Tuesday, 24 October 2023

ஆசையே அலைபோலே 25102923 புதன் சொந்த ஊர் 1

ஆசையே அலைபோலே  சொந்த ஊர் 1

25102923 புதன்
“எழுத்துப் பணியை குறைத்துக் கொள்ளவேண்டும்
தேவைபட்டால் ஒரு விடுமுறை விடவேண்டும்”
என்ற எண்ணம் சிலபல நாட்களாக மனதுக்குள்
ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரு எண்ணம் தலைதூக்கியது நேற்று
“சிக்கந்தாபுரம்’ என்ற ஒரு நாவலில் ஆசிரியர் அந்த ஊர் பற்றி
எளிதான தமிழில் நகைச்சுவை உணர்வோடு எழுதியிருப்பது பற்றி
சகோ கான் விரிவாக எழுதிஇருந்தார்
உடனே நம்மூர் பற்றி ஒரு புதினம் எழுதினால் என்ன என்ற ஒரு சிந்தனை
“ காலங்கடந்த எண்ணம் “ என்று அறிவு சொல்கிறது
மனமோ “முயற்சி செய்தால் என்ன “ என்கிறது
சரி முயற்சிப்போம் என்று எண்ணினால்
என்ன எழுதுவது என்ற திகைப்பு ஒருபுறம்
எப்படி எழுதுவது என்ற மலைப்பு மறுபுறம்
இன்னொரு குரல் ‘பேசாம கணினியை மூடிவிட்டுப் போய் படு”
என்கிறது
இந்தபோராட்டத்தில் வென்றது மனதின் குரல் –முயற்சி செய் “

மனதில் எண்ணத்தை விதைத்த இறைவனே எழுதவும் வழி காட்டுவான் என்ற உறுதியான நம்பிக்கையோடு விரைவில் துவங்க எண்ணம்

நான் சொந்த ஊரில் இருந்தது மிகக் குறைவான காலமே
எழாவது படிக்கையில் ஒரு ஆண்டு பெரியத்தா வீட்டில்
திருமணமாகி சில நாட்கள்
சிவான் பீகாருக்கு பணி மாறுதல் வந்தபோது இரண்டு மாதங்கள்
இவ்வளவுதான்
அங்கேயே பிறந்து வளர்ந்து படித்து வாழ்ந்த , இன்னும் அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் சுற்றங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
ஊர் பற்றி நீங்கள் அறிந்தது தெரிந்தது ,உணர்ந்தது அனுபவித்தது , சிறியபெரியது என
எல்லாவறையும் எனக்குத் தெரிவித்தால் தொகுத்து எழுத உதவியாக இருக்கும்
இதெல்லாம் எழுதலாமா என்ற தயக்கம் வேண்டாம் எதையும் எழுதலாம்
யார் மனமும் நோகும்படி எதுவும் வேண்டாம்
மக்கள் தொகை, பரப்பளவு போன்ற புள்ளி விவரங்கள்
வேண்டாம்
ஊர் என்றால் என் மனதில் வருபவை
சீதேவி , சீதேவி வடகரை. அதில் எங்கள் வீடு பெரியத்தா வீடு மாமா வீடு எஸ் ஐ மன்சில் கரீம் கடை ,
பள்ளிவாசல், கோயில் ,கோயில் யானை
கடைத்தெரு ,மாதவன் கடை, ராசாக்கிலி கடை, சாலயோர உணவகங்கள் , பருத்திப்பால்
சாமாங்குளம் , கல்வெட்டு மேடு மருத நாடி காணாமல் போன கண்மாய் ஈனா வீட்டு தோட்டம் ,பம்ப் செட்
பள்ளி, கல்லூரி , சரிவு மாமா வீடு , கறுப்புத் தொப்பி மாமா வீடு இன்னும் பல பல
அருகில் உள்ள கோட்டை இருப்பு (குப்பி வீடு) புதுபட்டி , மைவாலம் பட்டி(குப்பி வீடு ) ,பிரான் மலை ,
திரை அரங்குகள் மஞ்சுளா, தங்கமணி , சாம்பியன்
இப்படி நீண்டு கொண்டே போகிறது
இதற்கெல்லாம் மேல் அங்கு வாழ்ந்த ,வாழும் மக்கள், அவர்கள் மொழி கலாசாரம் , விருந்து உணவுகள் --------------------

மீண்டும் நினைவூட்டுகிறேன்
உங்கள் பதிவுகளை எதிர்நோக்குகிறேன்
எழுத முடிந்தால் எழுதுங்கள்
இல்லையேல் குரல் பதிவு செய்யுங்கள்
அதுவும் முடியாதென்றால் தொலை பேசியில் சொல்லுங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25102023 புதன்
சர்புதீன் பீ

திருப்பத்தூரார்களுக்கு இரண்டு எளிய வினாக்கள்
1 சீதேவியில் எத்தனை படித்துறைகள் ?
அதில் ஆண்களுக்கு எத்தனை , பெண்களுக்கு எத்தனை ?
2 "டோன்டாக்கு"
எதைக் குறிக்கிறது ?

[18:51, 10/25/2023] Padi Peer: என்னப்பாதம்பி பள்ளிவாசல் படித்துறை கடைவீதி கோட்டைசாயபுபடத்தறைஅதற்க்குஅடுத்தற்குபெயர்ஞாபகம்இல்லை வைரவன் கோயில் படித்துறை அரசமரத்தை அல்லது மேளகரார்படித்துறை மண்டபபடித்துறை அதற்குஅடுத்தபடித்துறைபெயர்தெரியவில்லை வலகஆரதஎரஉபடஇத்தஉறஐ பிள்ளையார்படித்துறை அம்பலகஆரவஈட்டஉப்படித்துறைசெட்டியதெருபடித்துறை [18:56, 10/25/2023] Padi Peer: ஐந்துஆண்கள்படித்துறை‌ஏழுபெண்கள்படித்துறை பெயர் தெரியாத மூன்றில் ஒன்று கீர்த்தி படித்துறை மற்றது தொகுப்புக்கு தந்தாக ஓய்வில் படித்துறை இதில்ஏதும்ஞாபகம்பிசகிஇருக்களாம்தமபி [18:56, 10/25/2023] Padi Peer: கோவில் [18:59, 10/25/2023] SHERFUDDIN P: உண்மையில் எனக்குத் தெரியாது வடகரையில் ஆண்கள் ஒன்று பெண்கள் ஒன்று ஆக2 இவ்வளவுதான் நினைவில் இருக்கிறது [19:00, 10/25/2023] SHERFUDDIN P: மொத்தம் 12 ஆ நன்றி வாழ்த்துகள் [19:27, 10/25/2023] Padi Peer: கீழரதவீதிஎன்றுபடிக்கவும் [19:28, 10/25/2023] Padi Peer: அம்பலாரவீட்டுப்படிதுறை [19:30, 10/25/2023] Padi Peer: எழுதும்பொழுதுஎழுத்துக்கள்தவறாபதிவாகிவிடுகின்றன

[08:31, 10/26/2023] Thallath: 12 படித்துறைகள்
ஆண்களுக்கு 7
பெண்களுக்கு 5
[08:35, 10/26/2023] Thallath: "டோண்டாக்கு" உயர்நிலைப்பள்ளியில் இருந்த ஒரு ஆசிரியர் அடிக்கடி இந்த வார்த்தையை(வாக்கியத்தை)கூறுவதால் அவருக்கு இந்த பட்டப்பெயர்.
[08:38, 10/26/2023] Thallath: வருந்துகிறேன்
பெண்களுக்கு 7
ஆண்களுக்கு 5
[08:42, 10/26/2023] SHERFUDDIN P: அருமை

படித்துறை
எனக்கு சரியாக தெரியாது
வந்த 5 விடைகள் மூன்று விதமாக இருக்கின்றன
12 சரி என நினைக்கிறேன்
7'. 5. ஆ
8.  4  ஆ
என்பதில் கொஞ்சம் தெளிவில்லை

டோண்டாக்கு
அஜ்மல் '
ஜமால் அண்ணனுக்குத்தான் தெரியும் என்றிருந்தேன்

உனக்கும் அவர் இருந்தாரா?
[08:58, 10/26/2023] Thallath: ஸ்ரீதளி குளத்தில் நான்கு பக்கங்கள். ஒரு பக்கத்திற்கு இரண்டு பெண்கள் படித்துறை ஒரு ஆண்கள் படித்துறை. ஆண்கள் படுத்துறை நடுவில் இருக்கும். இதில் மேற்குப் பக்கத்தில் இருக்கும் மூன்று படித்தறைகளில் ஒன்று கடைவீதிக்கு அருகில் அமைந்திருப்பதால், பெண்கள் வர முடியாது என்பதற்காக அதையும் ஆண்கள் படித்துறையாக மாற்றி ஏழு ஐந்து என்று பிரித்து வைத்திருந்தார்கள்.
 நான் ஆறாம் வகுப்பில் உயர்நிலைப் பள்ளியில் சேரும் பொழுது ஒரு வாரம் மட்டுமே அங்கு படித்தேன் .அதன் பிறகு முத்தமிழ் பள்ளியில் படித்ததால் அது அங்கீகரிக்கப்பட்ட பள்ளி இல்லை என்பதால் ஆறாம் வகுப்பில் என்னை உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். எனவே பாத்திமா rc  பள்ளியில் 6 7 8வகுப்புகள் படித்தேன் .ஒரு வாரம் மட்டும்  அங்கு இருந்த நிலையிலேயே அவர் பட்ட பெயரை தெரிந்து கொண்டேன்.

