Thursday, 17 September 2020

குயிலே குயிலே குயிலக்கா

 



உங்களுக்குத் தெரியுமா ?

 

கூவும் குயிலை பெண்ணாக  உருவகப்படுத்தி கவிஞர்கள் நீதானா  அந்தக்குயில் என்றும் குயிலே குயிலே குயிலக்கா என்றும் பாடினாலும் இனிமையான குரலில் கூவுவது பெண் குயில் அல்ல ஆண்குயில்தான்  

 

போன வாரம  குயில் ஓசையைப் பதிவு செய்து வெளியிட்டிருந்தேன் . தொடர்ந்து பல நாட்கள் குயில் ஓசை மணிக்கணக்கில் ஒலித்தது ஒரு சிறிய பறவைக்கு இவ்வளவு  திறமையை திறனைக்கொடுத்த படைப்பின் அற்புதம், படைத்தவன் பெருமையை நினைத்து வியந்தேன்

 

அந்த வியப்பில் குயில் பற்றி மேலும் செய்திகளை வலையில் தேடினேன் . கிடைத்தவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து  கொள் கிறேன்

 

பெண் குயிலின் குரல் அவ்வளவு இனிமையாக இருக்காதாம் . கிக் கிக் என்று கத்துமாம் .அதிகாலையில் மட்டும் பெண்குயில் பாட அதைத் தொடர்ந்து ஆண் குயில் பாடுமாம்

மற்ற  நேரங்களில் ஆண்குயில் மட்டுமே கூவுமாம் . அதிலும் ஒரு ஒழுங்கு. துவக்கம் ஒரு தாழ்ந்த குரலில் பிறகு படிப்படியாக குரல் உயர்ந்து ஏழு எட்டு முறை ஒலித்து பிறகு ஒரு சிறிய ஒய்வு .பிறகு மீண்டும் தாழ்ந்த குரலில் துவக்கம்

 

எழு சுரங்களின் பிறப்பிடம் இதுதானோ

 

இன்னும் முதலில் ஒரு குயில் கூவ, அதன் எதிரொலி போல சற்றுத் தொலைவில் இருந்து இன்னொரு குயில் கூவ அதைத் தொடரந்து மூன்றாம் குயில் கூவ ஒரு இன்னிசை நிகழ்சியே நடக்குமாம் .

கேட்க முயற்சி செய்ய வேண்டும்

 

இவ்வளவு அழகாக் கூவும் குயில்  ஒரு கள்ளப் பறவை என்பது எல்லோருக்கும் தெரியும் முட்டை இடத் தெரிந்த குயிலுக்கு கூடு கட்ட, அடைக்காக்கத் தெரியாது  அதற்காக இனப்பெருக்கத்தை நிறுத்த முடியுமா ?

 

காக்கைக் கூட்டில் போய் குயில் முட்டை இடுமாம் . அதற்காக குயில் செய்யும் தந்திரங்கள் மீண்டும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன

 

காக்கைகள எப்படிக் கூடு கட்டும் என்பது ஒரு தனிகதை ,. அது இப்போது வேண்டாம் .ஆண் குயிலும் பெண் குயிலும் சேர்ந்து நல்ல , பாதுகாப்பான காக்கைக் கூட்டைத் தேர்ந்தெடுக்குமாம்

 

அப்படிதேர்வு செய்த கூட்டில் இருந்து ஒரு முட்டையை ஆண்குயில் தூக்கிக் கொண்டு பறக்குமாம் . அதைத் துரத்திக்கொண்டு காக்கை போகும்போது பெண்குயில் அந்தக்கூட்டில் முட்டை இட்டு விடுமாம் . காக்கைக்கு முட்டையின் எண்ணிக்கையில் மாறுபாடு தெரியக்கூடாது என்பதற்காக தேவையான அளவு காக்கை முட்டையை கூட்டை விட்டு வெளியே தள்ளி விடுமாம் குயில்

 

பொறித்த புதிதில் குயில் குஞ்சின் குரலும் உருவமும் காக்கைக் குஞ்சு போலவே இருப்பதனால் தாய் காக்கை அதற்கும் சேர்த்து உணவூட்டுமாம்

 

இப்படி ஓவ்வொரு உயிரையும்  துல்லிதமாகப் படைத்த அந்த ஏக இறைவனை மீண்டும் மீண்டும் நினைக்காமல் இருக்க முடியவில்லை

 

நிறைவாக ஒரு சிறிய வினா

 

காக்கை பற்றி புனிதத் திருமறை குரான் சொல்லும் செய்தி என்ன ?

 

இதற்கான விடையுடன் இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

 

17092020thu

sherfuddinp.blogspot.com


Please support and subscribe my channel

My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA


 

 


 

 

 

No comments:

Post a Comment