7. ஏர்முனையில் கம்பன்
உழவர் உழும்போது ஏர் முனை ஆழமாகப் பாய்ந்து மண்ணைக் கிழித்து
செல்கிறது . யானை போன்ற எருதுகளை “தே தே” என்று வானத்து இடிபோல் உரப்பி
ஓட்டுகிறார்கள். அவ்வாறு ஏர்முனை நிலத்தைக் கிளருங்கால் என்ன விளைவுகள்
ஏற்படுகின்றன என்பதைக் கம்பன் தனக்கே உரித்தான கற்பனைக்கடலில் கப்பல் கட்டி நம்மை
ஏற்றிச் செல்கிறான்
கடலைக் கிழித்துக் கொண்டு கப்பல் செல்வது போல் பொன்னிறமான மண்ணை
தள்ளிச் செல்லும் ஏர்முனையால் தாமரை முளைகள் பெயர்க்கப்படுகின்றன
தாமரையை “முள்ளரை. முளரி “ என்று அழைக்கிறான் கம்பன் . அதன் முனை
வெள்ளி போல் மின்னுகிறது . அதை முளை வெள்ளி என்றே கூறுகிறான் .”முள்ளரை முளரி
வெள்ளி” என்றே கூறிய கம்பன் அதை உண்மை
வெள்ளியாகவே கற்பனை செய்து மன்னருக்கு வெள்ளி அவசியமற்ற பொருள்தானே என எண்ணுகிறான்
. வெள்ளி மட்டும் என்ன முத்தும் பொன்னும் மணியும் கூட அவன் இலட்சியம் செய்யும்
பொருள் அல்லவே !
முத்தும் மணியும் பொன்னும் வெள்ளியும் வியாபாரிகளுக்கும் தொழுதுண்டு
வாழ்வாருக்கும் முக்கியம் . அதன் மூலம் அவர்கள் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக்கொள்ள
முடிகிறது.
ஆனால் உணவை உற்பத்தி செய்பவனே உழவனாயிற்றே ! அவனுக்கு இந்த வெள்ளி
தங்கம் முத்து பவளம் எல்லாம் எம்மாத்திரம் ! எனவே கூறுகிறான்
“முள் அரை முளரி வெள்ளை முளை இற முத்தும் பொன்னும் தள்ளுற மணிகள் சிந்த “
இந்தக்கற்பனையினின்று மறுபடியும் நிலத்தைப் பார்க்கிறான் சலஞ்சலம்
புலம்புகின்றன சலஞ்சலம் என்பது சில ஆயிரம் சங்குகளுக்கிடையே வதியும் ஒரு அபூர்வச்
சங்கு .அச்சங்குக் கூட்டங்கள் அங்கு கிடந்து ஏர்முனையால் தொல்லையுற்றுப்
புலம்புகின்றன .
இன்னும் வயலில் மீன்கள் துள்ளிக்கொண்டிருந்தன . அவை உழு சாலில் நின்று
வெளியே எறிபப்பட்டுத் துடிக்கின்றன “சாலில் துள்ளி மீன் துடிப்ப”. ஆமைகள் தலை
கால்களை உள்ளே இழுத்துக்கொண்டு ஏர் முனைக்குத் தப்புகின்றன.”ஆமை தலை புடை கரிப்ப “
இன்னும் வரால் மீன்களும் வழிகின்றன அக் கழனியில். அவை பெரியவை
.ஏர்முனை வேகமாகப்பாய்ந்து வருவதை அறிந்து தூம்புகளில் அவை ஒளிந்து கொள்கின்றன
அவ்வளவு வளம் பொருந்திய கழனியில் உழும் உழவனுக்கு தங்கம் வெள்ளி
முத்து போன்ற இவை யாவும் ஒரு பொருட்டல்ல என்ற உண்மையை உணர்த்த “உழுதுண்டு வாழ்வாரே
வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்ற முனிவர் கருத்தை கம்பன்
இக்கவி மூலம் நமக்குக் கூறுகிறான்
முள் அரை முளரி வெள்ளை முளை இற முத்தும் பொன்னும்
தள்ளுற மணிகள் சிந்த , சலஞ்சலம் புலம்ப ,சாலில்
துள்ளி மீன் துடிப்ப , ஆமை தலை புடை கரிப்பு தும்பின்
உள்வரால் ஒலிப்ப –மன்னர் உழு பகடு உரப்புவாரும்
(பால காண்டம் , நாட்டுப்படலம் 18)
எழுத்தாக்கம்
ஹாஜி கா. பீர் முகமது பி .எஸ்சி
நகராட்சி ஆணையர் பணி ஒய்வு
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B F FT W
27092019 fri
No comments:
Post a Comment