பிறை 8 துல்ஹஜ் (12) ,1444
நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு இறைவன் அருளிய அற்புதங்கள்
27062023 செவ்வாய்
முன் குறிப்பு
*தக்பிர்*
அரஃபா நாளின் (ஹஜ் பிறை 9)( நாளை ஜூன் 28) ஸுப்ஹு தொழுகையிலிருந்து, பிறை 13( ஜூ
2 ) அஸ்ர் தொழுகை வரை (மொத்தம் 23 தொழுகைகள்) ,
ஜமாத்தாகவோ, தனியாகவே தொழும் ஆண்கள், பெண்கள் அனைவரும்,
பர்ளுத் தொழுகையின் *ஸலாம் கொடுத்தவுடன்* கீழ்க்கண்ட தக்பீரை குறைந்தது ஒருமுறையாவது சற்று சத்தமாக ஓதவேண்டும்.
*ஓத வேண்டிய தக்பீர்*
_அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்த்_.
தொடர்ந்து இன்றைய பதிவு
இஸ்லாமிய ஆண்டை நிறைவு செய்யும் இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்பானவை
நபி இப்ராஹீமுக்கு இறைவன் அருளிய சிறப்புகள் பற்றி நேற்று பார்ததோம்
இன்று அவருக்கு இறைவன் அருளிய அற்புதங்கள் சில
முன்னமே இறைவன் அவரின் குழந்தையை பலியிலிருந்து மீட்டு ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச செய்தது
வறண்டபாலை நிலத்தில் நபி விட்டுச் சென்ற அவர் துணைவி , குழந்தைக்கு உணவு ,பழங்கள் வழங்கியது
போன்ற அற்புதங்கள் பற்றிப் பார்த்தோம்
இன்று
பறவைகளில் செய்த அற்புதம்
தீக்குழி பூக்குழி ஆன அற்புதம் பற்றிப்பார்போம்
" [21:69].
பறவைகளின் கதை
நபி இப்ராஹீம் ஒரு பகுத்தறிவாளர் என்று முன்பு சொன்னேன்
இறைவனைப் பார்த்து அவர் கேட்கிறார்
“இறைவனே நீங்கள் எப்படி இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறீர்கள் என்று எனக்குக் காட்டுங்கள், “
இறைவன் கேட்கிறான்
'நீங்கள் நம்பவில்லையா?' “
நபி , 'ஆம், நம்புகிறேன்
ஆனால் என் இதயம் அமைதியடைவதற்காகவே' என்றார். “
இறைவன் : “ 'நான்கு பறவைகளைப் பிடி. பின்னர் அவற்றை துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு மலையிலும் ஒரு பகுதியை வைத்து, பின்னர் அவற்றை அழைக்கவும்;
அவை உங்களிடம் விரைந்து வரும் .
அல்லாஹ் வல்லமை மிக்கவன், ஞானம் மிக்கவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.' “(குரான் 2:260)
இப்படி தன் அடியானுக்கு அற்புத்தை நிகழ்த்திக் காட்டி தெளிவு
படுத்தினான் இறைவன்
அடுத்து நெருப்புக் குழி / பூக்குழி
சிலை வணக்கத்தை வன்மையாக எதிர்த்து வந்த நபி இப்ராஹீம் அலை மக்கள் யாரும் ஊரில் இல்லாத நேரத்தில் ஆலயத்தில் இருந்த சிலைகள் சிதைத்து விடுகிறார்
இதனால் சினம் கொண்ட மக்கள் அவரைத் தண்டிக்க எண்ணி நிறைய விறகுகளை எரித்து ஒரு பெரிய தீக்குழி ஒன்று உருவாக்குகிறார்கள் அவரைப் போட்டு எரித்து விட
ஆனால் இப்ராஹிம் அச்சம் கொள்ளாமல் அமைதி காக்கிறார் !
தன்னுடன் இருக்கும் இறைவன் தன்னைக் காப்பாற்றி என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்,
அவர் நெருப்பில் வீசப்படுகிறார
,
இறைவன் ஆணை இடுகிறான் "ஓ நெருப்பே, இப்ராஹிம் மீது குளிர்ச்சியும் பாதுகாப்பும் உண்டாகட்டும்”(குரான் 21:69)
சூராஹ் 21 : 52 முதல் உள்ள வசனங்கள் இது தொடர்பான நிகழ்வுகளை சொல்கின்றன
இன்னும் சொல்வதென்றால் தள்ளாத வயதில் குழந்தைகளைக் கொடுத்தது , மகன்கள் இஸ்மாயில், இஸ் ஹாக் , இருவரையும் பேரன் யக்ககூபையும் , யகூபின் மகன் யுசுபையும் நபி ஆக்கியது இறை அற்புதம்தான்
இனி நேற்றைய வினா
இறைவன் நபி முகமது ஸல் அவர்களுக்கு இப்ராஹிமின் வழியில் நடக்கக் கட்டளை இடுகிறான் என்பது போல் பொருள் வரும்
இறை வசனம்எது ?
விடை
இந்தக் குறிப்பு குர்ஆனில் பலஇடங்களில் வருகிறாது
வினாவுக்கு மிகப் பொருத்தமான விடை வசனம் 16:123
நபியே!) பின்னர் "நேர்மையாளரான இப்றாஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்" என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை( குரான் 16:123,
விடை அனுப்ப முயற்சித்த சகோ
கத்தீப் மாமுனா லெப்பை , சிராஜுதீன், தன்சீலாவுக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
பிறை 8 துல்ஹஜ் (12) ,1444
27 062023 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment