Saturday, 29 June 2024

தமிழ் (மொழி) அறிவோம் எனக்குப் பிடித்த பாடல் 30062024 ஞாயிறு

தமிழ் (மொழி) அறிவோம்

எனக்குப் பிடித்த பாடல்
30062024 ஞாயிறு
“நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்”
கவிதை நயமிக்க இந்த வரிகள் இடம் பெற்ற( திரைப் )
பாடல் எது ?
விடை
“எனக்குப் பிடித்த பாடல்”
படம் (ஜூலி கணபதி) (2003)
பாடலாசிரியர் முத்துக்குமார்
இசை இளைய ராஜா
பாடியோர் ஷ்ரயா கோஷல் விஜய் ஜேசுதாஸ்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ரவிராஜ் முதல் சரியான விடை
வேலவன்
செங்கை A சண்முகம்
சிவசுப்ரமணியன்
சோமசேகர்
பாப்டி
ஹசனலி
விடாமல் முயற்சித்த சகோ நஸ் ரீன் ,ஜோதி இருவருக்கும் நன்றி
விளக்கம்
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் கவிதையாகவே இருக்கிறது
எனவே முழுப்பாடலையும் கீழே கொடுத்திருக்கிறேன்
இனிய இசை
வேற்று மாநிலபாடகியின் மிகத் தெளிவான , சரியான உச்சரிப்பு கூடுதல் சிறப்பு
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஓன்று
“எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!!
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௩௦௦௬௨௦௨௪
30062024 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment