Friday, 18 September 2020

முதல் காதல்

 



உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை சண்டை சச்சரவு , போர் எல்லாமே பெண் பொன்  மண்ணுக்ககத்தான்

மனித இனத்தின் முதல் கொலையும்  ஒரு பெண்ணுக்ககத்தான்

 முதல் மனிதன் ஆதமை  இறைவன்  களிமண்ணினால் படைத்து   உயிரூட்டி  ஞானம் அளித்து  உலகின் முதல் நபியாகவும் ஆக்கினான்  

சரி ஆதமுக்கு ஒரு துணை வேண்டுமே . முதல் பெண்மணி ஏவாள் எனப்படும் ஹவ்வா .

அவர் எப்படிப்படைக்கப்பட்டார் ?

ஆதமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டதாக பைபிள் கூறுகிறது . யூதர்களின் சட்ட நூலான தல்முத் இன்னும் குறிப்பாக ஆதமின் இடதுபுற பதிமூன்றாவது விலா எலும்பில் இருந்து என்று சொல்கிறது

பெண்களை விட ஆண்களுக்கு ஒரு விலா எலும்பு குறைவாக இருப்பதாய் ஒரு கருத்து இருக்கிறது அது உண்மையா என்பதை மருத்துவர்கள்தான் சொல்ல வேண்டும் 

புனித குர்ஆனில் ஏவாள் எப்படிப் படைக்கப்பட்டார் என்பது பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை

 

ஆதம் ஏவாள் உலகின் முதல் இணை

அடுத்தடுத்து வாரிசு உருவாக ஒரு ஆணும் பெண்ணும் தேவை .உலகில் ஒரே ஒரு இணை இருக்கும் இந்தக் கால கட்டத்தில் அந்த இணைக்குப் பிறந்த ஆண் பெண் , அதாவது உடன் பிறப்புகள் மூலம்தான் அடுத்த வாரிசு உருவாக முடியும்  ,

ஆதம் ஏவாளின் ஒரு  பெண்ணை   அவர்களின் இரு ஆண்கள்( ஹாபில் , காபில் Haabeel and Qaabeel - )விரும்புகிறார்கள் .இந்த விருப்பம் போட்டியாக மாறி.சண்டைமூண்டு  ஒருவரை மற்றவர் கொலை செய்து விடுகிறார்

உலகின் முதல்கொலை ஒரு காதல் கொலையாக, ஒரு பெண்ணுக்காக நிகழ்கிறது

கொலை செய்யப்பட்ட  உடலை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் கொலை செய்தவர்

அப்போது இறைவன் அங்கு ஒரு காகத்தை அனுப்பி வைக்கிறான். அந்தக்காக்கை  மண்ணைத் தோண்டுகிறது .அதைப் பார்த்து மண்ணைத் தோண்டி தன் உடன் பிறப்பின் உடலத்தைப் புதைக்கிறார் ஆதமின் மகன்

ஒரு காக்கைக்கு இருக்கும் அறிவு கூட தமக்கு இல்லையே என வருந்தும் அவர் தான் செய்த கொலைக்காவும் மிகவும் வருந்துகிறார்

இதுதான் நான் நேற்று குயில் பற்றிய பதிவின் நிறைவ்ப்பகுதியில் கேட்ட வினாவுக்கு விடை

ஒரு சிலராவது விடை சொல்வார்கள் என எதிர்பார்த்தேன் . வினாவைப் பார்த்தார்களா என்பதே தெரியவில்லை

மிக நீண்ட விளக்கங்களை மிகச் சுருக்கமாக முடிந்தவரை தெளிவாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்

(Source Quran 4:1- creation of man

5:27 to 31- quarrel, murder, and crow – raven

And Towards understanding Quran)

இறைவன் நாடினால் மீண்டும் வேறொரு பதிவில் சிந்திப்போம்

18092020fri

sherfuddinp.blogspot.com

 Please support and subscribe my channel

My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA

No comments:

Post a Comment