Monday, 19 February 2018

இசுலாமும் யோகக்கலையும் 30



இசுலாமிய இறைவணக்கமும் யோகாசனங்களும் 2

தொழுவதற்கு உடல் சுத்தம் உடை சுத்தம் 
இடம் சுத்தம் அவசியம்..
உடலுறவு கொண்டவர்களும் மாத விலக்கானவர்களும் குளித்து சுத்தம் ஆன பிறகே தொழ முடியும்.
இது போக ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் உளு எனப்படும் உடல் சுத்தி செய்வது அவசியம்.. இந்த உளு உடல் நலத்திற்கு ஒரு அடிப்படைப் பயிற்சியாய் அமைகிறது..எனவே இது பற்றி சிறிது விரிவாகப் பார்ப்போம்.
இசுலாத்தில் பரிசுத்தம் எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.. மலம், சிறுநீர் கழித்தவர்கள் அந்த உறுப்புகளை முழுமையாக சுத்தம் செய்யாமல் தொழுக முடியாது..
கழிவுகள ஏதேனும் உடலிலோ ஆடையிலோ சிறிதளவு பட்டிருந்தாலும் சுத்தம் செய்வது அவசியம்.,
.
உளு செய்யும் முறை
இறைவனின் திருப்பெயரை நினைந்து உடலை சுத்தி செய்ய உறுதி கொண்டு ஆரம்பம் செய்து.முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் மணிக்கட்டு வரை விரல்களுக்கிடையில் தண்ணீர் படும்படி கழுவவேண்டும்(மூன்று முறை)
அடுத்து வலது கை நிறைய தண்ணீர் எடுத்து வாயில்விட்டு நன்றாகக் கொப்பளிக்க வேண்டும் (மூன்று முறை)
அடுத்து நாசிகளின் உள்ளே நீர் செலுத்தி, மூக்கு நுனியைக் கழுவ வேண்டும் (மூன்று. முறை)
முகத்தை வலது காது முதல் இடது காது வரை, நெற்றியிலிருந்து தொண்டை வரை நன்றாக தாடியின் முடியும் நனையுமாறு) மூன்று முறைகழுவவேண்டும் .
முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் மணிக்கட்டில் இருந்து முழங்கை வரை நன்றாக மூண்று முறை கழுவ வேண்டும்.
கைகளை நனைத்து நெற்றியில் தொடங்கி பிடரி வரை தடவ வேண்டும்..
இரு காதுகளின் உள்புறமும் வெளிப்புறமும் காதுகளின் பின்புறமும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
இறுதியாக இரண்டு பாதங்களையும் கணுக்கால் வரை ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விரல் இடை வெளியும் நனையுமாறு மூன்று முறை கழுவ வேண்டும்
.
உளுவின் பயன்கள்:
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்
படித்து பிடித்தால் பகிரவும்


1 comment: