Tuesday, 15 September 2020

தனி ஒருவனுக்கு --------

 


ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே என்று ஆடிப்பாடி மகிழ்ந்த பாரதி விடுதலைக் காற்றை நுகராமலே மறைந்து விட்டான்

இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்

தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்

என்று அவன் பாடி நூறாண்டுக்கு மேலாகி விட்டது  

இன்னும் பாரதி சொன்ன விதியை நடைமுறைப்படுத்த முடியவில்லை

 

உணவைப்பார்த்து , அரிசியைப் பார்த்து பல நாட்களாகி விட்டன . பிஸ்கட்டும் தண்ணீரூம் மட்டுமே அவர்கள் உணவாக இருக்கிறது உணவில்லாமல் ஐந்து வயது குழந்தை உயிரையே விட்டுவிட்டது .

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எதாவது கொடுத்தால்தான் எங்களுக்கு சாப்பாடு என்கிறார் அந்தக் குழந்தையின் தாய்

 

அதே பகுதியில் இன்னொரு வீட்டில் பதினாறு வயதுப்பெண்ணுக்கு குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்கிறது என்ன நோய்? சரியான உணவின்மைதான்.

இந்தபஞ்சமும் பட்டினிச் சாவும் எங்கோ ஆப்ரிக்க நாடுகளில் இல்லை .பாருக்குள்ளே நல்ல நம் பாரத நாட்டில்தான்

 உலகப்புகழ் பெற்ற ,உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இருக்கும் ஆக்ராவுக்கு அருகில்தான் இந்தத் துயரம் நடைபெற்றது

சிறிய அளவில் காலணிகள் உறபத்தி செய்து விற்பனை செய்வது அந்தப்பகுதியில் உள்ளவர்களுக்கு  தொழில்

ஊராடங்கால் தொழில் முடங்கி பிழைய்பு கெட்டுப்போய்விட்டது வேறு வருமானம் இல்லை . அரசு ஒன்றும் செய்யவில்லை

“ ஒரு இரண்டு வாரம் சிறிய வேலைகள் செய்து நானூறு ரூபாய் கிடைத்தது . அதுவும் ஒரு மாதம் முன்பு . .அந்தப்பணத்தில் அவ்வப்போது மூன்று, நான்கு ரூபாய்க்கு கொஞ்சம் பருப்பு வாங்கி, பொது விநியோகத்தில் கிடைக்கும் அரிசியோடு சேர்த்து கிச்சடி செய்து சாப்பிடுவோம். காய்கறி , பால், பழம் இதெல்லாம் பார்த்தே நீண்ட காலம் ஆகி விட்டது “ இது ஒரு குடும்பத் தலைவரின் கண்ணீர்க் கதை

மிக மிக அடிப்படைத் தேவையான உணவு கூட எல்லோருக்கும் கிடைக்கவில்லை . இதில் பறக்கும் தொடரி ,,  நேர்த்தி நகரங்கள்  , விண்வெளிப்பயணம்  என்றெல்லாம் பேச நமக்கு என்ன அருகதை இருக்கிறது ?

இதெற்கெல்லாம் மேல் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத் திட்டம் வேறு

வாய்ச்சொல்லில் வீரரடி என்பதா!

நெஞ்சு பொறுக்கிதில்லையே  என்று புலம்புவதா !!

(Source The Hindu 14092020)

15092020tue

sherfuddinp.blogspot.com


 

Please support and subscribe my channel

My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA

 

 

 


No comments:

Post a Comment