[01:40, 10/26/2023] Sirajudddin Cell: சீதளி குளம் நான்கு பக்கம் உடைய சதுர வடிவ அமைப்பிலானது, ஒரு பக்கத்திற்கு மூன்று படித்துறை விதம் மொத்தம் 12 படித்துறைகள் உள்ளன. இவற்றில் நான்கு மூலையிலும் இருபுறம் இருக்கக்கூடிய 8 படித்துறைகள் பெண்கள் குளிப்பதற்கு உரியது, மீதி ஆண்களுக்கானது. குளத்தின் கீழ்த்திசையில் உள்ள மூன்று படித்துறைகளில் நடுவில் உள்ளது மண்டப படித்துறை, இது மற்ற படித்துறைகளை விட அளவில் பெரியது. விழா காலங்களில் சாமி தரிசனம் அங்குள்ள மண்டபத்தில் நடைபெறும். மேலும் கோவில் யானையை குளிப்பாட்டுவது, தெப்பம் விடுவது இறந்தோருக்கு சாங்கியம் செய்வது முதலான செயல்கள் அனைத்தும் இந்த படித்துறையில் தான் நடைபெறும். மண்டப படித்துறைக்கு நேர் எதிர் திசையில் உள்ள ஆண்கள் குளிக்கும் படித்துறை பள்ளிவாசல் படித்துறை என்று அழைக்கப்படுகிறது.சீதளி குளம் என்பது அதன் கரைகளை ஒட்டி குடியிருந்த எங்களைப் போன்றோருக்கு அன்றாட வாழ்க்கையில் இணைந்த ஒன்றாக இருந்தது. வீட்டு புழக்கத்திற்கான தண்ணீர் எடுப்பது, குளிப்பது மற்றும் நீச்சல் அடிப்பது அதில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு சென்று திரும்பும் சாகசம் முதலானவை இனிமையான அனுபவங்கள், அவை திரும்பக் கிடைக்க பெறாத இனிமையானவை. டோன்ட் டாக் ( don't talk) பற்றி தெரியவில்லை 'ஐ டோன்ட் நோ' வாவா ராவுத்தர் என்ற வியாபாரி திரு. வில் பிரபலமானவர் [01:43, 10/26/2023] Sirajudddin Cell: https://www.facebook.com/share/v/YDQjzuttAvGo9T9z/?mibextid=WC7FNe

[21:30, 10/25/2023] tpr khan son aliar: 12 படித்துறை [21:30, 10/25/2023] tpr khan son aliar: 7 பெண்கள், 5 ஆண்கள்(kan tprr)[18:56, 10/25/2023] SHERFUDDIN P: To be frank எனக்கு தெரியாது வடகரையில் ஆணுக்கொன்று பெண்ணுக்கொன்று என 2 அது மட்டுமே நினைவில் இருக்கிறது நன்றி வாழ்த்துகள் [05:49, 10/26/2023] peer peeyanna s/o ssrivannan: மன்னிக்கவும் மொத்தம் -8 என்பதாக நினைவு.

சிவகங்கை ஒக்கூரை அடுத்த திருமண்பட்டி என்ற இடத்தில் அழகிய பாறைகளைப் பார்க்க முடிந்தது. திருமண்பட்டி - மலம்பட்டி இடையே இந்தப் பாறைகள் ராணுவ நடைபோல கம்பீரமாக அமைந்திருக்கின்றன. மலை போல அமைந்துள்ள இந்தப் பாறைகள் சிவகங்கை மாவட்டம் மதுரை மாவட்டத்தை இணைக்கும் இடமாக உள்ளன. மதுரை மேலூர் வழியாகவும் இந்தப் பாறை பகுதிக்கு வரலாம். ஏரியூர் ஆகாசப் பாறை போல இருக்கும் இந்தப் பாறை அதன் தொடர்ச்சிதான் என்று கூறப்படுகிறது. பெரும் பாறைகள் ஆற்றில் அடித்துச் சென்றது போல் வடிவத்திலும் காற்றின் திசையில் வழிந்தது போலவும் காட்சியளிக்கின்றன.

ஒவ்வொரு பெரும் பாறையும் சிறுவர்கள் கூழாங்கற்களில் அடுக்கியது போல் அழகுறக் காட்சியளிக்கும். குழந்தைகளின் கற்பனையில் பாறை விலங்காகவும் பேயாகவும் பூச்சியாகவும் மேகமாகவும் ஓவியமாகவும் காட்சியளிக்கிறது. வனத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பாறைகள் கொண்ட மலை ஆழ்ந்த அமைதியைத் தருகிறது. பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான இந்த இடம் வர்ணிக்கமுடியாத வரமாகும். இங்கு 3 நபர்கள் நுழையும் அளவுக்கு ஒரு பாறையால் ஆன குகையும் உள்ளது.

பாறை
பாறை

மேலும் பல்வேறு சுனைகளையும் கொண்டுள்ளது. இந்த மலையைச் சுற்றியுள்ள திருமலை, ஏரியூர் மருந்தீஸ்வரர், ஆகாசப்பாறை, ஏரியூர் செட்டிநாடு வீடுகள் எனப் பலவற்றையும் இணைத்து ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றலாம். அறியப்படாத சுற்றுலாவாக இருக்கும் இந்த இடங்களை அதிகாரபூர்வ சுற்றுலாவாக மாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும். இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் சிவகங்கையில் சுற்றுலாத் தலங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்’’ என்றார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர்ந்த உன்னத தத்துவத்தை உலகிற்க்கு தந்த கணியன் பூங்குன்றனார் என்ற சங்ககால புலவர் பிறந்து வாழ்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊர் .எங்கள் ஊர் இது தென்நிந்தியாவில் தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டதில் அமைந்துளது .இந்த தத்துவத்தை அன்றைய பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் ஐ .நாசபையில் உரையாடும் பொழுது தெரிவித்த பொது உலக நாடுகளின் மற்ற அங்கத்தினர்கள் அனைவரும் ஏற்று கொண்டு அதனை ஆங்கிலத்தில் தங்க எழுத்துக்கலால் எழுதி வைத்துள்ளார். இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தின் பொருள் "உலகில் உள்ள எல்லா நாடுகளும் என்னுடைய நாடாகும் சாதி சமய வேறுபாடின்றி என்னுடைய உறவினர்கள் ஆவர் என்பதாகும் "கணியன் பூங்குன்றனார் ஒரு புலவர் மட்டும் இன்றி ஒரு சோதிடரும் மருத்துவரும் ஆவர் கணியன் என்றால் சோதிடர் என்பது பொறுள் . அவர் சங்க காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர் . அவர் நற்றிணை என்ற மற்றோரு நூலில் ஒரு கவிதை இயற்றி உள்ளார். எங்கள் ஊரில் தொடந்து நிறைய புலவர்களும் சோதிடர்களும் இருந்து வந்து உள்ளனர். அவர்களில் தற்சமயம் பெங்களூரில் வசித்து வரும் திரு. மகிபை பா விசைக்கோ என்பவர் குறிப்பிட தகவர்.
கடை சங்க காலத்தில் எங்கள் ஊரை அடுத்து பரம்பு மலையை தலை நகராகக்கொண்ட 300 ஊர்கள் உடைய பரம்பு நாட்டை கடை ஏழு வல்லல்களில் ஒருவரான பாரி என்ற மன்னர் ஆண்டு வந்தார் இந்த பரம்பு நாட்டில் சிறு சிறு நாடுகளை குறு நிலா மன்னர்கள் ஆண்டுவந்தனர் . அவற்றில் ஒன்று 241/2 கிராமங்களையும் நான்கு மங்கலங்களையும் உடையா பூங்குன்ற நாடும் ஒன்று. இந்த பூங்குன்ற நாட்டின் முக்கியமான வழி படு தெய்வம் ஸ்ரீ ஜெயங் கொண்ட நாயகி என்ற பூங்குன்ற நாயகி ஆகும் இந்த பூங்குன்ற நாயகி அம்மனின் ஆலயம் எங்கள் ஊரில் அமைந்துள்ளது. பூங்குன்ற நாயகி அம்மன் மிகவும் சக்தி வாய்நதா கிராம தேவதை ஆவர் இவர் ஒரே சமயத்தில் இரண்டு ஊர்களில் அமர்ந்து ஆட்சி புரிந்து வருகிறார் மற்றோர் ஊர் பாகனேரி ஆகும்.
எங்கள் ஊரில் சிவன் கோவில்கள் இருந்தன தற்போது நான்கு சிவன்லிங்கங்கள் வெளிப்படையாக தெரிகின்றன மூன்று மறைந்து உள்ளன ஒரு சிவன் கோவிலின் பாகங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
எங்கள் ஊரில் அமைந்துள்ள 7 சிவன் கோவில்களையும் சுற்றிவந்தால் இவ் உலகயே சுற்றி வந்ததாக ஐதிகம் என்பது பெரியோர்கள் வாக்கு.
எங்கள் ஊரில் சமணமதமும் தலைத்து ஓங்கி இருந்தது என்பதற்கு சுமார் 5 அடி உயரமுள்ள சமணர் சிலை காணப்படுகிறது.
எங்கள் ஊரில் ஓர் அழகிய சிறு மலை(குன்று) அமைந்துள்ளது அதனால் தான் எங்கள் ஊர் பூங்குன்றம் என்று அழைக்கப்பட்டது இடையில் மகிபாலன் என்ற சிற்றரசன் ஆண்டதால் மகிபாலன்பட்டி என்று மருவியது . அந்த அழகிய குன்றம் தற்சமயம் குடகு மலை என்று அழைக்கப்படுகிறது அம்மலையில் இரண்டு குடவரை கோவில்கள் உள்ளன கல்வெட்டு ஒன்றும் உள்ளது இவற்றை பாண்டிய மன்னர்கள் செய்து உள்ளனர் குடவரை கல்வெட்டில் "பூங்குன்ற நாட்டு பூங்குன்றம் என்று எங்கள் ஊர் குறிப்பிடபட்டுள்ளது. குடவரை கோவில்களில் ஒன்று தர்மலிங்கம் எனப்படும் சிவன் கோவில் ஆகும் மற்றொன்று வலம்புரி விநாயகர் ராகிய விநாயகர் கோவில் ஆகும் பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகரை போன்றே இவ் விநாயகரும் அமைந்துள்ளார் . இரு விநாயகர் களையும் ஒரே சிற்ப்பி வடித்ததாக செவி வழி செய்திகள் கூறுகின்றன.
எங்கள் ஊரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன.
1 . கீழ வயல் சிவன் கோவில்.
2 . பெருமாள் கோவில்.
3 . பூங்குன்ற விநாயகர் கோவில்(நாட்டுப் பிள்ளையார் கோவில்).
4 . பூங்குன்ற திருமுருகன் கோவில்.
5 . மங்கள விநாயகர் கோவல்.
6 . விநாயகர் கோவில்.
7 . ஆதி பராசக்தி கோவில்.
8 . முப்புலி கறுப்பர் கோவில்.
9 . பதினெட்டாம் படி கறுப்பர் கோவில்.
10 . பூங்குன்ற நாயகி அம்மன் கோவில்.
11 . பூங்குன்ற அய்யனார் கோவில்.
12 . முனீஸ்வரர் கோவில்.
13 . தர்மலிங்கம் கோவில்.
14 . வலம்புரி விநாயகர் கோவில்.
15 ஊருணி சிவன் கோவில்.
16 . பிள்ளையார் கோவில்.
17 . சோநயன் கோவில்.
18 . ஆகாச கறுப்பர் கோவில்.
19 . சின்ன கறுப்பர் கோவில்.
20 . ஊர் காவலன் நொண்டிச்சாமி கோவில்.
21 . மண்டு கறுப்பர் கோவில்.
22 . கலுங் கடியன் கோவில்.
23 . பெரிய கறுப்பர் சின்ன கறுப்பர் கோவில்.
24 . மடை க் கறுப்பர் கோவில்.
All reactions:
11

புதுப்பொலிவில் மண் மணம் – திருப்பத்தூர்

17062023 சனிக்கிழமை

தமிழ் நாட்டில் உள்ள  இரண்டு திருப்பத்தூர்களை மதுரை திருப்பத்தூர் என்றும் வாணியம்பாடி திருப்பத்தூர் என்றும் குறிப்பிட்டுக் காண்பிப்போம்.ஆனால் மதுரை திருப்பத்தூர் என்பது திருப்பத்தூரை வைத்து மதுரையை அடையாளம் சொல்வது போல் இருக்கிறதே என்று எண்ண வேண்டாம்     

அத்தாவுக்கு மதுரையில் ஒரு குறுகிய காலப்பணிஎனவே அத்தா அம்மா மதுரையில் இருக்க சகோதரிகளோடு, நானும் திருப்பத்தூரில் பெரியத்தா வீட்டில் தங்கிப்படிப்பதாக ஒரு ஏற்பாடு ..

நாங்கள் எல்லாம் சமாளித்து இருந்து விட்டோம்தங்கை  மட்டும் கத்தியின்றி ரத்தமின்றி  ஒரு விடுதலைப்போர் நடத்தி மதுரை போய்ச்சேர்ந்து விட்டது . ஆகஸ்ட்டில் பிறந்த்ததல்லவா !  

முதல் முறையாக அத்தா அம்மாவைப் பிரிந்த வாழ்க்கைசஹா சிறுவன் என்பதால் மதுரையில் இருந்தான்,

திருப்பத்தூர்பெரியத்தா வீடு எங்களுக்கு மிகப் பழகிய இடம் என்பதால் பெரிய சிரமம் எதுவும் தெரியவில்லைகழிப்பறை ,குளியலறை இல்லாதது கூட பழகி விட்டதுநீச்சல் தெரியா விட்டாலும் சீதேவிக் குளியல் தனி சுகம்தான்.

அஜுமலும் நானும் ஒரே வகுப்பு(ஏழாம் வகுப்பு)ஒரே பிரிவு என்பதால் நல்ல ஒரு நட்பு எங்களுக்குள் உருவானது.

சக்ரவர்த்திவாச்சா பெரியத்தா மகன் ராஜா என் வகுப்புவேறு பிரிவுகள் ஒரே பள்ளி. (அப்போது இருந்ததே ஒரே பள்ளிதான் என நினைவு)

பள்ளியில் டோண்டாக் என்ற செல்லப்பெயருடன் ஒரு ஆசிரியர் இருந்தார். .மாணவர்களைத் தண்டிக்க எண்ணினால் அருகிலிருக்கும் மாணவனைக் கூப்பிட்டு அவன் தலையில் ஓங்கி ஒன்னரைக்கொட்டு கொட்டு என்பார்.. கொட்டு பலமாக விழாவிட்டால் திரும்பவும் கொட்டச்சொல்வார்  

 ஒல்லியாக ஒரு தமிழாசிரியர் ( நாச்சியப்பன் ?) இருந்தார்இரு விரல்களுக்கு இடையில் பேனாவை வைத்துத் திருகுவது அவர் தண்டிக்கும் முறை .

பிரின்ஸ் என்ற பெயரில் ஒரு ஆசிரியர்மாணவர்கள்  அதை தமிழில் மொழி பெயர்த்து  வுக்குப்பதில் சிறப்பு  போட்டு நக்கல் செய்வார்கள் 

வகுப்பு ஆசிரியராக இருந்த ஆங்கில ஆசிரியர் அஜ்மலுக்கும் எனக்கும் ஆறு மாதம் ஆங்கிலத்தில் சிறப்புப் பயிற்சி அளித்தால் பள்ளி இறுதி ஆங்கிலத்தேர்வு எழுதச்செய்யலாம் என்று எங்கள் ஆங்கில அறிவைப் பாராட்டினார்.

திருப்பத்தூரின் அப்போதைய விலை நிலவரம் : இட்லி கால் அணா தேனீர் ஒரு அணாபரோட்டா ஒரு அணாஅளவு சாப்பாடு நான்கு அணா..முட்டை இரண்டு அணா (ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா.. ஒரு ரூபாய்க்கு அறுபத்தி நான்கு இட்லி )

அத்தா அம்மா மாதம் ஒருமுறை திரு வந்து போவார்கள்மதுரையில் தல்லாகுளம் தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சியில் மக்கள் பார்வைக்காக ஒரு மாதிரி இல்லம் கட்டியிருந்தார்கள்அத்தா அம்மா அந்த வீட்டில் வசித்து வந்தார்கள்.                                        

 உசேன் அண்ணன் ஊர்தி ஓட்டுனர்பார்வையிலும் சொற்களிலும் பாசத்தைப் பொழிவார்.. சய்யது சச்சா மதுரை ஈனா கடையில் பணியாற்றியது . அவ்வப்போது பணி நிமித்தமாகவும் சும்மாவும் வீட்டுக்கு வரும்.  

 பட்டர்ப்லை மண்ணெண்ணெய் அடுப்பு ஒரு புதுமையான வடிவில் வந்ததை சச்சா கடையிலிருந்து .கொண்டு வந்து செயல் விளக்கம் அளித்தது.

 ஒரு பெரிய கண்ணாடிகுடுவையில் மண்ணெண்ணெய் ஊற்றி கவிழ்த்து வைத்தால் எண்ணெய் சொட்டுச்சொட்டாய் இறங்கி எரிவாயு அடுப்பு போல் ஊதா நிறமாக சீராக எரியும்

திருப்பத்தூரில் கல்வியாண்டு முடிந்து நாங்கள் விடுமுறையில் மதுரை போனோம். அப்போது நிறைய விருந்தினர்கள் – மாணவப்பருவத்தினர் வந்திருந்ததாக நினைவு.

நினைவில் வருபவர்கள் லியாகத் அலி அண்ணன்,, சின்னபொட்டு அக்கா மக்கள்சி ஹெச்  அண்ணன் மகன் ஸ்டாலின். .. ஸ்டாலின் ஊருக்குபோகும்போது  அம்மா அவர்கள் வீட்டுக்கு ரவை லட்டு செய்து கொடுத்து அனுப்பியது. அதை ஸ்டாலின் வெகு நாட்களாக பெருமையாக சொல்லிகொண்டிருந்தார்

 .

மதுரையில் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய கிளப் இருந்தது. அதில் ஸ்னூக்கர் விளையாட்டைப் பார்த்திருக்கின்றோம்...

திருப்பத்தூரில் மார்கழி மாதத்தில் கோயிலில் அதிகாலையில் திருப்பாவை திருவெம்பாவை ஒலிபரப்புவார்கள். சீதேவித் தண்ணீரில் எதிரொலித்து கேட்கும் ஓசை மிக இனிமையாக இருக்கும்.

நாங்கள் திருவில் இருக்கும்போது ஜமால் அண்ணனுக்கு விமானப்படையில் பணி நியமன ஆணை வந்தது.                                  

  கருத்தக்கிளி அண்ணன் வானொலி தொழில் நுட்பப் பயிற்சிக்காக காரைக்குடி போய்வரும். .                                                  சரிவண்ணன் ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றியது.

மாமா மகன் சக்ரவர்த்தி சொல்லாற்றல் செயலாற்றல் வணிக ஆற்றல் எல்லாம் நிறைந்தவர். தொழில் முனைவர் அல்லது வணிகராகப் பெரிய அளவில் வராமல் முடங்கிப்போனது ஏன் என்று தெரியவில்லை .

திரு வாழ்க்கையின் அடுத்த பகுதி கால் நூற்றாண்டுக்குப்பின்

 எனக்கு சிவான் (பீகார்) கிளைக்கு மாறுதல் வந்தபோது,. சிவானில் பிள்ளைகள் படிக்க தகுந்த பள்ளிகள் இல்லாததால் குடும்பத்தை திருவில் விட்டு நான் மட்டும் சிவான் சென்றேன்.

.என் நாற்பது ஆண்டு வங்கிப்பணியில் தொடர்ந்து அறுபத்தியொன்பது நாள் விடுப்பு எடுத்தது அப்போதுதான். இது பற்றி சிவன் அல்ல சிவான் என்ற தலைப்பில் ஓரளவுக்கு சொல்லியிருக்கிறேன்.

 நீண்ட விடுப்பில் இருந்ததால் வேலை போய்விட்டதோ என சில நெருங்கிய உறவினர்கள் கேலி பேசினர் மாமா ,குப்பிசிராஜுதீன் மிக அக்கறையுடன் குடும்பத்தைப் பார்ததுக்கொண்டனர் ..

அடுத்து ஜலந்தரிளிருந்து தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி வருகையில் பத்தாம் வகுப்பில் இருந்த பைசலுக்கு நாங்கள் இருந்த மங்கலப்பட்டியின் அருகிலுள்ள பள்ளியில் இடம் கிடைக்காததால் திரு . அப்சா பள்ளியில் சேர்த்தோம். மாமா வீட்டில் தங்கிப்படித்தான். பள்ளி தலைமை ஆசிரியர் திரு ராதாகிருஷ்ணன் பைசல் மேல் தனிகவனம் செலுத்திப் பார்த்துக்கொண்டார்.. ஆறுமுகம் பிள்ளை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்காகத துவங்கிய கல்வி நிறுவனங்கள் – மழலை வகுப்பு முதல் கல்லூரி வரை- திரு மக்கள் கல்விக்குப் பேருதவியானன. .

திரு சொந்த ஊர் என்றாலும் எனக்கு அடுத்த தலைமுறையில் பலருக்கு அந்த ஊரைப்பற்றி ஒன்றும் தெரியாது. அதற்கு அடுத்த தலைமுறையில் பலர் திருவைப்பார்த்தே இருக்க மாட்டர்கள்.

அவர்களுக்காக சொந்த ஊர் பற்றி எனக்குத் தெரிந்தகேள்விப்பட்ட (சில) செய்திகளைப் பதிவு செய்கிறேன்

திரு.தட்ப வெப்பம் உடல் நலத்துக்கு மிக மிக ஏற்றது. அங்கு இப்போது போனால் கூட நல்ல பசியையும் தூக்கத்தையும் உணரலாம்..

அதனால்தான் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவ மனை திரு.வில் அமைக்கப்பட்டது. மிகக்குறைந்த கட்டணத்தில் சிறப்பான வைத்தியம் செய்த அந்த மருத்துவ மனை அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்..பைசல்,பாப்டி அங்கேதான் பிறந்தார்கள்.அந்த மருத்துவமனை இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை 

திருவின் முதன்மையான பகுதி சீதேவி வடகரை, .அங்கேதான் எங்கள் வீடு இருந்தது,.அதோடுபெரியத்தா வீடுசச்சா வீடுமாமா வீடு ,சரிவு மாமா வீடுகட்டிடம் என்று பெயர் பெற்ற எஸ்.ஐ. மன்சில்ரஹ்மத்தலி அண்ணன் பூர்விக வீடுதாசில்தார் பெரியத்தா வீடுஎல்லாம் அதே தெருவில்தான் அதை ஒட்டிய சந்தில் கருப்புத்தொப்பி மாமா (பஷீர் அத்தா) வீடுபாப்பா மாமனார் வீடு.                                          

  கட்டிடத்தில்தான் அந்தப்பகுதியில் முதலில் மொசைக் தரை வந்தது என்று சொல்வார்கள்.. விசாலமான அந்தக்கட்டிடம் உறவினர்களுக்கு ஒரு திருமண மண்டபமாகப பயன் பட்டது .என் திருமணம்சஹா திருமணம் அங்கேதான் நடைபெற்றது..                                               

  கோடையில் பலருக்கு அது தூங்குமிடமாகவும் பயன்பட்டது.

திருவில் குடும்பங்களுக்கும் நபர்களுக்கும் வழங்கிய சில பட்டபெயர்கள்(யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை)            

 முனுசு அம்பலார் வீடுஒரு வண்டி பேத்திகொரங்கன் பேத்தி, , குட்டை அம்பலம்குதாம்புபொக்காகுருதைதவுட்டுப்பாத்துதகரப்பாத்துபூலாங்குறிச்சி அத்தம்மா ,கருப்புத்தொப்பி மொளகு தண்ணிமொசபல்லுக்கடிச்சா சூத்தக்கத்திரிக்காகொடிக்கா கிழவன் கொன்னையூர்க்கிழவன் ,பட்டதட்டிகெளுத்தி மீசை,நீலப்பெட்டி  (பெரும்பாலும் காரணப்பெயர்கள்)                                                   

 பதவி சார்ந்து கமிசனர்தாசில்தார்கணக்குப்பிள்ளை போன்ற பெயர்கள்.

இதில் முனுசு அம்பலார்,, கமிசனர்எங்கள் குடும்பத்துக்கான பெருமை மிகு பெயர்கள் .

முனுசு என்பது கிராம முன்சீப் என்பதன் திரிபு என்பர். ஊர் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் பொறுப்பு எங்கள் குடும்பத்துக்கு .

ஒரு முறை எங்கள் ஐயா மீது ஒரு புகார் வரஉடனே தலைமைபதவியிலிருந்து இறங்கிவேறு ஒருவரை அந்த வழக்கை விசாரிக்கச்சொல்லி தன் மேல் குற்றம் இல்லை என்பது நிருபனமானபின் தலைமைப்பதவியை ஏற்று நீதியை நிலை நாட்டியது ஒரு வரலாறு  .

பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் பதவியும் எங்கள் குடும்பத்துக்கே . காலப்போக்கில் இது மாறி விட்டது

அத்தா நகராட்சி ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற  சில காலம் கழித்து திரு.பெரிய பள்ளி ஜமாஅத் தலைவர் பொறுப்பு வகித்தபோது மலேசியா பாங்காக் நாடுகளுக்குப் போய் பெருந்தொகை பள்ளிக்காக கொண்டு வந்தது ஒரு. சாதனை

ஜவஹர்லால் நேரு திரு. வந்தபோது அவருக்கு மாலை அணிவித்த பெருமை எங்கள் ஐயாவுக்கு உரியது. அதை ஒரு புகைப்படம் எடுக்ககூட யாருக்கும் தோன்றவில்லை

 .ஐயா பெயர் காதர் அம்பலம்.

ஐயா பேருந்து சேவை நடத்தியதாகவும் அத்தா சொல்லக் கேள்வி.

அத்தா அண்ணாமலையில் கௌரவ பட்ட இறுதி வகுப்பு (B.Sc., Honours) படிக்கையில் ஐயா காலமாகிவிட்டார்கள்.அத்தா எங்கள் ஊரின் முதல் பட்டதாரிமுதல் அரசிதழ் பதிவு அதிகாரி (gazetted  officer). எங்கள் உற்றார் உறவினர்களில் முதல் ஹாஜியும் அத்தாதான் என நினைவு.. அத்தாவின் செல்லப்பெயர் சின்னதுரை

.

அத்தம்மா பெயர் மீராம்பீவி. நல்ல ஞானி அவர் உயிர் பிரியும்போது அவரிடமிருந்து ஒரு ஒளி புறப்பட்டுப் போனதாய்ச் சொல்வார்கள்

அம்மாவின் அத்தா மாங்குடியார் என்றும் கொன்னையூர்க் கிழவன் என்று அழைக்கப்படும் பீர் முகமது .எளிதில் சினம் கொள்பவர்கடுகடுப்பவர் என்று சொல்வார்கள்ஒரே ஒரு முறை அவர் வீட்டுக்குப் போனேன். மிக அன்பாக உபசரித்து இட்லியும் சிகப்புச் சட்னியும்  சாப்பிடச் சொன்னது

நினைவிருக்கிறது .

அவர் ஒரு நாள் லொகர் தொழுகை முடித்து வீட்டுக்கு வருகையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு குழந்தைக்கு லொகர் வாச்சா என்று பெயர் வைத்து விட்டாராம்.

நோயென்று படுக்காமல் நடமாடிய நிலையிலேயே அவர் உயிர் பிரிந்ததாய்ச் சொல்வார்கள்.

சீதேவி ஊரின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கியது .நான்கு கரைகளும் எட்டுப் படித்துறைகளும் கொண்டது. ஊர் மக்கள் குளிக்கதுவைக்க பாத்திரம் கழுவ உடல் சுத்தம் செய்யகோயில் யானை குளிக்க  என்று பல்முனைப்பயன்பாடு.

 திருவில் பிறந்து வளர்ந்த எல்லோருக்கும் நீச்சல் தெரியும் (சையது சச்சா விதிவிலக்கு)..மழை காலத்தில் சீதேவி நிரம்பிவிட்டால் அந்த ஆண்டு முழுதும் தண்ணீர் பற்றாக்குறை வராது . படிகள் முடியும் இடத்தில் ஒட்டுப்படி ஓன்று இருக்கும் அதைதாண்ட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்வது போல்.                     

.ஈனா தோட்டபைப் இனொரு நீர் ஆதாரம் எஸ் இப்ராஹீம் மாமா  அவர்களின் வயல்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்ட கிணறும் மோட்டரும் மக்கள் குளிக்க்கப்பயன் படும் விதமாகா பெரிய தொட்டியுடன் அமைக்கபட்டிருந்தது..இப்போது அதுவும் பயன்பாட்டில் இல்லை என கேள்வி..

எளிய முறையில் வாழ்வைத் துவங்கி இடைவிடாத உழைப்பால் ஒரு பெரிய வணிகராகவும் தொழில் முனைவராகவும் உயர்ந்த ஈனா (எஸ். இப்ராஹிம்) மாமா தன் நிறுவனமாகிய ஈனா கடை (எஸ் .ஐ அண்ட் கோ) யின்  சென்னைமதுரைகாரைக்குடிதிருநெல்வேலி பெங்களூர் ,திருவனந்தபுரம் கிளைகள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கினார். ஊழியர்களுக்கு அருமையான உணவு ஈனா  கடையின் சிறப்பு அம்சம்..

ஈனா மாமா அம்மாவின் ஓன்று விட்ட அண்ணன்; . அவருடைய ஐந்து மகன்களில் நான்காமவர் மைத்துனர் எஸ் ஐ பீ என்று அழைக்கப்படும் பீர் அண்ணன் ( அக்காவின் துணைவர் ) மூத்தவர்  எஸ் ஐ எஸ் (சம்சுதீன் அண்ணன் )- தம்பி சஹாவின் மாமனார் .மூன்றாமவர் உயர் காவல் அதிகாரியாகப் பணி மூப்புப்பெற்ற டி ஐ ஜி ஜாபர் அலி அண்ணன் .

ஈனா .மாமாவை ஒரு முறை அத்தாவுடன் சென்று பார்த்த நினைவு. படுக்கையில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த அவர் என்னை அன்புடன் மாப்ளே என்று அழைக்க நான் கூச்சத்தால் நெளிந்தேன்

சாமாங்குளம்கல்வெட்டு மேடு ,மருதநாடி இவை திரு.வின் குடிநீர் ஆதாரங்கள் ..  சாமாங்குளம்  பேருக்கேற்றாற்போல் சாமானிய மக்கள் பயன்படுத்தியது.

செம்மை நிறத்தில் இருக்கும் தண்ணீரை தேத்தான்கொட்டையை வைத்து சுத்தம் செய்தால் தெளிவாகிவிடும். வேதிப்பொருள் கலப்பில்லாத எளிய சுத்திகரிப்பு முறை. (தற்போதைய கண்டுபிடிப்பு –தேத்தான் கொட்டை உடலுக்கு வலிமை கொடுத்துசர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த கொட்டை).

மற்ற இரண்டும் தொலைவு காரணமாகவும். அவற்றின் சுவையான நீரினாலும் விலை அதிகம் .வீட்டிற்கு வரும் சிறப்பு விருந்தினருக்கு மட்டுமே வழங்கப்படும்.

மழை நீரையும் சேமித்து பல மாதங்களுக்கு பயன்படுத்தவதுண்டு. பொதுவாக திரு.வில் நல்ல மழை பெய்யும். பெரியத்தா வீட்டிற்கு எதிர்த்தாற்போல் சீதேவிக்கரையில் இருந்த ஒரு பெரிய புளிய மரம் புயல் மழையில் விழுந்து விட்டது 

விவசாயத் தேவைக்காக ஒரு பெரிய கண்மாய் மதுரை சாலையில் இருந்தது. அது கோடையில் அழியும்போது( வற்றும்போது) ஏராளமாக விரால்  மீன் விலை மலிவாகக்கிடைக்கும். அந்தப் பருவத்தில் பெரும்பாலான வீடுகளில் மீன் சாப்பாடு கமகமக்கும். கோடைக்காலம் என்பதால் நிறைய மாம்பழம் கிடைக்கும். ஈக்களுக்குக் கொண்டாட்டம்

சிறிய ஊராக இருந்தாலும் சுவையான உணவு மலிவாகக்கிடைக்கும். ராசாக்கிலி கடையில் நெய்.புரோட்டா சிறப்பு அம்சம். சாப்பிட வருபவர்கள் நெய் புரோட்டா வேண்டும் என்று சொன்ன பிறகுதான் நெய் வாங்க ஆள் அனுப்புவார்கள் .

 மாதவன் கடையின் சிறப்பு ரொட்டி குழம்பு . சைவத்துக்கு மதகு பட்டி உணவு விடுதி . இது போக சாலை ஓர விடுதிகளில் இட்லிஇடியாப்பம்ஆப்பம் ,குழிப்பணியாரம் நல்ல சுவையுடன் மிக மலிவாகக்கிடைக்கும் .

.கரீம் அண்ணன் பெட்டிகடை  அந்தப்பகுதிக்கு  ஒரு பேரங்காடிகமர்கட்சோத்து முறுக்கு,கோகோ அச்சு  மாம்பழம்சவக்காரம் .நீல சோப்பு எனப்பலபோருட்கள் கிடைக்கும். வண்டுண்ட மாம்பழம் அந்தக் கடையின் சிறப்பு

. தெருவில் விற்கும் பருத்திப்பால்சேமியா பாயாசம் சுவையாக இருப்பதாய்ச் சொல்வார்கள்

 .

விருந்துகளில் தாளிச்சோறுபொடிக்கறிக்குழம்புகாய்க்குழம்பு வழமையான மெனு காலையில் இட்லி வடை கேசரி சாம்பார் சட்னி . ஐந்தாறு இட்லியை உடைத்துப்போட்டு அணைகட்டி அதற்குள் சாம்பாரை ஊற்றி சுவைக்கும் அழகைப்பார்த்தாலே வயிறும் மனதும் நிரம்பிவிடும்

சோறை சிறிய மலைபோல் குவித்து உச்சியில் ஒரு பள்ளம் தோண்டி அதில் குழம்பை ஊற்றி மெதுவாக சுவைத்துச் சாபிடுவது ஒரு கலை ,

ஹோட்டல் பரோட்டாவை “பிச்சுப்போட்டு (குருமாவில்) ஊற வைத்து “ உண்பது தனி சுவை 

மண்ணில் விளையாடும்போது காக்கப்பொன் என்று அழைக்கப்படும் மைக்கா என்ற கனிமப்பொருள் சிறிய துண்டுகள் கிடைக்கும். இந்த மைக்காவை அடிப்படையாக வைத்து ஒரு பெரிய தொழிற்சாலை வரப்போவதாக பேச்சு அடிபட்டது .

திருவின் சிலபாத்திரங்கள் பற்றி சொன்னால்தான் இந்தப்பகுதி முழுமை அடையும்.

  பெரியத்தா – அத்தாவின் அண்ணன்(சாகுல் ஹமீது) –அதற்குரிய மரியாதையை மதிப்போடுதான் எண்ணுவோம். தெருவை ஒட்டிய அவர்கள் வீட்டுக்கூடத்தில் சுகமாக சோபாவில் சாய்ந்தபடி போவோர் வருவோரை குரலை உயர்த்தாமல் கிண்டல் கேலி செய்வதில் வல்லவர் . ஒரே ஒரு எடுத்துக்காட்டு

“ ஏண்டா  ரொம்பவா நொடிச்சுப்போயிட்ட “

“ ஏமாமு நல்லாத்தான இருக்கே(ன்). ஏ(ன்இப்படி கேக்கிறைய “”

“ இல்ல விடாமத் தொளுகப்போரையே அதாங் கேட்டேன் “

(சொற்களை மட்டும்தான் இங்கே வெளியட முடியும். அந்த குரல் ஏற்ற இறக்கம் முகபாவம் ,உடல் மொழி அதெல்லாம் மனதில் உளது எழுத்தில் வடிக்க முடியாது )

** சையது சச்சா –அத்தாவின்  தம்பி,. தனியே ஒரு நூல் எழுதும் அளவுக்கு சாதனைகள் சாகசங்கள் .சச்சா நுங்கு சாப்பிடும் அழகே தனி. நுங்கில் ஒரு துளி கூட தோல் இல்லாமல் நுங்கும் உடையாமல் பளிங்கு போல் எடுத்து பொறுமையாகச் சுவைக்கும்  .தன்னந்தனியாக வாழ்ந்த சச்சாவின் மறைவுக்கு உற்றார் உறவினர் பலரும் திரண்டு பல ஊர்களில் இருந்தும் வந்தது சச்சா எல்லோரிடமும் காட்டும் உண்மையான பாசத்தின் எதிரொலி

*** பீயன்னா மூனா மாமா – அம்மாவின் அண்ணன் . நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை .உரத்தகுரலில் கலகலவென்று நகைசுவையோடு பேச்சு கதைகள்.குழந்தைத்தனமான உற்சாகத்துடன் வேலை செய்வது        .

ஜமீலா குப்பி- அத்தாவின் தங்கை – ஏழு வயதிலேயே தொழுக ஆரம்பித்து ஞான வழிஆன்மீகத்தில் இறங்கியவர் .சமையல் கலையிலும்  உலக அறிவிலும் வல்லவர் 

****அமீர் குப்பி (கோட்டையிருப்புக் கணக்கபிள்ளை) .அத்தாவின் தங்கை. திருவிளிருந்து ஐந்து கி மி தொலைவில் உள்ள கோட்டையிருப்புக்கு .ஓரிரு   முறை போய் வந்திருக்கிறேன்,கிராமிய மணத்துடன் சுவையான உணவும் மனமார்ந்த உபசரிப்பும் கிட்டும்.குப்பி மகன்  லியாகத்தலி அண்ணன் (ஜோதி அக்கா) வயதில் மூத்தவரானா.லும்  நெருங்கிய பழக்கம் . அந்தப்பழக்கதிலே பல நாள் வா(டா) போ(டா) என்று அழைத்தேன் யாரோ சுட்டிக்காட்டித் திருத்தும் வரை

*****உற்றார் உறவினரை அரவணைத்து உபசரிக்கும் ஆசா பெரியம்மா (ஈனா மாமாவின் உடன் பிறப்பு?) அதிகாரமான கம்பீரமான குரல்அதே போல் உடல் வாகு . வெற்றிலை போட்டு துப்பும்போது  சற்றுத் தொலைவில் உள்ள பணிக்கத்துக்கும் வாய்க்கும் ஒரு பாலம் அமைத்தது போல் சிந்தாமல் சிதறாமல் குறிதவறாமல் துப்புவது அவருடைய தனித்திறமை

******கலகலவென்று நகைச்சுவையாகப் பேசும் சீ ஹெச் (ஹமீது அண்ணன்) .தீவிர அரசியலில் இருந்தும் பெரிதாக சம்பாதித்து இல்லை . அவர் தம்பி.   ரஹ்மத்தலி அண்ணன்-,எங்கள்  தங்கை    திருமணத்திற்காக முழு முயற்சி செய்தார்

.தொடரின் இப்பகுதியை நிறைவு செய்யுமுன் திரு. தமிழ் பற்றி சில வரிகள்.:

எங்கள் ஊர் வாசிகள் பச்சைதமிழர்கள். அசந்து மறந்து கூட ஷஜ ,ஹ போன்ற வடமொழி உச்சரிப்புகள் வாயில் வராது .ராஜா ராசாதான். மக்கா ஹரம் அரம்தான்.சம்சுதீன் சம்சுதான் .ஷஹா சகாதான்

பெயர்த்திரிபுகள் எங்கள் ஊரின் ,தனிச்சிறப்பு  மைமூனாத்  மைம்பொண்ணு. . கதிஜா –கத்துசா

சென்ற பகுதி பற்றி கருத்துக்கள் ,பாராட்டுகள் தெரிவித்த ராஜாபாப்டி ஷேக்  சகோதரிகள் ஜோதி ,சுராஜ் எல்லோருக்கும் நன்றி .

குட்டவில் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதால் இந்தப் பயணத்தொடர் நிறைவுற்றது என்ற எண்ணத்தில் மங்களப்பட்டிதுறையூர்கேரளா பற்றி எழுதவில்லையே என சேக்ராஜா ஜோதியக்கா கேட்திருந்தார்கள் . நான் சென்ற பகுதியில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்- பயணம் இன்னும் முடியவில்லை . இறைவன் நாடினால் இன்னும் பல மாதங்களுக்குத் தொடரும் .

இ(க)டைச்செருகல் :

சென்ற பகுதியில் ஒரு ஆங்கில வாக்கியம் கொடுத்து அதன் சிறப்பு என்ன என்று கேட்டேன். இது வரை பதிலேதும் வரவில்லை. எத்தனை பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை .

அந்த வாக்கியத்தில் முதல் சொல் ஒரு எழுத்து கொண்டது .அடுத்த சொல் இரண்டு எழுத்து அடுத்து மூன்ற என்று எழுத்து எண்ணிக்கை ஓன்று ஒன்றாகக் கூடிக்கொண்டே போகும் . நான் போன பகுதியில் வெளியிட்டது ஒரு பெரிய வாக்கியத்தின் ஒரு பகுதி . முழு வாக்கியம்(நன்றி ஹிண்டு )   

"I do not know where family doctors acquired illegibly perplexing handwriting; nevertheless, extraordinary pharmaceutical intellectuality, counterbalancing indecipherability, transcendentalises intercommunications' incomprehensibleness."

இது போன்ற வாக்கியங்கள் rhopalic என அழைக்கப்படும் தமிழில் இது போன்ற அமைப்பில் வாக்கியங்கள் பற்றி தெரிந்தவர்கள் சொல்லலாம்

இறைவன் அருளால்                                                                                                          பயணம் தொடரும்

வலை நூலில் படிக்க கூகிள் தேடுதலில்

sherfuddinp.blogspot.com

.

  .

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 19 .மதுரை(திருப்பத்தூர்) என்ற தலைப்பில் 15 07 2016 அன்று வெளியானதின் மறு பதிவு சில சிறிய மாற்றங்களுடன்

1AAAAAAAAAAAAAAAAAAA

[

VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV

[10:32, 11/13/2023] Jothy Liakath: அவசரம் ஒன்றுமில்லை

என்றால் இன்னும்

கொஞ்சம் யோசித்து

எழுதுகிறேன்.

XXXXXXXXXXXXXXXXXXX

திரு –

 VVVVVVVVVVVVVVVWWWWWWWWW

sharmathaa 29012024

நான் அறிந்த திருப்பத்தூர் 2ம்பாகம்.

திருப்பத்தூரில் பிறந்து வளர்ந்து திருப்பத்தூரில்

வாழ்ந்தவர்களுக்கு சீதேவியும் அவர்களுடன் ஒன்றிப்போன ஒரு விஷயமாகத்தான் இருந்தது.

       அது மாதிரியான சீதேவியில் என் அனுபவத்தில் நடந்த சில சம்பவங்களை இங்கே நினைவு கூர்கிறேன்.

     சீதேவியில் அதிகாலை நான்கு மணிக்கே (பெரிய மனுஷியான)பெண்கள்

குளிக்கத்துவங்கி விடுவார்கள்.துணியை அடித்து துவைக்கும் சத்தம் கேட்டு ஆழ்ந்த 

உறக்கம் கொண்டிருப்பவர்களும் விழித்து விடுவார்கள்.

          இந்த மாதிரி அதிகாலை நேரத்தில்

எங்கள் அக்காவும் அதற்குப்பிறகு நான்

குளித்துவிட்டு வருவோம்.

    ஒருமுறை நான் குளிக்கும் பொழுது என் காதில் போட்டிருந்த சிமிக்கி கழன்று தண்ணீரில் காணாமல் போய்விட்டது.

அதை எங்கள் அம்மா கோட்டையான் வீட்டு அம்பர் சச்சா மகன் ஜாபர் அண்ணனிடம் சொல்லி தேடிப்பார்க்க

சொன்னது.அப்போது கொஞ்சம் தண்ணீர் வற்றியிருந்த காலம்.

அவரும் நீரில் மூழ்கி 

கீழேயுள்ள மண்ணை 

சல்லடையில் அள்ளி சலித்து சலித்துப்பார்த்து 

காணாமல் போன சிமிக்கியை கண்டெடுத்துக்கொடுத்தார்.கடலில் மூழ்கி முத்தெடுப்பதைபோன்று இதுவும் ஒரு அதிசய

நிகழ்வாகத்தான் இருந்தது.

சீதேவி முழுவதுமாக

வற்றி சிறிதளவே தண்ணீர் கிடக்கும்

காலங்களில் பலரும்

இது போன்று மண்ணை சலித்து ஏதாவது கிடைக்கிறதா என்று 

தேடிப்பார்ப்பார்கள்.

கிடைக்கிறவர்கள் எடுத்துச்செல்வார்கள்.

         இவ்வாறாக பகல் முழுவதும் கூட்டமாக இருந்து கொண்டிருக்கும் சீதேவி 

மாலை நேரமானால்

அமைதியாகிவிடும்.

அந்த நேரங்களில் பாம்புகள் தண்ணீருக்கு மேலே வந்து தலையை நீட்டிக்கொண்டுமிதந்து கொண்டிருக்கும்.

இவ்வாறு சீதேவியில்

பாம்பு ஒருமுறை விரலில் கடித்துக்கொண்டி தொங்கிய அனுபவத்தை எங்கள்

அம்மா சொல்லியிருந்தது.

தண்ணிக்குள்ளே சேலை உடுத்திக்கொண்டு வருபவர்கள் உடன் பாம்பையும் சேர்த்து சுற்றி  ஏதோநெளிவதை உணர்ந்து படித்துறையில் உதறிவிட்ட

சம்பவங்களும்

நிகழும்.

இப்படி சீதேவின் இக்கறை(வளகாரப்படித்துறையின் எதிரில் எங்கள் வீடு, வீட்டின் வாசற் படியில் நின்றே அக்கறையில் அதாவது பஸ்ஸ்டாண்டில்இருந்து 

வருபவர்களை பார்த்து

விடலாம்.அந்த மாதிரி 

அக்கறையிலிருந்து 

வருபவர்களை இக்கறையில் உள்ளவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.இதுபோன்று இன்னும் நிறைய சிறப்புகள் சீதேவிக்கு இருந்தது.இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் இன்னும் சில

நினைவுகளுடன்

SZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ

நான் அறிந்த திருப்பத்தூர் 2ம்பாகம்.14022024

திருப்பத்தூரில் பிறந்து வளர்ந்து திருப்பத்தூரில்

வாழ்ந்தவர்களுக்கு சீதேவியும் அவர்களுடன் ஒன்றிப்போன ஒரு விஷயமாகத்தான் இருந்தது.

       அது மாதிரியான சீதேவியில் என் அனுபவத்தில் நடந்த சில சம்பவங்களை இங்கே நினைவு கூர்கிறேன்.

     சீதேவியில் அதிகாலை நான்கு மணிக்கே    குமரிப்பெண்கள்

குளிக்கத்துவங்கி விடுவார்கள்.துணியை அடித்து துவைக்கும் சத்தம் கேட்டு ஆழ்ந்த உறக்கம் கொண்டிருப்பவர்களும் விழித்து விடுவார்கள்.

          இந்த மாதிரி அதிகாலை நேரத்திலஎங்கள் அக்காவும் அதற்குப்பிறகு நான்

குளித்துவிட்டு வருவோம்.

    ஒருமுறை நான் குளிக்கும் பொழுது என் காதில் போட்டிருந்த சிமிக்கி கழன்று தண்ணீரில் காணாமல் போய்விட்டது.

அதை எங்கள் அம்மா கோட்டையான் வீட்டு அம்பர் சச்சா மகன் ஜாபர் அண்ணனிடம் சொல்லி தேடிப்பார்க்க

சொன்னது.அப்போது கொஞ்சம் தண்ணீர் வற்றியிருந்த காலம்.

அவரும் நீரில் மூழ்கி கீழேயுள்ள மண்ணை சல்லடையில் அள்ளி சலித்து சலித்துப்பார்த்து 

காணாமல் போன சிமிக்கியை கண்டெடுத்துக்கொடுத்தார்.கடலில் மூழ்கி முத்தெடுப்பதைபோன்று இதுவும் ஒரு அதிசயநிகழ்வாகத்தான் இருந்தது.

சீதேவி முழுவதுமாகவற்றி சிறிதளவே தண்ணீர் கிடக்கும்

காலங்களில் பலரும்இது போன்று மண்ணை சலித்து ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிப்பார்ப்பார்கள்.

கிடைக்கிறவர்கள் எடுத்துச்செல்வார்கள்.

        ஒரு வாரம் பத்து நாள்கள் துவைக்காமல் துணிகளை சேர்த்து வைத்து சீதேவியில் உறவுகளையும் நண்பர்களையும் சந்தித்து பேசிவிட்டு 

மிக இலகுவாகத் துவைத்து காயவைத்தும் எடுத்துக்கொண்டு போவதுண்டு.

         இவ்வாறாக பகல் முழுவதும் கூட்டமாக இருந்து கொண்டிருக்கும் சீதேவி 

மாலை நேரமானால்அமைதியாகிவிடும்.

அந்த நேரங்களில் பாம்புகள் தண்ணீருக்கு மேலே வந்து தலையை நீட்டிக்கொண்டுமிதந்து கொண்டிருக்கும்.

இவ்வாறு சீதேவியில்பாம்பு ஒருமுறை விரலில் கடித்துக்கொண்டு தொங்கிய அனுபவத்தை எங்கள்அம்மா சொல்லியிருந்தது.

தண்ணிக்குள்ளேயே சேலை உடுத்திக்கொண்டு வருபவர்கள் உடன் பாம்பையும் சேர்த்து சுற்றி  ஏதோநெளிவதை உணர்ந்து படித்துறையில் உதறிவிட்ட சம்பவங்களும்நிகழ்ந்தன. 

நாங்கள் மகாராஷ்டிராவில் இருந்து வருடம் ஒருமுறை விடுமுறை காலங்களில் திரு வந்துதங்கியிருப்போம்.

அப்போது எங்கள் மகள்நிலோ சிறு பிள்ளையாகஇருந்தது.நாங்கள் குளிக்கப்போவதைப்போல் நாங்கள் பார்க்காத நேரத்தில் 

ஹிந்தியில் கப்டா(துணி) ,பாத்லி (வாலி),சாபுன் (சோப்பு)

கப்டா ,பாத்லி,சாபுன் என்று சொல்லிக்கொண்டு தண்ணீருக்கு மேலே உள்ள படித்துறையில் துவைத்துக்கொண்டிருந்ததைக்கண்டு அதிர்ந்துபோய் வீட்டிற்கு கூட்டிப்போய் அச்சுறுத்திவைத்தோம்.

 சீதேவின் இக்கறை(வ லகாரப்படித்துறை)யின் எதிரில் எங்கள் வீடு, வீட்டின் வாசற் படியில் நின்றே  எங்கள்  பெரியஅண்ணன் ஊரிலிருந்து வருவதைப் பார்த்து விடுவோம்

.இதேபோல்எங்கள் அத்தா சனிக்கிழமை இரவு நேரத்தில் அக்கறையில் வந்து கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டில் கட்டிக்கிடக்கும் ஆடு அத்தா நடந்து வரும் செருப்புச்சத்தத்தை கேட்டு கத்தி  அத்தா வருவதை எங்களுக்கு தன் பாசத்தால்  உணர்த்தும்.இவ்வாறு

சீதேவியில் குளித்தகாலங்கள் மகிழ்ச்சியானவை.

      ஒரு முறை சிராவயல்மஞ்சு விரட்டு பார்ப்பதற்காக பீர் அண்ணனும நானும்

சைக்கிளில் சென்றோம்.

அப்படி போய்க்கொண்டிருக்கும்போது யாருமே நடமாடாத அமைதியாக இருந்த அந்த ரோட்டில் நானும் அண்ணனும்வேகமாக சென்று கொண்டிருக்கும் போது  மஞ்சுவிரட்டில் பிடிபடாத காலை ஒன்று வேகமாக வந்து கொண்டிருக்க அதைக் கண்டு பயந்த நான் அண்ணனிடம் திருப்பிப்போக வேண்டும் என்று அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் வீட்டிற்கு கூட்டிச் சென்றது. இவ்வாறு அன்று காணமுடியாத மஞ்சுவிரட்டு இன்றுவரைநேரில் காணமுடியாததாகி விட்டது.

SI&Co வில் எங்கள் அத்தா மேனேஜராக  இருந்த காலத்தில் புதுக்கணக்கு போடும்நாளில் நானும் சிராஜ் அண்ணனும் காரைக்குடிக்குச் செல்வோம்.அப்போதுநாங்கள் நின்று கொண்டிருக்க எங்களை சாமான் வாங்க வந்திருப்பவர்கள் என்று எண்ணி கடையில் வேலை செய்த முஸ்தபா அண்ணன் இன்று வியாபாரம் இல்லை என்று சொல்ல பிறகு அத்தா எங்களைப்பார்த்தவுடன்அட நம்ம  பிள்ளைகள்! என்றவுடன் அவரும் தெரிந்து கொள்ள பிறகு உள்ளே அழைத்துச்சென்று உபசரித்தார்.

அதன் பிறகு காரைக்குடியில் உள்ள எங்கள் வீட்டில் சென்றமாதம் தங்கியிருந்த பொழுது அத்தாவை நினைத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த இனிய நினைவுகளுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.எல்லாம்வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நீண்ட ஆயுளையும்,நிறைந்த பரக்கத்தையும் முழுஉடல்நலத்தையும்

தந்தருள்வானாக....ஆமீன்...🤲

XXXXXXXXXXXXXXXXXXXXXX

மீராலி  14 02 24

அந்த கரண்டிய யாரு தயார் செய்தார்கள் என்று கோபம் தான் வரும், காக் குழம்பு ஊத்தும்போது அதில் காய்கறிகளை அள்ளி வைக்க சொல்லுவதும், (இதுபோன்ற உணவுகள் தற்போது சாப்பிட்ட அனுபவம் இல்லாமல் போய்விட்டது) தங்களின் பதிவில் என்னுடைய தாயாரையும் எங்களின் பரிமளா பெரியம்மா அவர்களையும் உயர்வாக குறிப்பிட்டது மிகப்பெரிய ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது, மேலும் தாயாருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் எனக்கு கிடைத்த வாய்ப்பாக கீழக்கரையில் பணியாற்றிய பொழுது உடல் நலமில்லாமல் இருந்த என்னுடைய தாயாரை ஒரு தேவதை போல் வைத்திருந்தேன்,. (எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்), விருப்பப்பட்டு என்னுடைய தாயார் இளையான்குடிக்கு சென்ற பொழுது (மூத்த அண்ணன் ஷேக் மைதீன் வீட்டில்) இருந்த காலத்தில் இதற்காக வேண்டி நானும் கீழக்கரையில் இருந்து பரமக்குடிக்கு மாறுதல் செய்து அங்கு பணியாற்றினேன், (என்னை விட என்னுடைய அண்ணன் சிறப்பாக மிக சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள்) இத்தளத்தில் உள்ளவர்கள் வயதான தங்களுடைய தாயார் தகப்பனார் இருந்தால் சிறப்பான முறையில் கவனித்துக் கொள்வது தமக்கு கிடைத்த பாக்கியமாக நினைத்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்,(ஏப்பா சேக்கு ஒரு வாரமா மீரா பயலே காணாமே ! அண்ணனுடைய பதில் இப்பத்தான் அம்மா ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து பார்த்துட்டு போனா ன் அப்படின்னு அண்ணன் சொல்லிட்டு தொலைபேசியில் எனக்கு உடனே தகவல் சொல்லும் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பரமக்குடியில் இருந்து இளையான்குடிக்க உடனே வந்து அம்மா கிட்ட வெகு..... வெகு நேரம்.பேசிட்டு போவேன் நீங்கள் குறிப்பிட்ட மேல் உள்ள விஷயங்கள் 50, 60 வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அப்படியே படம்பிடித்து காண்பிப்பது போல் பேசுவார்கள் அதை நானும் அண்ணனும் உட்கார்ந்து ஆர்வமாக கேட்போம் பழைய நினைவுகள் அனைத்தும் நினைவில் இருக்கும், தற்போதைய நிகழ்வுகள் கடைசி காலத்தில் நினைவில் ஓரளவு இல்லாமல் இருந்தது, என்னுடைய தாயாரும் தகப்பனாரும் எங்கள் மீது திருப்தி கொண்ட நிலையில் இவ்வுலகை விட்டு சென்றார்கள், ( இன்னா லில்லாஹி.….) என்னுடைய தாயாரின் குப்பியின் கணவர் அவர்கள் திருக்கலாகுடியில் வபாத்தானார்கள்,(இன்னாலில்லாஹி...) அங்கு நேரடியாக சென்று வந்தேன், (என்னை யாருக்கும் தெரியவில்லை, நிறைய நபர்கள் வந்திருந்தார்கள் அவர்களை எனக்கு யாரும் தெரியவில்லை) எதுக்கு இந்த விஷயத்தை குறிப்பிடுகிறேன் என்றால் என்னுடைய தாயார் தற்போது இருந்தால் இதுபோன்ற விஷயத்திற்காக சென்று வந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார்கள், (அம்மாவும் அவர்களின் குப்பி யும் ஒத்த வயதுடைய நம்பிகள்).,

அல்ஹம்துலில்லாஹ், தங்களுடைய பதிவு மிகவும் அருமையாகவும், பேச்சு வழக்கு என்னை 45 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விட்டது, மேலும் சில விஷயங்களை பதிவிடுகிறேன் சீதளியில் தண்ணீர் இல்லாத நேரத்தில் ஈணா விட்டு தோட்டத்தில் பம்பு செட்டில் குளிக்க செல்வது உண்டு பெண்களுக்கு தனியாக நேரமும் ஆண்களுக்கு தேவையான நேரமும் ஆறுமுகம் அண்ணே மோட்டார் போட்டு விடுவார், அப்பொழுது ஆறுமுகம் அண்ணே மிகப்பெரிய ஹீரோவா தெரிவார், அதேபோல ஈனா வீட்டில் உள்ள ஊஞ்சல் ஒன்று இருக்கும் சிறு வயசுல அதுல ஆடாதவங்க யாருமே இருக்க முடியாது, அதேபோல ஈனா வீட்டில் நடக்கும் விசேஷங்களில் அந்த நெய் சோறும் பொடி குழம்பு அவ்வளவு அருமையாக இருக்கும்,

No comments:

Post a Comment