Friday, 9 February 2018

வண்ணச் சிதறல் 6






நெஞ்சத்தைக் கிள்ளாதே


காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல் சாதல்
என்று முழங்கினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி.

காதல் பற்றிப் பேசாத பாடாத கவிதை இல்லை காவியம் இல்லை திரைப்படம் இல்லை கதையும் இல்லை .

கதையில். கவிதையில் திரைப்படத்தில் காதலை ரசிப்போம்
அடுத்த ஊரில் அடுத்த தெருவில் அடுத்தவீடடில் அடுத்தவர் குடும்பத்தில் காதல் திருமணம் என்றால்  வாழ்த்துவோம் பாராட்டுவோம் 

ஆனால் நம்குடும்பத்தில் காதல் என்ற சொல்லே தவிர்க்க வேண்டிய ஒன்று
என் பிளைகளளை அப்படி நான் வளர்க்கவில்லை என்ற லீராப்புவேறு

எல்லாம் நம் வீட்டிலும் அது நிகழும் வரைதான்

பெரும்பாலான தமிழ்த்திரைக்கதைகளுக்கு கருப்பொருள் காதல். ஆனால் என் குடும்பத்தில் காதலுக்கு அனுமதி இல்லை என்பதுதான் திரையுலகர்களின்  நிலைப்பாடு

எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்த காதல் திருமணங்கள் இப்போது எல்லோர் இல்லங்களிலும் மெதுவாக எட்டிப்பார்த்து நுழைய முயற்சிக்கின்றன . நிழல் நிதர்சனமாகிறது

கட்டுப்பாடுகள்,, ஆசாரங்கள்,திரை மறைவுகள்  இரும்புக்கோட்டைகள் சாதி மதம் மொழி  எவையும் காதலுக்குத் தடை போட முடியவில்லை


காதலில் பலவகை உண்டு .

ஓன்று தன் உறவு வட்டத்துக்குள் காதலிப்பது . இது பெரும்பாலும் பாதுகாப்பானது பிரச்சனைகள் குறைவு

அடுத்து இனம் மொழி என்ற வட்டத்துக்குள் காதலிப்பது ,இதுவும் ஓரளவு பாதுகாப்பானதே

இனம் மொழி இவற்றில் ஓன்று அல்லது இரண்டுமே கடந்து செல்லும் காதலில் மிகப்பல எதிர்ப்புகள் குழப்பங்கள் சிரமங்கள் வரும் இவை தொடர்ந்து கொண்டே போகும்

முழுக்க முழுக்க வேறுபட்ட கலாச்சாரம் என்று வெளி நாட்டுக் குடிமக்களை துணையாக அடைவதில் வரும் பிரச்சைனைகள் எண்ணில் அடங்காதவை

திருமணம் முடித்த துணையையே காதலித்து விட்டால் வாழ்க்கை மிகச் சுவையாக அமையும்

இன்னொரு பக்கம் காதலித்து மணம் புரிந்தவர்களே மனமுறிவு ஏற்பட்டு மணமுறிவில் முடிவது அதிகமாகக்  கேள்விப்படுகிறோம் .அதே போல் பெற்றோர் பார்த்து இருவர் சம்மதத்துடன் நடக்கும் திருமணங்களிலும் விரிசல், உரசல், முறிவு எல்லாம் வருகின்றன

காதலுக்காக குடும்பம், குடியிரிமை, பட்டம் பதவி சொத்து சுகம் வாழ்க்கை  ஏன் உயிரைக்கூட துறந்தவர்கள் பற்றிக் கேள்விப்படுகிறோம்

இவ்வளவு அற்புதங்கள் மாற்றங்கள் புரியும் காதல் என்றால் என்ன ?


“---இது உடலும் மனமும் சார்ந்த ஒரு மாற்றம், இதில் பல நிலைகளில் பற்பல  வேதிப்பொருட்கள் சுரந்து பல மாற்றங்களை உண்டாக்குகிறது என்று உளவியல், உடலியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்

 மனதிலும் உடலிலும் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கும் காதலை
 காமம் , ஈர்ப்பு , இணைப்பு
என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்   என்கிறார்கள் . அறிஞர்கள்

மூன்றாம் நிலையான இணைப்புதான் காதலாக உருவாகிறதாம்

காதலுக்கு அடிப்டை காமம் என்றாலும் அது மட்டுமே காதல் இல்லை

அடுத்த நிலையான ஈர்ப்பில்தான் தூக்கமின்மை பசியின்மை எல்லாம் வரும் .மனம் ஒரு பரபரப்பில் இருக்கும் விண்ணையும் சாடுவோம் போன்ற வீர தீர எண்ணங்களும் தோன்றும்

மூன்றாம்  நிலையான இணைப்புதான் நிலையான காதல், திருமணம், பிள்ளைப்பேறு போன்றவற்றுக்கு வழி வகுக்கும்  . இந்த நிலையில் சுரக்கும் மிக முக்கியமான வேதிபபொருள்

ஆக்சிடோசின்.

 இது உணர்வுகளைத்தூண்டி காதலை நிலைப்படுத்துவத்தோடு
பொறாமை உணர்வையும் தூண்டுகிறதாம்

காதல், (திருமணம் ) நிலைத்து நிற்க அறிஞர்கள் கூறும் அறிவுரை---

காமம் வேறு காதல் வேறு . இரண்டும் ஓன்று என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
ஆழ்ந்த காதலில் இறங்குமுன் ஒருவரை ஒருவர் நன்றாப்புரிந்து கொள்ளுங்கள் எனபதுதான் ---:

 மண முறிவுக்கு குறிப்பாக பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணங்களின் தோல்விக்கு அறிஞர்கள் கூறும் காரணங்கள்

சமூக நிலையில் ஏற்றத்தாழ்வு
புரிதல் இல்லாததால் ஏற்படும் இணக்கமற்ற தன்மை
தாய்மார்கள, மாமியார்கள் பங்கு
சீர் வரிசை, கைக்கூலி
தன் துணையைப் புரிந்துகொள்ள மறுக்கும் தன்னலம்

இந்தக்காரணிகளை முறியடிக்கும் ஒரே சக்தி உள்ளங்கள் ஓன்ராக இணைந்து காதல் வயப்படுவதுதான் என்கிறார்கள்

அதாவது திருமணத்துக்குப்பின் ஒருவரை ஒருவர் நேசிப்பது

இப்பகுதியை நிறைவு செய்யுமுன் என் கருத்துக்கள் (அறிவுரை அல்ல) சில

அப்பா அம்மா பார்த்த பெண்ணையோ பையனையோ கட்டிக்கொண்டு நன்றாகத்தானே இருக்கிறோம் என்ற பாட்டையெல்லாம் இனி மறந்து விடுங்கள்

காலச்சக்கரம் சுழலும் வேகத்தில் ஏற்படும் மிக வேகமான மாறுதல்களைப் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் ஓரத்தில் ஒதுக்கப்படுவார்கள்  

ஆணும் பெண்ணும் சந்திப்பதே அரிதாக இருந்த பல சமுதாயங்களில் இப்போது இருவரும் இயல்பாக சந்தித்துப் பேசும் நிலை உருவாக்கி வருகிறது

பெண்கள் ஏன் ஆண்கள் கூட உணவு விடுதிக்கு செல்வது தவறாகப் பார்க்கப்பட்ட காலம் மாறி ஆண்கள், பெண்கள், குடும்பங்கள் எல்லாம் வாரம் ஒரு முறையேனும் உணவு விடுதி போவது வழக்கமாகிவிட்டது  கட்டாயமாகி விட்டது

பாவடை தாவணி சேலைதான் பெண்கள் உடை என்பது மாறி எதை வேண்டுமானாலும் அணியலாம் என்ற நிலை

கை நிறைய காசு, கருத்துச்சுதந்திரம் இவை இளைய தலை முறையின் அடையாளங்கள்

அவர்களைப்புரிந்து கொண்டு அவர்கள் எண்ணங்களை, விருப்பங்களை நிறைவேற்ற முயலுங்கள்
 .
திருமணம் பற்றி அவர்கள் கருத்துக்களை முழுமையாகக் கேட்டு அறிந்து  கொள்ளுங்கள் .

என் பிள்ளைக்கு காதலெல்லாம் வராது என்ற எண்ணத்தைத் தூக்கி எறியுங்கள்

.அவர்கள் அச்சமின்றி தங்கள் கருத்துகளை வெளியிடும் அளவுக்கு அவர்களுடன் இயல்பாகப் பேசிப் பழகுங்கள்

இளைஞர்களுக்கு


உங்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள் உங்கள் பெற்றோர்தான்

அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்காமல் உங்கள் விருப்பங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் தேர்வு உங்களுக்கு ஊறு செய்வதாய் இல்லாமல் இருந்தால் பெற்றோர் பெரும்பாலும் சம்மதிப்பார்கள்.

தேர்வு சரியென்று நீங்கள் கருதினால் அவர்களை  சம்மதிக்க வைப்பது உங்கள் பொறுப்பு .

தேர்வு சரியாக அமையாவிட்டால் அதன் தாக்கம் உங்களை வாழ்நாள் முழுதும் துரத்திக்கொண்டே இருக்கும்

இ(க)டைச்செருகல்

மேலை நாடுகளில் திருமணத்துக்கு சில வாரங்கள் முன்பு ஆணும் பெண்ணும் ஒன்றாகப்போய் சர்ச்சில் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யவேண்டும்

அப்போது  ஒருவரையொருவர் எத்தனை காலமாய்த் தெரியும் என்று கேட்பார்கள்

எப்போதுமே பெண் சொல்லும் பதில் ஆணை விட இரண்டு மூன்று ஆண்டுகள் அதிகமாகத்தான்  இருக்கும்

                     (எப்போதோ ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் படித்தது )



இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்




வலை நூலில் படிக்க

கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment