Sunday, 1 September 2019

ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர்












அப்பாடி ஒரு வழியாக செப்டம்பர் வந்து விட்டது
கடந்து சென்ற ஆகஸ்ட் ஒரு நீ..................ள............மா ...............ன காலமாகத் தோன்றியது
ஆகஸ்ட் முதல் நாள் என் தம்பியின் புனிதப்பயணம்
அரபாத் நோன்பு தியாகத்திருநாள் , , விடுதலை நாள் என தொடரும் நிகழ்வுகள்
உறவினர் மறைவு நண்பர் மறைவு
நெல்லை பயணம் அங்கே ஒரு சிற்றுலா அது பற்றி பத்துப் பகுதிகள் பதிவு
குறிப்பாக படித்த கல்லூரி ,பணியில் நுழைந்த வங்கிக்கிளை ,
முகநூலில் என் பதிவு தடை செய்யப்பட்டது அதுவும் கல்லூரி பெயரைப் போட்டதற்காக முகநூல் நண்பர்  வட்டம் இரண்டாயிரத்தைத் தாண்டியது
முகநூலை விட்டு வெளியேற எண்ணம் தோன்றியது
நாட்டு நடப்பென்றால்
ஜம்மு
ப சி கைது
வங்கிகள் ஒருங்கிணைப்பு அறிவிப்பு   
சில தலைவர்கள் மறைவு
நாட்டின் பொருளாதாரம் பற்றி வல்லுனர்கள் அறிஞர்கள் எச்சரிக்கை
புதிய மாவட்டங்கள் பற்றி அறிவிப்பு
வறட்சி நீங்க கொட்டிய மழை
அதற்கு இணையாக கொட்டித்தீர்த்த உடன்பிறப்புகளின் வாழ்க்கை கதைகள்
ஜூலை ஆகஸ்ட் இரண்டும் நாள் கணக்கில் ஒரே அளவுதான் .ஆனால் ஆகஸ்ட் நீண்டுகொண்டே போனது போல் இருந்தது .
Time is relative என்பது கண்கூடாகத் தெரிகிறது

sherfuddinp.blogspot.com

B F W 010192019 sun

No comments:

Post a Comment