பதினொன்றும்
பதினொரு ஆயிரம் கோடியும்
(சொல்லவே மூச்சு வாங்குகிறது . 110,00,00,00,000 எழுத கை வலிக்கிறது )
.இந்தியாவில் சிறைகள் வசதியாக இல்லை .எனவே என்னை இந்தியாவுக்கு
அழைத்துச் செல்லக்கூடாது என்கிறார் மிகப்பெரிய அளவில் கடன் வாங்கி அதைககட்டாமல்
ஏமாற்றி வெளிநாடு தப்பி ஓடிய ஒரு குற்றவாளி
அவரை மிஞ்சி விட்டார் இன்னொருவர் . முன்னவரைப்போல் பல மடங்கு கடன்
வாங்கி கட்டாமல் ஒரு மிகப்பெரிய அரசுடமை வங்கியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டார்.
பொன் எழுத்துகளில் பொறிக்கப்படவேண்டியவை அவருடைய சொற்கள்
நான் செய்த மோசடியை அம்பலப்படுத்தி
என்னை அவமானத்துக்குள்ளாக்கி விட்டீர்கள் . எனவே பணத்தை என்னிடமிருந்து
வசூல் செய்யும் வாய்ப்பை முழுவதுமாக இழந்து விட்டீர்கள் என்று வங்கியை பகடி செய்து
கெக்கலிக்கிறார் .
குற்ற உணர்வு துளியும் இல்லாமல் இப்படிப்பேசும் துணிச்சல் ,
நெஞ்சூக்கம் இவர்களுக்குக் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும்
குற்றவாளிகளே
கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் இது எவ்வளவு பெரிய மோசடி என்பது
புலப்படும்
பதினோரு ஆயிரம் கோடி –
கோடி கோடியாய் பதினோரு ஆயிரம்
பேருக்குக் கொடுத்து
பதினோரு ஆயிரம் கோடீஸ்வரர்களை உருவாக்கலாம்
மில்லியன் மில்லியன் ஆகக்கொடுத்து
ஒருலட்சத்துப்பத்தாயிரம் மில்லியனர்களை உருவாக்கலம்
பதினொரு லட்சம் லட்சாதிபதிகளை உருவாக்கலாம்
இவ்வளவு பெரிய்ய்ய்ய தொகையை கபளிகரம் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும்
மிகப்பெரிய சதிகாரர்கள் சில புகைப்படங்களின் அடிப்படையில் மிக எளிதாக நாட்டை
விட்டு தப்பிச் செல்கிறார்கள்
பாதிக்கப்பட்டது மிகப்பெரிய
அரசுடமை வங்கி என்பதோடு இன்னொரு சிறப்பும் உண்டு. அன்னியர் ஆதிக்கத்தை எதிர்த்து
முழுக்க முழுக்க நம் நாட்டவர்களால் துவங்கப்பட்டது.
இன்று நம்மவர்களே அதன் கழுத்தை நெரித்து விட்டரகள்
வங்கிக்கு மலர் வளையம் வைத்துஅஞ்சலி
செய்கிறார்கள் என்கிறது ஊடகச் செய்தி
வழக்கம் போல் இதெல்லாம் எனக்கு சம்பந்தம் இல்லாதவை எனபது போல் அமைதி
காக்கும் தலைமை
மற்றவர்கள் மேல் பழி சுமத்தத்துடிக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு அமைச்சர் .
இந்தத் தொகையை வசூல் செய்வது சிரமம் என்று முதல் செய்தியிலேயே அறிக்கை
விடும் வங்கி உயர் அதிகாரிகள்
அமைதியாக வேடிக்கை பார்க்கும்
நாமாகிய நாம் .
நமக்குத்தான் எதுவுமே
உரைக்காதே . நம் பணத்தை எடுக்கத் தடை போட்டு கட்டுப்படுத்திய போதும் என்ன பொங்கியா
எழுந்தோம் .
தேடிச்
சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
என்ற பாரதியார் வரிகளுக்கு நாம்
பொருத்தமாகி விட்டோமோ ?
எனக்கும் வங்கியில் எழுத்தராக,
அதிகாரியாக, மேலாளராக முதுநிலை மேலாளராகப் பணியாற்றிய நீண்ட அனுபவம் இருக்கிறது .
அதெல்லாம் நினைத்தால் இப்போது உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது
ஒர சில ஆயிரங்கள் கடன் கொடுக்க தொழில்
/ வணிகம் நடக்கும்இடம் , உரிமையாளர் வீடு எல்லாம் நேரில் போய்ப் பார்த்து அவர்
குடும்பம் பற்றி அக்கம் பக்கம கேட்டறிந்து தொழிலுக்கு உரிமம் இருக்கிறதா தொழில்
நடத்தும் இடத்துக்கு உரிமையாளர் யார், அதற்குரிய ஒப்பந்தம் இருக்கிறதா தொழில்
செய்ய தகுதி, திறமை இருக்கிறதா வேறு
வங்கியில் கடன் இருக்கிறதா இப்படி ஒரு முழுமையான தெளிவான தெரிதலுக்குப்பின்தான்
கடன் கொடுப்பது பற்றி ஒரு முடிவு எடுப்போம்
முதி நிலை மேலாளரான எனக்கே தகுதியுள்ள
ஒரு கடன் தகுந்த காரணம் இன்றி மறுக்கப்பட்டதும் , இன்னொரு சிறிய கடனை மேலிடம் பலமாதங்கள் இழுத்தடித்ததும்
உண்டு
அரசியல் தலையீடு ,பிறர் பரிந்துரைகளை
தவிர்த்து விடுவோம்..பரிந்துரைகளை தவிர்க்க முடியாவிட்டால் அவரை பிணையாமக இணைத்து விடுவோம் .
ஊழியர்கள் பரிந்துரைத்தால் அவர்களிடம்
எழுத்து மூலமாக வாங்கி பதிவு செய்து விடுவோம்
ஒரு மாதத் தவணை தவறிப்போனால் கூட அறிவிப்பு அனுப்புவது , தொலைபேசியில் தொடர்பு கொள்வது நேரில்
போய்ப்பார்ப்பது ,, பரிந்துரை செய்தவரிடம் கேட்பது என்று வசூல் நடவடிக்கைகள் தொடங்கப்படும்
தொடர்ந்து பணம் கட்டாமல் இருந்தால் வழக்கறிஞர் அறிக்கை , வழக்குத் தொடர்வது சொத்துப்பறிமுதல் என்று நடவடிக்கை தொடரும்
சிறிய தொகை என்றால் அதிகப்படியான நீதி மன்றச் செலவுகளைக் கருதி அனுமதி
பெற்று கடன் தொகையை தள்ளுபடி செய்து விடுவோம் ,
இதையும் மீறி ஒரு நிகழ்வு – ஒரு
மிகச்சிறிய தொகைக்கு –
வெறும்
பதினோரு ரூபாய்க்கு
வழக்குத் தொடரப்பட்டது மொத்தமாக பல
கடன்களோடு சேர்த்து இதுவும் மேலிடம் போய் அவர்களும் வழக்குத்தொடர அனுமதி அளித்து
வங்கி வழக்கரிஞரிடம் போய் நீதி மன்றம் வரை போய்விட்டது.
சுண்டைக்காய் சுமைக்கூலி கதையாகி
விட்டது
ஒரு முன்னூறு ரூபாய்க்கடனை தள்ளுபடி
செய்ய அனுமதி கேட்டபோது இதில் வங்கி ஊழியர் சம்பந்தப்பட்டிருக்கிறார் ( staff angle/ staff involvement).எனவே அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்
வாராக்கடன் (NPA) என்பது ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்புதான் நடைமுறைக்கு வந்தது .
இது நல்லதா கெட்டதா என்பது பற்றி சொல்ல வரவில்லை .
ஆனால் வங்கிகளில் துவக்க நிலையில் இது மிகப்பெரிய அளவில் குழப்பத்தையும் , நடை
முறைச் சிக்கலையும் உண்டாக்கி வேலைப்பளுவை அதிகரித்து மன உளைச்சலை உண்டாக்கியது
வாராக்கடன் என்றால் என்ன என்பதை ஒரு
மிக எளிதான எடுத்துக்காட்டு மூலம் பார்ப்போம் .
உங்களுக்கு ஒரு பெரிய வீடு
இருக்கிறது. அதை நீங்களும் பயன்படுத்தவில்லை , வாடகைக்கும் விடவில்லை என்றால்
அந்தச் சொத்து உங்களுக்கு பயன் அளிக்காத சொத்து ஆகி விடுகிறது .இதுதான் nonperforming asset
சுருக்கமாக NPA
வருமானம் இல்லாவிட்டாலும் வீட்டின்
பாதுகாப்பு, பராமரிப்பு, வீட்டு வரி, மின்கட்டணம் ,குடிநீர் கட்டணம் போன்ற
செலவுகளை தவிர்க்க முடியாது .உங்கள் மற்ற வருமானத்தில் ஒரு தொகையை ஒதுக்கி இந்தச்
செலவுகளை சமாளிக்க வேண்டும்
வங்கிகள் கொடுக்கும் கடன்கள் வட்டி
வருமானம் ஈட்டித் தரும் சொத்துக்கள் (Assets)ஆகும்
நான் ஒரு வங்கியில் பத்தாயிரம் ரூபாய்
கடன் வாங்கியிருக்கிறேன் . மாதம் ஆயிரம் ரூபாயும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை
வட்டியும் செலுத்த வேண்டும்,
பழைய முறையில் நான் பணம் கட்டினாலும் கட்டாவிட்டாலும்
மூன்று மாதத்திற்கு ஒரு முறை கடனுக்கு வட்டி ஏற்றப்பட்டு அது வங்கியின் வட்டி
வருமானத்தில் சேர்க்கப்படும்..
கடனை வசூல் செய்ய வழக்குத் தொடரும்
வரை இது தொடரும்.
புதிய முறையில் இப்படி செய்ய முடியாது
.ஒழுங்காக தவணைகளும் வட்டியும் வசூல் ஆகாவிட்டால் அது வாராக்கடனில் சேர்க்கப்படும்
தொடர்ந்து வட்டி போட முடியாது.
மேலும் வாராக்கடனின் நிலை,(Stage of NPA)தொகை ,கடனுக்கு உள்ள பிணைய சொத்துக்கள்(Securities) இவற்றின் அடிப்படையில் பல விழுக்காடுகளில் Percentage)( சில கடன்களுக்கு 100% வரையிலும் , அதற்கு மேலும் கூட தொகை ஒதுக்கீடு(Provision)செய்ய வேண்டும்.
ஏற்கனவே வட்டி போடாததால் வங்கியின்
வருமானம் குறைகிறது. இந்த ஒதுக்கீடு என்பதும் நேரடியாக வங்கி வருமானத்தில்
குறைக்கப்படும்
இதனால் பல வங்கிகள் தங்கள் இருப்பு
நிலை அறிக்கையில் (Balance Sheet) இழப்பு( Loss) காண்பிக்கும் நிலை ஏற்பட்டது
விதிப்படி செய்தால் பெரும்பாலான
கடன்கள் வாரக்கடன்களாகிவிடும். . அப்படி அதிகமாக் காண்பித்தால் மேலிடம் ஒத்துக்
கொள்ள மறுக்கும்
இப்படி இது ஒரு இரட்டை முனைக் கத்தியாகி விட்டது
இதனால் விதிகளுக்கு உட்பட்டும்
வெளிப்பட்டும் சில பல சரிக்கட்டுதல்கள் (Adjustments)(செய்யப்பட்டன. மிக எளிய சரிக்கட்டு கடன் தவணையைத் தள்ளிப்போடுதல்
புதிய கடன் கொடுத்து பழைய கடனை
அதிலிருந்து வசூல் செய்வதும் நிகழ்ந்தது இதன் மிகப்பெரிய பூதாகரமான பரிமாணம்தான்
பதினோரு ஆயிரம் கோடி- உண்மையிலேயே கை வாய் மனம் எல்லாம் வலிக்கிறது
இப்போதைக்கு இந்த விளக்கம் போதும்
வங்கி நடைமுறைகள் முழுவதும் கணினி மயமாகி
விட்டதால் முன்போல் சரிக்கட்டுதல் செய்ய
முடியாது என சொல்லப்படுகிறது .நம்பத்தானே வேண்டும்
இலக்க முறை பயன்பாடு(digital
transaction) முழுக்க முழுக்க ஊழலை ஒழித்து
(ஒளித்து? )விடும் என்றும் சொல்லப்பட்டது
பதினொரு ஆயிரம் கோடி ஊழல் முழுக்க
முழுக்க இலக்க முறையில்தான் நடைபெற்றுள்ளது
யாரைத்தான் நம்புவது எல்லாமே வஞ்சமாக
இருக்கிறதே ?
வங்கி தணிக்கை அதிகாரிகள் என்ன செய்தார்கள்,
வெளியிலிருந்து வரும் இருப்பு நிலை
தணிக்கையாளர்கள் external auditors for Balance Sheet Audit)என்ன செய்தார்கள்
வங்கிகளைக் கண்காணிக்கும் நடுவண்
வங்கி( RBI) என்ன செய்தது
என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி
எழுப்பிப் பயனில்லை
எல்லாவற்றிற்கும் மேலாக மாபெரும் , வல்லமை படைத்தவர்கள் ஆட்டுவிக்கிறார்கள் ஆட்டிப்படைக்கிரார்கள்
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்
குலைக்க எதிரிநாடுகள் கள்ளப்பணத்தை பெருமளவில் புழக்கத்தில் விடுவார்கள்
இது அதைவிட ஒரு மோசமான வலுவான
தாக்குதல் மிக அழகாக திட்டமிட்டு செயல்படுத்த்பட்டிருக்கிறது .என்ன இது முழுக்க
முழுக்க நம நாட்டுத் தயாரிப்பு
எதையும் தாங்கும் இதயம் கொண்ட நாம் இதையும்
தாங்குவோம்.இதை விடப் பெரிதாக ஏதவாது வந்தால் இரு கோடுகள் தத்துவத்தில் இதை மறந்து
விடுவோம் இப்போதைக்கு து வேந்தர்களை மறந்துவிட்டோமே அது போல
சென்ற வாரம்
மரு சர் ஏ எல் முதலியார் அவர்களின் மருத்துவ நுண்ணறிவு பற்றி இரண்டு
கெள்விகள் கேட்டிருந்தேன்.
முதலாவதில்
அந்தப்பெண் அணிந்திருந்த மூக்குத்தியில் இருந்த வைரக்கல்லின் மிளிரும்
ஒளி கண்ணில் பட்டதுதான் தலைவலிக்குக் காரணம்.
முதலியாரின் சொல்கேட்டு மூக்குத்தியை கழற்றியவுடன் தலைவலி மறைந்து
விட்டது
அடுத்ததில்
மருத்துவ மனைக்கு வந்த முதலியார் இளம் மருத்துவரிடமிருந்து வெண்
சுருட்டைபிடுங்கி வெளியே நீட்டிகொண்டிருந்த விரலுக்கு அருகில் கொண்டு செல்ல அந்த
வெப்பம் தாளாமல் விரலை உள்ளே இழுத்துக்கொண்டது கருவில் இருந்த குழந்தை .சிறிய
தையல் போட்டு சிறிது நேரத்தில் அங்கேயே அழகான குழந்தை பிறந்தது
விடைகள் பதிவு செய்த உடன்பிறப்புக்கள் மெகராசு,(ஓன்று சரி அடுத்தது
பாதி சரி) சோதிக்கும் (இரண்டும் சரி) இதயத்துக்கும்( இரண்டும் சரி ஓன்று அம்மா
சொன்னது மற்றொன்று சகா மாமா சொன்னது என்று குறிப்பிட்டிருந்தார் ) பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்
இ(க)டைச் செருகல்
இந்த வாரம் வெளியிட சுவையான ஒரு பதிவு எழுதி முடித்து விட்டேன்
.இதற்கிடையில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியன் என்ற முறையில் எனக்குத் தெரிந்த சிலவற்றை
பகிர்ந்துகொள்ள எண்ணம் தோன்றி ஒரே நாளில் இதை எழுதி முடித்தேன் ..சுவைப்பதிவு
பின்னால்
குறை நிறைகளை சுட்டிக்காண்பிக்குமாறு வங்கி நண்பர்களையும்
மற்றவர்களையும் கேட்டுக்கொள்கிறேன் .
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com