Tuesday, 3 June 2025

துல் ஹஜ் மாத சிறப்புப் பதிவு 7 புனித ஹஜ் பயணத்தில் கட்டாயக் கடமைகள் 0 3 06 2025 செவ்வாய் திருத்திய பதிவு

 




துல் ஹஜ் மாத சிறப்புப் பதிவு 7 

  புனித ஹஜ் பயணத்தில் கட்டாயக் கடமைகள்

0 3 06 2025  செவ்வாய்

 திருத்திய பதிவு

 

முன் குறிப்பு

சிறிதும் பெரிதுமாய் பல பிழைகள் என பதிவில்

எழுத் துப்பிழை – சுட்டிக்காட்டிய சகோ மெஹராஜ்

அரபா நாள் பிழை பற்றிச் சொன்ன

சகோ யூனிவர்சல் ஷாஜகான் , ஷிரீன் பாரூக்

பலபிழைகள் என்ற சகோ சகா

அனைவருக்கும் நன்றி

இப்போது திருத்திய பதிப்பு 

 நேற்றைய வினா –

  புனித ஹஜ் பயணத்தில் கட்டாயக் கடமைகள் எவை ?

 

விடை

பயணத்திற்கு தயாராதல்

 

. ஹஜ் புனித பயணத்தின் பொழுது, ஆண்கள் இஹ்றாம் முறைப்படி உடை அணிய வேண்டும். அவர்கள் ஓரங்கள் மடித்து தைக்கப்படாத இரண்டு வெள்ளை நிறத் துணிகளையே அணிய வேண்டும். கால்களில் வாருடன் கூடிய செருப்பை அணியலாம்.

 பெண்கள் ஹிஜாப் அணிந்து முகத்தையும், கைகளையும் மறைக்காத சாதாரண உடை ஒன்றை அணிந்து கொள்ளலாம்.[10]

இஹ்றாம் அனைவரும் ஒன்றே என்று குறிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

 

இஹ்றாம் ஆடைகள் அணிந்த பின்னர் ஒருவர் நகங்களை வெட்டக் கூடாது, மற்றவருடன் சண்டையிடக் கூடாது.குடும்ப வாழ்க்கையில்  ஈடுபடுதல்மரங்களையோ செடிகளையோ அழித்தல் என்பனவும் கூடாது.

ஆண்கள் முடி, நகம் களையக் கூடாது   . தங்கள் தலைகளை மறைக்கக் கூடாது.

பெண்கள் கைகளையோ, முகத்தையோ மறைக்கக் கூடாது. தவறான செயல்கள் செய்வதோ, ஆயுதங்களை வைத்துக்கொள்வதோ கூடாது.

புனிதக் கடமைகள்

 

மக்காவிற்கு வந்தவுடன் பயணிகள் அனைவரும் ஹாஜி என்றே அழைக்கப் படுவர்.,[11] பின் ஹாஜிகள் அனைவரும் சில கடமைகளை செய்வார்கள். இவை அனைத்தும் இப்ராகீம், அவர் மனைவி ஹாஜர் ஆகியோரின் வாழ்க்கைகளில் நடந்ததை போன்று இருக்கும். இவை உலகம் முழுதும் இருக்கும் முஸ்லிம்களின் கூட்டு ஒருமைப்பாடை விளக்குகிறது.

சரியாக துல் ஹிஜ்ஜா மாதத்தின் எட்டாவது நாள் அன்று ஹாஜிகளின் புனிதப் பயணம் தொடங்கும். அதுவரை இஹ்ராமிற்கு மாறாதவர்கள் அன்றே உடைகளை மாற்றிவிட்டு அருகில் உள்ள மினா நகருக்கு செல்வார்கள். அந்த நகரத்தில் சவூதி அரேபியா அரசாங்கம் ஹாஜிகள் அனைவரும் தங்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடில்களை அமைத்து கொடுக்கின்றது.[3]

உம்றா(அல்லது)உம்ரா

 

பார்க்க விரிவான கட்டுரை: உம்றா
அப்துல்லாஹ் பின் ஸாயீப் நூல்கள்: அஹ்மத், அபூதாவுத், நஸயீ, ஹாகீம்)
கஃபாவை தவாஃப் செய்வது, ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன” (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், அபூதாவுத், திர்மிதீ)

 

தவாஃப்

 

 

தவாஃப் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்வார்கள். தவாஃபின் பொழுது சாப்பிடக் கூடாது அனால் தாகத்தை தவிர்க்கத் தண்ணீர் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளையும் ஓடிச் செய்ய வேண்டும், மீதம் உள்ள நான்கை நடந்து செய்யலாம்.[10] இறைவனை நினைவுகூரும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். ‘அல்லாஹு அக்பர்’ போன்ற வார்த்தைகளைக் கூறிக் கொள்ளலாம்

 

. முதலில் வரும் மூன்று சுற்றுகளிலும் இவை நிச்சயமாக சொல்ல வேண்டும். அனால் பலரும் ஏழு சுற்றுகளிலும் இதை சொல்லுவார்கள்.

தவாஃப் செய்து முடித்தவுடன் ஹாஜிகள் மகாமு இப்ராஹீம் எனப்படும் இப்ராஹீமின் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இந்தப் இடம் கஃபாவின் அருகில் இருக்கிறது. எனவே கூட்ட நெரிசலை தடுக்க பள்ளியில் உட்கட்டினுள்ளாக எங்கு வேண்டுமானாலும் இவ்வாறு தொழலாம்.

கஃபாவை சுற்றி ஹாஜிகள் நடக்கும் இந்த பாதையை முக்தாஃப் என்று அழைப்பர். கூட்ட நெரிசலின் காரணமாக இப்பொழுது பள்ளிவாயிலின் மேல்தளத்திலும் தவாஃப் செய்யப்படுகிறது.

புனித நீர் பருகுதல்

[

 

தவாஃப் செய்து முடித்த உடன் அன்றே ஹாஜிகள் 'சஃயு' எனப்படும் தொங்கோட்டம் ஓட வேண்டும். அதாவது இப்ராகீமின் மனைவி ஹாஜர் தன குழந்தைக்காக தண்ணீர் தேடி ஓடியதை போன்றே ஹாஜிகளும் ஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓட வேண்டும். அவர்கள் ஏழு முறை ஓடிய பின்னரே சம்சம் புனித நீர் கிடைத்தது என்பதால் ஹாஜிகளும் ஏழுமுறை ஓடிய பின் அந்த நீரைப் பருகலாம்.[12] ஹாஜிகளின் வசதிக்காக தற்பொழுது இந்த நீர் குளிர்ந்த நீராக குளிராக்கிகளில் அங்கேயே கிடைக்கிறது. முன்பு திறந்த வெளியில் நடந்த இந்த தொங்கோட்டம் நடக்கும் இடம், தற்பொழுது குளிரூட்டப்பட்ட அல்-ஹராம் பள்ளிவாயிலினுள் இருப்பதால் பக்தர்கள் சிரமமின்றி இக்கடமையை நிறைவேற்றலாம்.

இவை அனைத்தையும் செய்து புனித நீரை பருகிய பின் அனைவரும் தங்கள் குடிலுக்கு திரும்பி ஓய்வெடுக்கலாம்.

அரபா மலை

 

ஹஜ் நாளில் அறஃபா மலை

அடுத்தநாள், அதாவது துல்-ஹிஜ்ஜாஹ் மாதத்தின் எட்டாம் நாள் (ஹஜ்ஜின் இரண்டாம் நாள்), ஹாஜிகள் மினா எனும் இடத்துக்குச் செல்வார்கள். அங்கு அவர்கள் இரவு பிரார்த்தனையில் (துஆவில்) ஈடுபடுவார்கள். மறுநாள், அதாவது துல்-ஹிஜ்ஜாஹ் மாதத்தின் ஒன்பதாம் நாள் (ஹஜ்ஜின் மூன்றாம் நாள்), அனைவரும் அறஃபா மலைக்கு செல்வார்கள். மினாவிற்கும் அரபாவிற்கும் இடையிலான தூரம் 17 கி. மீ ஆகும். அங்கு மலையில் முகமது நபி நடத்திய கடைசிச் சொற்பொழிவினை நினைவு படுத்தி , அனைவரும் அங்கு குர்ஆனைப் படித்து, இறைவனின் பெயரை உச்சரித்து தொழுகையில் ஈடுபடுவர். அறஃபா மலைக்கு மன்னிப்பு வழங்கும் மலை என்ற பெயரும் இருப்பதால் இந்த கடமையே ஹஜ் பயணத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.அறஃபா வில் தங்கும் காலம் நடுப்பகலில் தொடங்குகிறது. இங்கு சூரியன் மறையும் வரை தங்க வேண்டும். சூரியன் மறையும் முன் அறஃபாவை விட்டுச் சென்றால் அந்தக் குற்றத்திற்காக தண்டம் (தம்) கொடுக்க நேரிடும். மதிய நேரத்தை இங்கு கழிக்காவிடின் ஹஜ் பயணமே முழுமையாகாமற் போய்விடும்.

இங்கு எந்தவிதமான சிறப்புத் தொழுகையும் இல்லை. ஆனால் அனைவரும் இங்கு சிறிது நேரதைக் கூட வீணாக்காமல் புனித குரானை ஓதுவார்கள்; தொழுகையிலேயே இருப்பார்கள்.[3]

முஸ்தலிபா- கற்கள் சேகரித்தல்

[

 

சூரியன் மறைந்த பின்னர் அறஃபா மலையை விட்டு, அதற்கும் மினாவுக்கும் இடையே அமைந்த முஸ்தலிபா என்ற இடத்திற்கு செல்வார்கள். இவ்விடம் அறஃபாவிற்கும் மினாவிற்கும் இடையே சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது. அங்கு அனைவரும் கூடாரம் இல்லாத திறந்தவெளியில் இரவைக் கழிப்பார்கள். இங்கு மஃக்ரிப், இஷாத் முதலிய தொழுகைகளையும் திக்ரு முதலான தியானங்களைச் செய்வார்கள். இங்கு இஷாத் எனப்படும் தொழுகைக்குப் பின், அடுத்த நாள் காலையில் அவர்கள் அடுத்த கடமையான சைத்தான் மீது கல்லெறியும் நிகழ்வுக்காக கூழாங்கற்களை இங்கு சேகரித்து எடுத்துக்கொள்வர். சுமார் 49 மற்றும் 70 கற்களை எடுக்க வேண்டும். இங்கு எடுக்க மறந்து விட்டால் அல்லது எடுத்த கற்களில் சில தவறிவிட்டால் மினாவில் கற்களை எடுத்துக் கொள்ளலாம். தேவையான கற்களை மினாவில் எங்கிருந்தாவது எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சைத்தானுக்குக் கல்லெறியும் இடத்திலிருந்து கற்களை எடுக்கக்கூடாது. கற்களை கழுவாமலிருப்பது சிறந்தது.

கல்லெறிதல்

 

மினாவில் ஹாஜிக்கள் ஜம்ரதுல் எனும் சாத்தான் மீது கல்லெறியும் கடமையை செய்வர். இவர்கள் சைத்தானின் மீது கொண்டுள்ள வெறுப்பை காட்ட இவ்வாறு செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் முன்னர் இப்ராகீம் தன் மகனை அல்லாஹ்வின் கட்டளையின்படி பலியிடத் தயாராகும் பொழுது சைத்தான் அவரை மூன்று முறை அழைத்தும் அவர் மறுத்தார். இங்கு இருக்கும் ஒவ்வரு தூணும் மூன்று முறை இவர் மறுத்ததை குறிக்கிறது. முதலில் அவர்கள் கல்லெறியும் பெரிய தூணின் பெயர் 'ஜம்ரதுல் ஊலா' வாகும்.[13] ஹாஜிகள் சைத்தானின் மீது கல்லெறிகிறோம் என்ற நினைவால் வெகுண்டெழுந்து இந்த கடமையை செய்கின்றனர். பல அடுக்குகள் கொண்ட ஜம்ரத் பாலத்தில் இருந்து இவர்கள் இதை செய்யலாம். அடுத்த இடத்தில் மற்ற தூண்களின் மீது கல்லெறியலாம். மொத்தம் அவர்கள் ஏழு கற்களை எறிவார்கள்.[3] அதிக கூட்டம் இங்கு வருவதால், 2004 ஆம் ஆண்டு இந்த தூண்கள் எறியும் கற்களை சேகரிக்கும் தொட்டிகளுடன் கூடிய சுவராக அந்த இடம் மாற்றப்பட்டது.

-குர்பானி கொடுத்தல்]

சைத்தானின் மீது கல்லெறிந்த பின்னர், ஹாஜிகள் விலங்குகளைப் பலியிடுவர். அதாவது இப்ராகீமின் மகனுக்குப் பதிலாக ஒரு செம்மறி ஆட்டை பலியிடச் செய்ததன் நினைவாக இது செய்யப்படுகிறது. முன்பு ஹாஜிகள் அவர்களாகவோ அல்லது அவர்களின் முன்னிலையிலோ செய்யப்பட்ட பலியானது, தற்பொழுது தனியாக ஹாஜிகளின் பெயரில் அறுப்போர்களால் செய்யப்படுகிறது. இதற்காக ஹஜ் பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே வங்கியில் குறிப்பிட்ட பணம் செலுத்தி இதர விவரங்களையும் தெரிவிப்பதன் பெயரில் குர்பானி கொடுப்பதற்கன ஏற்பாடு தற்பொழுது உள்ளது. இதைப் பயன்படுத்தி பற்றுச்சீட்டுப் பெற்றுக்கொள்ளலாம். ஒருவர் தன் பேரில் ஒரு ஆட்டையோ அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை குர்பானியாகப் பலியிடலாம். இந்த இறைச்சி பின்னர் தொண்டு நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதற்கும் அனுப்பப்படுகிறது.[3] அதே சமயத்தில் உலகம் முழுதும் முஸ்லிம் மக்களால் தியாகத் திருநாள் மூன்று நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.[14]
இந்த சடங்கு முடிந்த பின் ஆண்கள் தலைமுடியை களைதல்  அல்லது சற்று வெட்டி "கஸ்ரை" முடிப்பர். பெண்கள் தங்கள் சடையில் இருந்து ஒரு அங்குல முடியை வெட்டிக் கொள்வர்.

தவாப் அஸ்-சியாராஹ்

 

இன்று ஹாஜிக்கள் அனைவரும் மக்காவில் உள்ள அல்-ஹராம் பள்ளிவாயலுக்கு, மற்றொரு தவாஃப் செய்வதற்கும், கஃபாவைச் சுற்றி வருவதற்கும் செல்கின்றனர். இது 'தவாப் அஸ்-சியாராஹ்' அல்லது 'தவாப் அல் இபாதா' என்று அழைக்கப்படுகிறது. இது இறைவன் மேல் அவர்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் பற்றுறுதியைக் குறிப்பதாகும். பின்னர் அன்றிரவை மீண்டும் மினாவில் கழிப்பார்கள்.

பதினோராம் நாளின் மதியம் மற்றும் அதற்கு அடுத்த நாளும் மீண்டும் சைத்தானின் மீது கல்லெறியும் கடமையை செய்வார்கள். பனிரண்டாம் நாள் சூரியன் மறையும் முன் மக்கா நகருக்கு அவர்கள் செல்வார்கள். அன்று அவர்கள் மாலை நேரத்திற்கு முன் செல்லவில்லை என்றால் அவர்கள் அடுத்த நாள் மீண்டும் கல்லெறியும் சடங்கை செய்தபின் தான் செல்ல முடியும்.

தவாபுல் விதாஃ

 

நிறைவாக  ஹாஜிகள் அனைவரும்

பயணிக்கும் முன்னர்  ஒரு தவாஃப் செய்யவேண்டும். இதன் பெயரே தவாபுல் விதாஃ என்பதாகும்.'விதாஃ' என்றல் விடை கொடுத்தல் என்று பொருள்.[3]

நாள் வரிசை:

·        துல் ஹிஜ்ஜா 8 (துவக்கம் )

மக்காவுக்குச் சென்று, அங்குள்ள புனிதத் தலங்களில் தங்கி, துல் ஹிஜ்ஜா 8 அன்று ஹஜ் பயணத்தை தொடங்கலாம்.

·        துல் ஹிஜ்ஜா 9 (அரஃபா நாள்):

மினாவில் தங்கி, அன்மத் மற்றும் தவாஃப் போன்ற சில சடங்குகளைச் செய்ய வேண்டும்.

·        துல் ஹிஜ்ஜா 10 (ஹஜ் நாள்):

குர்பானி செய்ய வேண்டும்.

·        துல் ஹிஜ்ஜா 11, 12, 13 (துல் ஹிஜ்ஜா):

மினாவில் தங்கி, தவாஃப் மற்றும் பிற சடங்குகளைச் செய்ய வேண்டும். 

 

இணையதிதில் இருந்து  சில திருத்தங்களுடன்

 

 

 

இன்றும் ஒரு

 

 surprise

 

முதல் சரியான விடை அனுப்பிய சகோ

ரவி ராஜுக்கு சிறப்பு வாழ்த்துகள் பாரா ட்டுகள் 

 

அடுத்து

சகோ சர்மதா

 

 

 

 

 

 

இன்றைய வினா

அரபாவின் சிறப்புகள் எவை ?

 

இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம் 

 

நம்மில் உடல் நலம் , பணநலத்தில்  தகுதி உள்ள அனைவருக்கும் புனித ஹஜ் பயண வாய்ப்பை அருள இறைவனை இறைஞ்சுவோம்

 

ஒரு சிலர் (ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் கூட )குர்பான் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, மனம் ஒ பபவில்லை என்று சொல்கிறார்கள்

இறைவனிக் கட்டளை , நபி வழி ஒழுங்கு பற்றி கருத்துத் தெரிவிக்க நாம் யார் ?

இறைவன் சொல்லி விட்டான் என்பதற்காக அருந்தவப்புதல்வனை தியாகம் செய்யத் துணிந்த மாமனிதரின் இறை நம்பிக்கையை முழுமையாகப் புரிந்து உணர்ந்து  மனம் உவந்து செயல்படுவோம்

 

Ps ;என் பதிவுகளில் சொல் பிழை, பொருள் பிழை எழுத்துப்பிழை எது இருந்தாலும் உடன் சுட்டிக்காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்   

 

 

6    துல் ஹஜ் (12)  1446

03     0 6 2025 செவ்வாய்   

சர்புதீன் பீ

No comments:

Post a Comment