இயற்கையின் அழைப்பு
மூன்று முறை போனால் சிறப்பு
இரு முறை போனால் நல்லது
ஒரு முறையாவது கண்டிப்பாகப் போக வேண்டும்
இரண்டு நாள் போகாவிட்டால் உடல் நலம் கெடும்
மூன்று நாள் போகவிட்டால் மிகவும் கேடு
இவற்றில் எது சரி என்பது பற்றி கருத்துச் சொல்ல நான் முன் வரவில்லை
ஏனென்றால் சொன்னவர்கள் மருத்துவ அறிஞர்கள், மாற்று மருத்துவர்கள்
நடை முறை எப்படி என்று பார்ப்போம்
இரவு ஒன்பது மணிக்கு உறங்கி காலை ஐந்து மணிக்கு எழுந்து இயற்கையோடு
இணைந்த வாழ்வு, நல்ல , கலப்படமில்லாத உணவு ,நிறைய நடை உடல் உழைப்பு இருந்த கால
கட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை இரு முறை என்பதெல்லாம் சரியாக இருந்திருக்கலாம்
இப்போதோ தலைகீழ் மாற்றம் . காலை ஐந்து மணிக்கு உறங்கப்போய் இரவில்
விழிப்பது மிக இயல்பான நடை முறை ஆகி விட்டது
பத்தடி தொலைவில் இருக்கும் இடத்துக்கும் நடந்து போக முடியாது , உடல்
உழைப்பு என்பது மிகவும் குறைந்து விட்டது . உணவுப்பழக்கம் நிறைய காபி தேநீர்
விரைவு உணவுகள் என்று மாறி விட்டது
தேங்காய் போன்ற பல நல்ல உணவுகளை இது கொழுப்பு, இது உப்பு, இது
சர்க்கரை என்று இள வயதினர் கூட ஒதுக்குவது கண்கூடு
காய்கறி கீரை இதெல்லாம் பிடிக்காது
இதெல்லாம் தவறா சரியா என்ற வாதத்திற்கு நான் வரவில்லை
ஆனால் எல்லாமே மாறிய பின் அது மட்டும் அப்படியே இருக்குமா ?
இதில் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது சில மாதங்கள் முன்பு பல
இடங்களில் குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்த கடுமையான தண்ணீர்
பற்றாக்குறையை யாரும் மறந்திருக்க முடியாது
நாலு பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பத்தில் எல்லோரும் மூன்று முறை
போனால் ஆகக் குறைந்தது ஒரு நாளைக்கு
பணிரெண்டு வாளி(பக்கெட்) தண்ணீர் வேண்டுமே
ஓலா உபெர் நிறுவனங்கள் இதை சந்தைப்படுத்தி நகரும் அறைகள் கொண்டு
வருவதாகவும் ஒரு செய்தி வந்தது
சரி தினமும் போகாவிட்டால் என்ன ஆகும் ?
ஒன்றும் ஆகாது
அதைப்பற்றியே சிந்திக்காமல் அதன் போக்கில் விட்டு விடுங்கள்.
சிந்திக்க சிந்திக்க அதுவே மன அழுத்தத்தை உண்டாக்கி உடல் நலக்குறைவாக மாறி மேலும்
அழுத்தம் கொடுக்கச் செய்யும் .அதிக அழுத்தம் கொடுத்தால் இதயம் பாதிக்கப்படும்
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை எளிதில் போய்விட்டால்
போதும் .ஒரு வாரம் பத்துநாள் போகாதவர்கள் பலர் நலமுடன் வாழ்கிறார்கள்
உடலின் பல இயக்கங்கள், தேவைகள் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி
இருக்கும் , எனக்கு எவ்வளவு உணவு தேவை, எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதெல்லாம்
என் உடல், மனம்தான் முடிவு செய்ய வேண்டும்
இதை மருத்துவரோ மற்ற யாருமோ முடிவு செயமுடியாது
வயிறு வலி, வயிறு கனமாக இருத்தல் போன்ற சுகவீனங்கள் இருந்தால் ஒழிய
இளக்கி வில்லைகள், மருந்துகள் வேண்டாம்
கீரை , காய்கள் பழங்கள் முடிந்த அளவுக்கு சேர்த்துக்கொள்ளலாம்.
கொய்யாப்பழம் நல்ல பலன் தரும்
மனம் அமைதியாக இருந்தால் உடல் அமைதியாகும் வயிறு அமைதியாகும்
காலை இஞ்சி பகலில் சுக்கு மாலை கடுக்காய் சாப்பிடலாம் (கடுக்காய்-
நாற்பது வயதுக்கு மேல்தான் சேர்க்க வேண்டும்)
திரிகடுகு சூரணம் (பொடி)
சிறிதளவு வெந்நீரில் கலந்து இரவில் குடித்தால் வயிறு தொடர்பான பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்கிறார்கள்
சில எளிய ஆசனங்களும் சில அழுத்தப் புள்ளிகளும் இருக்கின்றன . அவற்றைப்
பின்பு வேறு பகுதியில் பார்ப்போம்
இணைந்த ஒய்வு அறை , மேற்கத்திய பாணி இவை காலத்தின் கட்டாயமாகி விட்ட
நிலையில் இவற்றின் நன்மை தீமைகள் பற்றி விவாதிப்பது வீண் வேலை
அருகில் இருந்தால் அடிக்கடி போகச்சொல்லும் எனவே இட வசதி இருந்தால்
கொஞ்சம் தள்ளி வைதுக்கொள்ளலாம்
சிலர் நெற்றிக்கண் திறப்பது தெரிகிறது
எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்
.sherfuddinp.blogspot.com
B F W 12092018
Thu
No comments:
Post a Comment