இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
சூரா 110 அந்நஸ்ர்
27 , திருமறை 11
குரான் சூராக்கள் பற்றி எளிய விளக்கங்களைப் பார்த்து வருகிறோம்
சென்ற பதிவில் சூராஹ் 111 அல்மசத் பற்றிப் பார்த்தோம்.
அதன் நிறைவு வினா
நபி ஸல் அவர்கள் மறைவுக்கு சில காலம் முன்பு இறங்கிய ஒரு சிறிய சுராஹ் இஸ்லாத்துக்கு கிடைக்கப்போகும் மாபெரும் வெற்றி பற்றி சொல்வதோடு நபி பெருமானின் பணி நிறைவுற்றது ( எனவே மறையும் நாள் நெருங்கி விட்டது ) என்பதையும் அறிவிப்பதாகச் சொல்கிறார்கள் அறிஞர்கள்
அது எந்த சூரா ( இந்த வினாவை விட அந்த சூராஹ் சிறியது )
விடை சூராஹ் 110 அந்நஸ்ர் (மதினா சூராஹ் )உதவி
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் – முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா (அனுப்பிய 6 விடைகளில் 110 ம் இருந்ததால் சரியான விடை என்று எடுத்துக்கொண்டேன் –கொஞ்சம் குழப்பமான விடைகள் )
ஷிரீன் பாருக்
கதீப் மாமுனா லப்பை
சுராஹ் 110 அந்நஸ்ர்
110. Surah An-Nasr بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
110:1 إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
110:2 وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
பிஸ்மிள்ளஹிர்ரகஹ்மாநிர்ரஹீம்
இதா ஜா அ நஸ்ருல்லாஹி வல் பத்துஹு
வர அவ்தன்நாச யத்குலூன பீதிநில்லாஹி அப்வாஜன் பலப்பிஹ் பிஹம்தி ரப்பிக்க வஸ்த க்பிர்ஹு இன்னஹூகாண தவ்வாபா
இந்த சூராஹ் பற்றிய வினாவே இதற்கு விளக்கமாக அமைகிறது
இன்றைய
மிக மிக எளிய வினா
குளிர் காலம் என்ற பொருள்படும் பெயருள்ள சூராஹ் எது
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
03 ரபியுல் ஆகிர் (4) 1445
19 102023 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment