயன்பாடு
மண், பனி, உலோகம் போன்றவற்றின்) கனத்த தகடு போன்ற கட்டி
மழை இல்லாததால் வயல்வெளிகள் பாளம்பாளமாக வெடித்திருந்தன
நிலக்கரியைப் பாளம்பாளமாக வெட்டியெடுத்தார்கள்
இரும்புப் பாளங்களை வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்
மேலை நாடுகளில் பனிப் பாளங்கள் வாகனங்களின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்துகின்றன
பாளம் பாளமாக கடலை மிட்டாய்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௨௧௦௨௦௨௩
22102023ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment