திரு மறை குரான்
4:148,
07062024 வெள்ளி
கடுமையான சொற்களால் குற்றம் கூறுவதை இறைவன் விரும்புவது இல்லை ‘
என்ற கருத்து வரும் திருமறை வசனம் எது ?
விடை சுராஹ் 4 அன்னிஸா(பெண்கள்) வசனம் 148
“‘அநீதி இழைக்கப் பட்டவர்கள் தவிர வேறு யாரும் யாரையும் கடுமையான சொற்களால் குற்றம் கூறுவதை இறைவன் விரும்புவது இல்லைஇறைவன் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான் “‘4:148
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
பீர் ராஜா – முதல் சரியான விடை
ஹசன் அலி
விளக்கம்
இந்த வசனமும் அடுத்த வசனமும் (149) இணைந்து ஒரு மிக உயர்வான ஒழுக்க நெறியை வலியுருத்துகின்றன
“‘அநீதி இழைக்கப்பட்டவருக்கு தன்க்கு தொல்லை துன்பம் கொடுத்தவர்களை நோக்கி கடும் சொற்கள் சொல்ல உரிமை இருக்கிறது
இருந்தாலும் அவர்களை ,அவர்கள் செய்த தீங்குகளை மன்னித்து விட்டால் அது அவருக்கு மிகவும் நல்லது
ஏனென்றால் இறைவன் மிகவும் மன்னிப்பவனாக இருக்கிறான் “
இது அறிஞர்கள் தரும் விளக்கம்
வசனம் :
“நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அதுஉங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் இறைவன்
நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்”4:149
இறைவன் நாளை தமிழில் சிந்திப்போம்
29 துல்ஹதா (11)1445
07062024 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment