Sunday 30 June 2024

கவிதை ஜூலை (7) 2024////01//08//15//22//ஆகஸ்ட் 05//12//19//26//

 

                                                                            01072024

                                                                    





                                                             08072024

                                                            


15072024




                                                                      22072024






                                                             05082024






12082024






19-92024








26082024 (74)
 















Saturday 29 June 2024

தமிழ் (மொழி) அறிவோம் எனக்குப் பிடித்த பாடல் 30062024 ஞாயிறு

 



தமிழ் (மொழி) அறிவோம்

எனக்குப் பிடித்த பாடல்
30062024 ஞாயிறு
“நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்”
கவிதை நயமிக்க இந்த வரிகள் இடம் பெற்ற( திரைப் )
பாடல் எது ?
விடை
“எனக்குப் பிடித்த பாடல்”
படம் (ஜூலி கணபதி) (2003)
பாடலாசிரியர் முத்துக்குமார்
இசை இளைய ராஜா
பாடியோர் ஷ்ரயா கோஷல் விஜய் ஜேசுதாஸ்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ரவிராஜ் முதல் சரியான விடை
வேலவன்
செங்கை A சண்முகம்
சிவசுப்ரமணியன்
சோமசேகர்
பாப்டி
ஹசனலி
விடாமல் முயற்சித்த சகோ நஸ் ரீன் ,ஜோதி இருவருக்கும் நன்றி
விளக்கம்
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் கவிதையாகவே இருக்கிறது
எனவே முழுப்பாடலையும் கீழே கொடுத்திருக்கிறேன்
இனிய இசை
வேற்று மாநிலபாடகியின் மிகத் தெளிவான , சரியான உச்சரிப்பு கூடுதல் சிறப்பு
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஓன்று
“எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!!
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௩௦௦௬௨௦௨௪
30062024 ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday 27 June 2024

திருமறை குரான் குரான் அமைப்பு – ஆயத்துகள் சிறிய பெரிய ஆயத் 28062024 வெள்ளி

 





திருமறை குரான்

குரான் அமைப்பு – ஆயத்துகள் சிறிய பெரிய ஆயத்
28062024 வெள்ளி
சென்ற பகுதியில் குர்ஆனில் உள்ள ஆயத்துகள் எத்தனை என்று பார்த்தோம்
இன்றைய வினா
“திருமறையில் உள்ள ஆயத்துகளில் (வசனங்கள் ) \
மிகச் சிறியது எது ?
மிகப் பெரியது எது ?
விடை
மிகச் சிறிய குரான் வசனம் சுராஹ் அல் அஸ்ர் வசனம் 1
(103:1)
மிக நீளமான வசனம் சுராஹ் அல் பக்ரா வசனம் 282 (2:282)
ஒரே ஒரு விடைதான் வந்தது அது சரியான விடை
சகோ (பாப்டி) ஷேக்பீருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
விளக்கம்
சிறிய வசனம் பற்றி பல விடைகள் இணையத்தில் வருகின்றன
ஆனல் பெரிய வசனம் 2:282 என்பதில் கருத்து வேறுபாடு எதுவம் இல்லை என நினைக்கிறேன்
கடன் கொடுக்கல் வாங்கல் பற்றி பல செய்திகள் கொண்ட இந்த வசனம் கடன் வசனம் என்று அறியப்படுகிறது
“நம்பிக்கை கொண்டோரே!
ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும்.
இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது.
இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்;
தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;
அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;.
இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;.
எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.” 2 282
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
21 துல்ஹஜ் (12) 1445
28062024 வெள்ளி
சர்புதீன் பீ

Wednesday 26 June 2024

காரைக்குடி கண்ணன் 26062024 புதன்





 காரைக்குடி கண்ணன்

26062024 புதன்
தொலைபேசி அழைப்பு ஓன்று பெயரில்லாமல் எண்ணுடன் வந்தது
தெரிந்தவர்போல் பேசினார்
“ பெயர்கண்ணன்.
அண்ணாமலை நகரில் கட்டுமானப் பொறியர்
உங்களை ஓரிரு முறை அண்ணாமலை நகரிலும்
ஓராண்டு முன்பு காரைக்குடியில் ஒரு மருத்துவ மனையிலும் சந்தித்திருக்கிறேன் “
என்றார்
நான் அண்ணாமலை நகர் போய் பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும்
காரைக்குடியில் மருத்துவ மனை எதற்கும் நான் போன நினைவில்லை.
இருந்தாலும்
“சரி இப்போது எதற்காக அழைத்தீர்கள் “ என்று கேட்டேன்
“ வழக்கமாக மகனின் மருத்துவத்திற்காக காரைக்குடி வருவதுண்டு
இந்த முறை மருத்துவக் கட்டணமும் மருந்துகள் விலையும் மிக அதிகமாகி விட்டது
இதை எதிர்பார்க்காத நான் இருந்த பணத்தில் வண்டிக்கு டீசல் போட்டு விட்டேன்
பணம் முழுதாகக் கட்டினால்தான் மருந்து தருவார்களாம்
அந்த மருந்துகள் வேறு எங்கும் கிடைக்காது
அஞ்சலிலும் மருந்து அனுப்பமாட்டார்கலாம்
அண்ணாமலை நகரில் வீட்டில் பணம் இருக்கிறது
ஆனால் நான் ,என் துணைவியுடன் இங்கு வந்து விட்டேன்
எனவே வீட்டுக்குப் போனால்தான் பணம் எடுக்க முடியும்
கடன் அட்டை ,பற்று அட்டை களில் முடிந்த அளவு பணம் எடுத்து விட்டேன்
இப்போது நீங்கள் ஒரு 800/ ரூபாய் அனுப்பினால் போதும் .
மருந்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய் பணத்தை எடுத்து நேரிலோ வங்கி மூலமோ உங்களுக்க்குக் கொடுத்து விடுவேன்
எனக்க G Pay இல்லை . இங்கு நான் சொல்லும் ஒரு கடை எண்ணுக்கு நீங்கள் பணம் அனுப்பினால் அவர் எனக்குக் கொடுத்து விடுவார்” என்றார்
“ அ. நகரிலும் காரைக்குடியிலும் சந்தித்ததாகச் சொல்வது நம்பும்படி இல்லை
அதையும் தாண்டி பணம் அனுப்ப நினைத்தாலும் எனக்கும் G pay கிடையாது “
என்றேன்
“அருகில் உள்ள கடை மூலமாக அனுப்பலாமே “
என்றார்
அதெல்லாம் முடியாது என்று சொல்லி தொடர்பை துண்டித்து ,அவர் எண்ணை தடை செய்து விட்டேன்
அவர் பேசியதில் என்னை சந்தித்ததாகச் சொன்னது தவிர மற்றதெல்லாம் நம்பும்படியாக இருந்தது . நகரத்தார் வட்டார வழக்கில் இருந்தது அவர் பேச்சு
அவர் கேட்ட ரூபாய்800/என்பது பெரும்பாலும் எல்லோரும் அனுப்பலாம் என்று நினைக்கும் தொகை
மேலும் மருந்து விலையில் துண்டு விழும் தொகை மட்டும் கொடுத்தால்
போதும் . சாப்பாடு கூட சாப்பிடாமல் ஊர் போய்ச் சேருகிறோம் என்றெல்லாம் சொன்னார்
மொத்தத்தில் திட்டமிட்டு,ஒத்திகை பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு
இது நடந்தது 20 06 24 வியாழன் மாலை 3 மணி அளவில்
94892 74872 எண் பழனியப்பன் என்ற பெயரில் இருப்பதாய்
True caller காண்பித்தது
அவர் பேசிய எனது ஜியோ எண் பெரும்பாலும் சுற்றம் நட்புகளுக்கு மட்டும்தான் தெரியும்
இது எப்படி அவருக்குக் கிடைத்தது என்று தெரியவில்லை
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
26062024 புதன்
சர்புதீன் பீ

Monday 24 June 2024

English QUIZ Leave this chanting 25062024 Tue

 




English QUIZ
Leave this chanting
25062024 Tue
From which literature the following verse(s) are taken?
“Deliverance?
Where is this deliverance to be found?”
Answer
Gitanjali By Noble laureate Rabindranath Tagore, the first Asian to receive Nobel Prize
Greetings and Congratulations to those who sent correct answers :
M/S
Velavan –First Correct answer
Hasan Ali
Gamnesa Subramaniam
Sivasubramanian
Paapti
Gitanjali is a collection of poems which won Nobel Prize
Verses mentioned are from the 11th poem in the collection:
A famous poem
: Leave this chanting and singing and telling of beads!
Whom dost thou worship in this lonely dark corner of a temple with doors all shut?
Open thine eyes and see thy God is not before thee!
He is there where the tiller is tilling the hard ground and where the path maker is breaking stones.
He is with them in sun and in shower, and his garment is covered with dust.
Put off thy holy mantle and even like him come down on the dusty soil!
Deliverance?
Where is this deliverance to be found?
Our master himself has joyfully taken upon him the bonds of creation;
he is bound with us all for ever.
Come out of thy meditations and leave aside thy flowers and incense!
What harm is there if thy clothes become tattered and stained?Meet him and stand by him in toil and in sweat of thy brow”
Simple brief Explanation
A beautiful poem which I studied in 9th standard
Even after 60 years a few lines are lingering in my mind
Different kinds of vision of God people have like
deities, natural forces etc
Tagore sees God in hard labour and toil
And he says
How can human beings be liberated from the cycle of birth and death when God Himself is bound to all of us in chains of love
Let us meet tomorrow ISA
25062024 Tue
Sherfuddin P

Saturday 22 June 2024

தமிழ் (மொழி) அறிவோம் பாண் 23062024 ஞாயிறு

 




தமிழ் (மொழி) அறிவோம்

பாண்
23062024 ஞாயிறு
Bread என்ற சொல்லுக்கு இணையான ஒரு
இரண்டு எழுத்து தமிழ்ச் சொல் இருக்கிறது
அது என்ன ?
விடை
பாண்
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஆ ரா விஸ்வநாதன்
பாப்டி
(பன், pita என இரு விடைகள் வந்தன
அவை தமிழ் போல் இல்லை )
விளக்கம்
தமிழ் விக்சனரி
பாண், பெயர்ச்சொல்.
1. வெதுப்பி
2. ரொட்டி
மொழிபெயர்ப்புகள்
• ஆங்கிலம்
1. bread
அகர முதலி
பாண்
"பாண்" என்பதன் தமிழ் விளக்கம்
பாண்
(பெயர்ச்சொல்)bread
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௩௦௬௨௦௨௪
23062024 ஞாயிறு
சர்fபுதீன் பீ

Thursday 20 June 2024

திருமறை குரான் குரான் அமைப்பு – ஆயத்துகள் 21062024 வெள்ளி

 





திருமறை குரான்

குரான் அமைப்பு – ஆயத்துகள்
21062024 வெள்ளி
இறைவன் அருளால் இதிலிருந்து தொடர்ந்து சில பதிவுகளில் குரானின் அமைப்பு பற்றி பார்க்க இருக்கிறோம் வினா விடை வடிவில்
மிக அடிப்படையான செய்திகள் , எளிய வினாக்கள்தான்
அந்த வகையில் இன்றைய வினா
“திருமறையில் உள்ள ஆயத்துகள் (வசனங்கள் ) மொத்தம் எத்தனை?”
விடை
மிக எளிய வினா என்றுதான் போட்டேன்
ஆனால் சிந்திக்க வைக்கும் வினாவாக அமைந்து விட்டது
கூகிளில் நான் பார்த்தது 6,346 என்று ( The Quran contains 6,346 verses, including all unnumbered Bismillahs, which appear 114 times)
இதில் மக்கமாநகரில் அருளப்பட்ட மக்கி ஆயத்துகள் 4,647
மதீனாவில் அருளப்ட்டவை 1,589
ஆனால் வந்த விடைகள் ஒவ்வொன்றும் வேறுவேறாக இருக்கின்றன
சகோ
ஹசன் அலி 6348/6349
தல்லத் 6236
மெஹராஜ் 6666
பாப்டி 6236
Ktheeb Mamuna Lebbai 6236/6349
பெரும்பாலும் விடையளித்தோர் குர்ரானைக் கற்றுத் தேர்ந்தவர்கள்
மேலும் ஒரு சான்று இல்லாமல் விடை அனுப்பியிருக்க மாட்டார்கள்
எனவே எல்லா விடைகளும் சரியென்றுதான் கொள்ள வேண்டும்
ஐவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
ஆயத்துகள் பற்றி மேலும் சில செய்திகளை வரும் வாரம் பார்ப்போம்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
14 துல்ஹஜ் (12) 1445
21062024 வெள்ளி
சர்புதீன் பீ

[09:47, 21/06/2024] SHERFUDDIN P: Assalamu alaikum. While writing my book I have personally counted the verses, Sura by Sura which worked out to 6326 excluding Bismillahs. There are112 un numbered Bismillahs. 1. The 7 verses of Surah Al fatiha is including Bismillah 2. In Surah 9 Bismillah is not mentioned. So the total number of UN numbered Bismillahs is only 112, not 114. Hence total number of verses including Bismillah 6236+112= 6348 [09:48, 21/06/2024] SHERFUDDIN P: Message from Shah


சகோ தல்லத் குரல் பதிவு
பாfத்திஹா ஸுராவில் பிஸ்மில்லாஹ் சேர்க்காமல் 7 ஆயத்துகள் இருக்கின்றன
[11:29, 21/06/2024] Shaha Jio
: Of course there are some kitabs in which Bismillah remains unnumered in Al fatiha.
Because of this doubt in latter versions of my book I have mentioned the count excluding Bismillah only.
[12:07, 21/06/2024] Shaha Jio:
Content of the verses is more important than the count
IS Peer Mohamed
This is very true. The relevance in our case is that the question asked was about count. That is why the need for this discussion
“ஆயத்துகள் எண்ணிக்கை “ இதோடு நிறைவு செய்து கொள்வோம்
கருத்துகளைப் பரிமாறி குரான் அமைப்பு பற்றி முதல் பதிவை
உயிரோட்டமுள்ளதாக ஆக்கிய அனைவருக்கும் நன்றி
இது போன்ற விவாதங்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சி அடைவேன்

point& badge details

 முகநூல் குழுவில் நமக்கு உள்ள point& badge details சில நாட்களாக காணவில்லை

20062024

Tuesday 18 June 2024

பாரிஜாதம் 19062024 புதன்





 காலைக்கதிரவன்

கமலத்துக்கு மட்டும் சொந்தமா என்ன
நாங்களும் மலர்வோம் சூரிய ஒளியில்
மலர்ந்துமணம் பரப்புவோம்
பாரிஜாதம்
19062024 புதன்
சர்புதீன் பீ

Friday 14 June 2024

நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு இறைவன் அருளிய அற்புதங்கள்27 062023 செவ்வாய்

 




பிறை 8 துல்ஹஜ் (12) ,1444

நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு இறைவன் அருளிய அற்புதங்கள்
27062023 செவ்வாய்
புனித ஹஜ் மாதம் - இன்று பிறை 8
முன் குறிப்பு
*தக்பிர்*
அரஃபா நாளின் (ஹஜ் பிறை 9)( நாளை ஜூன் 28) ஸுப்ஹு தொழுகையிலிருந்து, பிறை 13( ஜூ
2 ) அஸ்ர் தொழுகை வரை (மொத்தம் 23 தொழுகைகள்) ,
ஜமாத்தாகவோ, தனியாகவே தொழும் ஆண்கள், பெண்கள் அனைவரும்,
பர்ளுத் தொழுகையின் *ஸலாம் கொடுத்தவுடன்* கீழ்க்கண்ட தக்பீரை குறைந்தது ஒருமுறையாவது சற்று சத்தமாக ஓதவேண்டும்.
*ஓத வேண்டிய தக்பீர்*
_அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்த்_.
தொடர்ந்து இன்றைய பதிவு
இஸ்லாமிய ஆண்டை நிறைவு செய்யும் இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்பானவை
நபி இப்ராஹீமுக்கு இறைவன் அருளிய சிறப்புகள் பற்றி நேற்று பார்ததோம்
இன்று அவருக்கு இறைவன் அருளிய அற்புதங்கள் சில
முன்னமே இறைவன் அவரின் குழந்தையை பலியிலிருந்து மீட்டு ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச செய்தது
வறண்டபாலை நிலத்தில் நபி விட்டுச் சென்ற அவர் துணைவி , குழந்தைக்கு உணவு ,பழங்கள் வழங்கியது
போன்ற அற்புதங்கள் பற்றிப் பார்த்தோம்
இன்று
பறவைகளில் செய்த அற்புதம்
தீக்குழி பூக்குழி ஆன அற்புதம் பற்றிப்பார்போம்
" [21:69].
பறவைகளின் கதை
நபி இப்ராஹீம் ஒரு பகுத்தறிவாளர் என்று முன்பு சொன்னேன்
இறைவனைப் பார்த்து அவர் கேட்கிறார்
“இறைவனே நீங்கள் எப்படி இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறீர்கள் என்று எனக்குக் காட்டுங்கள், “
இறைவன் கேட்கிறான்
'நீங்கள் நம்பவில்லையா?' “
நபி , 'ஆம், நம்புகிறேன்
ஆனால் என் இதயம் அமைதியடைவதற்காகவே' என்றார். “
இறைவன் : “ 'நான்கு பறவைகளைப் பிடி. பின்னர் அவற்றை துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு மலையிலும் ஒரு பகுதியை வைத்து, பின்னர் அவற்றை அழைக்கவும்;
அவை உங்களிடம் விரைந்து வரும் .
அல்லாஹ் வல்லமை மிக்கவன், ஞானம் மிக்கவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.' “(குரான் 2:260)
இப்படி தன் அடியானுக்கு அற்புத்தை நிகழ்த்திக் காட்டி தெளிவு
படுத்தினான் இறைவன்
அடுத்து நெருப்புக் குழி / பூக்குழி
சிலை வணக்கத்தை வன்மையாக எதிர்த்து வந்த நபி இப்ராஹீம் அலை மக்கள் யாரும் ஊரில் இல்லாத நேரத்தில் ஆலயத்தில் இருந்த சிலைகள் சிதைத்து விடுகிறார்
இதனால் சினம் கொண்ட மக்கள் அவரைத் தண்டிக்க எண்ணி நிறைய விறகுகளை எரித்து ஒரு பெரிய தீக்குழி ஒன்று உருவாக்குகிறார்கள் அவரைப் போட்டு எரித்து விட
ஆனால் இப்ராஹிம் அச்சம் கொள்ளாமல் அமைதி காக்கிறார் !
தன்னுடன் இருக்கும் இறைவன் தன்னைக் காப்பாற்றி என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்,
அவர் நெருப்பில் வீசப்படுகிறார
,
இறைவன் ஆணை இடுகிறான் "ஓ நெருப்பே, இப்ராஹிம் மீது குளிர்ச்சியும் பாதுகாப்பும் உண்டாகட்டும்”(குரான் 21:69)
சூராஹ் 21 : 52 முதல் உள்ள வசனங்கள் இது தொடர்பான நிகழ்வுகளை சொல்கின்றன
இன்னும் சொல்வதென்றால் தள்ளாத வயதில் குழந்தைகளைக் கொடுத்தது , மகன்கள் இஸ்மாயில், இஸ் ஹாக் , இருவரையும் பேரன் யக்ககூபையும் , யகூபின் மகன் யுசுபையும் நபி ஆக்கியது இறை அற்புதம்தான்
இனி நேற்றைய வினா
இறைவன் நபி முகமது ஸல் அவர்களுக்கு இப்ராஹிமின் வழியில் நடக்கக் கட்டளை இடுகிறான் என்பது போல் பொருள் வரும்
இறை வசனம்எது ?
விடை
இந்தக் குறிப்பு குர்ஆனில் பலஇடங்களில் வருகிறாது
வினாவுக்கு மிகப் பொருத்தமான விடை வசனம் 16:123
நபியே!) பின்னர் "நேர்மையாளரான இப்றாஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்" என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை( குரான் 16:123,
விடை அனுப்ப முயற்சித்த சகோ
கத்தீப் மாமுனா லெப்பை , சிராஜுதீன், தன்சீலாவுக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
பிறை 8 துல்ஹஜ் (12) ,1444
27 062023 செவ்வாய்
சர்புதீன் பீ

Wednesday 12 June 2024

கவி 2024 // 03 06/1006/1706 / 2406// ஆகஸ்ட் 0508 12//19//









03062024

10062024




இறைவன் அருளால் வழமையான பதிவுகள் (வியாழன்) 20 ஆம் நாளில் இருந்து
இடைவேளையில் கொஞ்சம் நொறுவல்
18062024 செவ்வாய் 17062024
சர்புதீன் பீ


24062024

                                                             


                                                                           05082024










12082024



19082024





போட்டிக்கான பதிவு 2
    18082024    not published 

  கிராமத்து சுவாசம்

கம்மம் சோறும் கேப்பைக்கூழும்

கலயத்தில் கஞ்சியும் 
கிடைக்கிறது 

கிராமத்தில் அல்ல 

நட்சத்திர உணவகங்களில்

நகரெங்கும் விளம்பரம் 

கருப்பட்டி காஃபிக்கும் மண்பானை சமையலுக்கும்

வேட்டி புடவை தாவணியில் வலம் வருகிறார்கள் நாகரீக ஆடை அணிவகுப்புகளில்



கிராமத்து சுவாசம் இன்னும் மிச்சமிருக்கிறது
பாரதிராஜா படங்களில் மட்டும்

சர்புதீன் பீ