Wednesday, 23 September 2020

தமிழ் மொழி அறிவோம் சான்றோன் என

 



சான்றோன்
என

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

 

மிகப் பெருமளவில் பயன்பாட்டில் உள்ள குறள்களில் ஓன்று 

இந்தக்குறளுக்கு  மு. வ அவர்கள் தரும் விளக்கம்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

 

குறளும் பொருளும் படிக்க எளிதாகத்  தெளிவாகத்தான் இருக்கிறது

 

பேறுகாலத்தில் பெண்ணுக்கு ஏற்படும் வலி எல்லோரும் அறிந்தது, கேள்விப்பட்டது

 

எலும்புகள்  நொறுங்கி உடைவது போல் அந்த அளவுக்கு வலி உண்டாகும் என்று சொல்கிறார்கள்

 

அப்படியிருக்கையில் ஈன்ற பொழுதின் உவப்பு என்கிறான் வள்ளுவன்

 

அதன் பொருள் என்ன ?

 

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

 

22092020tue

sherfuddinp.blogspot.com

 

 

 

உடல் வலியின் அளவு   டெல் என்னும் அலகில் கணக்கிடப்படுகிறது .

மனித உடல் நாற்பத்தி ஐந்து டெல் அளவுக்குமேல் வலி தாங்காது

ஆனால் பேறுகால வலி  ஐம்பத்து ஏழு   டெல் அளவுக்கு இருக்கும் இது  இருபது எலும்புகள் உடையும் அளவுக்கு உள்ள வலி என்று ஒரு கருத்து உலவுகிறது

 இந்தக் கருத்து சரியா தவாறா என்றெல்ல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நிறைய உண்டு

 

ஆனால் பெரும்பாலான பெண்கள் கடுமையான பேறுகால வலியை உணர்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை

 

இந்த நிலையில் எப்படி வள்ளுவர் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிறார் ? இது அறியாமையா ? இல்லை இல்லை அறிவின் நுட்பம், அறிவியல் அறிவு

 

பேறுகாலத்தின்வலியை உணர்ந்த பெண்கள் அந்த வலியை மறக்கும் அளவுக்கு ஒரு இன்ப உணர்வு உடலெங்கும் பரவி ஒரு பரவச நிலையை அடைகிறது

 

இந்த அற்புதத்தை நிகழ்த்துவது என்டோர்பின் எனப்படும் ஒரு சுரப்பு

 

இடய்பற்றி புரிந்து கொள்ள நம் உடலின்  அடிப்படை அமைப்பை தெரிந்து கொள்ள வேண்டும் .

 

மிகச் சுருக்கமாகத் தர முயற்சிக்கிறேன்

 

பணிகளின் அடிப்படையில் நமது உடல் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது

 

நமக்கு நன்கு தெரிந்தவை

செரிமான மண்டலம் (வயிறு) சுவாச மண்டலம் (நுரைஈரல் ) நரம்பு மண்டலம் (மூளை ) குருதி ஓட்ட மண்டலம் (இதயம்)

 

நாளம் இல்லாச் சுரப்பிகள் மண்டலம் மிகவும் குறைவாக அறியப்பட்ட்டாலும் இதன் பணிகள் உடல், மன வளர்ச்சி, இனப்பெருக்கம் , செரிமானம், இதயத் துடிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன

 

தைராயிட், அட்ரீனலின். பிட்யூட்டரி  இவை ஓரளவு கேள்விப்பட்ட  நா, இ. சுரப்பிகள். 

தைராயிட் இப்போது மிகப்பரவலாகப் பெசப்பட்டுகிறது ,இது உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் சுரப்பி .ஒருவர் உயரமா குள்ளமா போன்ற பலவற்றைத் தீர்மானிக்கும் சுரப்பி

 

அட்ரீனலின் – நாய் துரத்துவது போன்ற எதிர்பாராத ஒரு தீங்கை எதிர்கொண்டு சமாளிக்க உடலுக்கு வலிமை கொடுப்பதோடு   இதயத் துடிப்பையும் கட்டுப்படுத்துகிறது  தாக்கு அல்லது தப்பித்து ஓடு (Fight or flight ) சுரப்பி என்ற பெயர் கொண்ட இது பற்றி பின்பு எப்போதாவது பார்ப்போம்

 

இவையெல்லாம் போக , இனப்பெருக்கம், தாய்மை , பேறுகாலம் ,குழந்தை பராமரிப்பு போன்ற சிறப்புப் பணிகளுக்காக பல சிறப்பு சுரப்பிகள் உள்ளன

அவற்றில் சிலபற்றைப்பார்போம்

 

 

ப்ரோடாசின் – தாய்மய்ச் சுரப்பி எனப்படும் இது தாய்ப்பால் சுரக்கவும் , தாயின் வயிற்றில் இருந்து வெளியே வரும் குழந்தை புது உலகத்துக்கு பழகிக்கொள்ளவும் உதவுகிறது

 

 

ஆக்சிடோசின்

கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு , தாய்ப்பால் சுரப்பு பு போன்றவற்றை சீர் செய்யும் இது பாசச்சுரப்பி என்ற பெயர் கொண்டது

 

 

என்டார்பின்ஸ்

உடலில் மனதில் அழுத்தம் , வலி அதிகம் ஆனால் உடலில் சுரக்கும் எண்டார்பின், வலியை மட்டுப்படுத்தி, ஒரு பரவச நிலையை அடையச் செய்யும்

 

இந்த என்டர்பின்  சுரப்பிதான்  பேறுகாலத்தில் உடலெங்கும் பாய்ந்து பரவி  வலியை மறந்து ஒரு பரவச நிலையை அடைய பெரிதும் உதவுகிறது இந்தப்பர்வச நிலை தான் வள்ளுவன் கூறும் ஈன்ற பொழுதின் உவப்பு

 

இது தாய்மைக்கு மட்டும் உள்ள ஒரு தனிச் சிறப்பு

எனவேதான் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன் என்றாலும் ஈன்ற பொழுதின் பெரிதுவப்பதில் தந்தைக்குப் பங்கு கிடையாது

 

முடிந்த அளவுக்கு சுருக்கமாக விளக்கி இருக்கிறேன் . தெளிவாக இருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்

இறைவன் நாடினால் மீண்டும்  வேறொரு பதிவில் சிந்திப்போம்

 

23092090wed

sherfuddinp.blogspot.com

 

Please support and subscribe my channel

My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA

 

 

No comments:

Post a Comment