Saturday 31 October 2020

முகமூடி மனிதர்கள்

 



இப்படித் திடீரென கேட்பார் என திர்பார்க்கவிலலை .

.அலுவல் முறையில் அறிமுகமாகி சில நாட்களில் மிக நெருக்கமான  நண்பனாகி விட்ட அவர்

ஒருநாள் மாலை அலுவல் வேலைகளை ஒருவழியாக நிறைவு செய்து வங்கியை பூட்டும் நேரத்தில் வந்தார் 

பேசிக்கொண்டிருக்கையில்

உங்களுக்கு பேய் பிசாசு, பில்லி சூனியம் ,ஏவல் இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார் .

இப்படி எதிர் பாராத ஒரு கேள்வி வந்ததும் நான் திகைத்துப் போய்விட்டேன்

“எனக்குத் தெரியவில்லை “ என்று சொன்னேன்

எனக்கு இது பற்றி நிறைய பேச வேண்டி இருக்கிறது . இப்போது வங்கி அடைக்கப்படும் நேரத்தில் நான் உங்கள் நேரத்தை கடத்த விரும்பவில்லை

நாளை எனக்கும் உங்களுக்கும் விடுமுறைதான் ,இருவரும் சந்தித்துப் பேசுவோம் என்று சொன்னார் .

பேய் பிசாசு பற்றிப்பேச இவ்வளவு பெரிய பீடிகையா என்று எண்ணியபடி வீடு போய்ச் சேர்ந்தேன்

நல்லவேளை பேய்க்கனவு எதுவும் வரவில்லை

அடுத்த நாள் காலை பதினோரு மணியளவில் (தரை வழி) தொலைபேசியில் இப்போது வரலாமா என்று கேட்டார் . சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார்

காபி சிற்றுண்டியுடன் பேசத் துவங்கினோம்

நீங்களாவது பேய் பிசாசு பற்றி தெரியவில்லை என்று சொன்னீர்கள் . ஆனால் நான் இதெல்லாம் கிடையவே கிடையாது, மூட நம்பிக்கை ,பத்தாம்பசலித்தனம் என்று அடித்துச் சொல்வேன் அது ஒரு காலம்

சில நிகழ்வுகள் என்  எண்ணத்தை அடியோடு மாற்றிவிட்டன.

அப்போது நாங்கள் வேறு ஊரில் இருந்தோம். துணைவி, நான் இருவரும் பள்ளி ஆசிரியர்கள் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை என அழகான அளவான குடும்பம்

சொந்த வீடு . நிறைய சுற்றம் நட்புகள் அக்கம் பக்கத்தில்

 பிள்ளைகள்இருவரும் நன்றாகப் படிப்பார்கள் மகள் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஒரு குறிக்கோளில் இருந்தார் . நானும் அதற்கேற்றார் போல் பணம் சேர்த்து வந்தேன், நல்ல மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் கட்டணம் பெரிய சுமையாக இருக்காது

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பெண்களுக்கே உரிய சுப நிகழ்ச்சி என் மகளுக்கு .அந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடினோம்

விழா முடிந்த சில நாட்களில் என் மகளிடம் ஒரு மாற்றம் தெரிந்தது , வழக்கத்துக்கு மாறாக தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளத் துவங்கினார்

உடல் மனதில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக இருக்கும் என எண்ணி நாங்கள் அதைப் பெரிது  படுத்தவில்லை.  நாளாக நாளாக வெறித்த பார்வை எதிலும் சிரத்தையின்மை படி ப்பிலும் கவனம் குறைவு ஆனால் தொடர்ந்து நன்றாகப் படிக்கும் மாணவி என்பதால் ஆசிரியர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை

வீட்டில் சூழ்நிலை முற்றிலுமாக மாறி விட்டது மகிழ்ச்சி மறைந்து ஒரு இறுக்கமான அமைதி

என்ன செய்வது என்று சிந்திக்கையில் நிலைமை சற்று மிகவும் மோசமாகிவிட்டது

வீட்டை விட்டு வெளியே வந்து அலங்கோலமாக தெருவில் ஓட , மிகவும் பதறிப்போனோம்

பொது மருத்துவர் உடலில் எந்த நோயும் இல்லை என்றார்

நரம்பியல் வல்லுநர் பெரிதாக ஒன்றும் இல்லை போகப் போக சரியாகிவிடும் என்றார்

உளவியல் வல்லுநர், மன நோய் மருத்துவர் என எல்லோரும் பார்த்தும் எந்த வித முன்னேற்றமும் இல்லை

எங்கள்  இருவரில் ஒருவர் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம்

மந்திரம் தந்திரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லைதான். ஆனால் நாடகள் போகப்போக எதையாவது செய்து மகளை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம்

இந்தக் குழப்பமான நிலையில் என் நண்பர் ஒருவர் மிகவும் தயக்கத்துடன் சொன்னார்
“ எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் இருக்கிறார் . மிகவம் கண்ணியமானவர்

தனக்கு மிகவும் தெரிந்தவர்களுக்கு மட்டும் இது போன்ற மருத்துவ அறிவுக்கு எட்டாத பிரச்னைகளை தீர்த்து வைக்கிறார் . இதற்கு கட்டணம் எதுவும் வாங்காமல் ஒரு சேவையாக செய்து வருகிறார்

நீ சம்மதித்தால் உன்னை அவரிடம் கூட்டிச் செல்கிறேன் “ என்றார்

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த நான் உடனே சரி என்றேன்

அந்த ஆசிரியரைப் பார்த்ததுமே மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது .அப்படி ஒரு கண்ணியமான , அமைதியான தோற்றம் மனதுக்கு இதமான கனிவான பேச்சு

உங்கள் வீட்டைப் பார்க்க வேண்டும் என்றார் கூட்டிச் சென்றேன்  வீட்டின் எல்லா இடங்களையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்தார் .

இந்த வீட்டில் ஓர் இடத்தில்  ஏவல் வைக்கப்பட்டிருக்கிறது . எனக்கு சில தற்காப்புகள் செய்து கொண்டு நாளை வந்து அந்த இடத்தை சரியாகக் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லி விட்டுப்போனவர் அடுத்த நாள் வந்தார்

நீரோட்டம் பார்ப்பது போல் கையை ஒரு விதமாக ஆட்டிக்கொண்டே இங்கும் அங்கும் மெதுவாக நடந்தார் தோட்டத்தில் ஒரு மூலையில்  சற்று நேரம் திகைத்து நின்றார்

இருக்கும் இடம் தெரிந்து விட்டது – இன்னும் இரண்டு நாள் கழித்து வருவேன் அதை எடுக்க . அப்போது நான் அதிகம் பேசும் நிலையில் இருக்க மாட்டேன் எனவே இப்போதே  என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லி விடுகிறேன் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்

காலை ஆறு மணியளவில் நான் வந்து விடுவேன் அன்று பெண்கள் , சிறுவர் சிறுமியர் யாரும் வீட்டில் இருக்க வேண்டாம்

உங்களுக்குத் துணைக்கு மூன்று , நான்கு மனத்திடமான ஆண்களை  வைத்துக்கொள்ளுங்கள்

என் அருகில் யாரும் வராமல் ஒரு ஐந்தாறு அடி தள்ளி நின்று என்னைப்பார்துக்கொண்டே இருங்கள் . இறைவன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கும்

எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்கூட என் அருகில் வர வேண்டாம் .இந்த எண்ணில் இன்னாரைத் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள் .

நல்ல படியாக ஏவலை எடுத்து விட்டால் அதை ஒரு சிறிய பெட்டியில் போட்டு ஒரு பையில் போட்டு உங்களிடம் கொடுப்பேன் .அதை வெகு தொலைவு சென்று கடலில் தூக்கிப் போட்டு விடுங்கள் அதற்கு இரண்டு பேர் வண்டியுடன் ஆயத்தமாக இருக்க வேண்டும் . இரு சக்கர வண்டி வேண்டாம் மகிழுந்து நல்லது  அதற்கு நீங்கள் போக வேண்டாம்

இந்த வேலை முடிந்தவுடன் எனக்குக் கை கால் கழுவ உப்புக் கலந்த வெந்நீர் வேண்டும்  குடிப்பதற்கு நிறைய தண்ணீர் வேண்டும்

ஒரு ஒன்னரை மணி நேரத்தக்குள் இதெல்லாம் நடந்து விடும்

என்று எதோ எதிரியைத் தாக்க படைஎடுக்க ஆயத்தம்  செய்வது  போல் அவர் சொல்லச் சொல்ல எனக்கு  என்னவென்று புரியாத  ஒரு வித அச்சம் ,குழப்பம் .

பிறகு அவர் தொடர்ந்து பேசினார்

இன்னொரு மிக முக்கியமான் செய்தி .

ஏவலை நான் எடுக்கும்போது அல்லது சிறிது நேரத்தில் அதை வைத்தவர் இங்கு வருவார்

என்று சொன்னார்

அடுத்த இரண்டு நாளும் இரண்டு யுகமாகக் கழிந்தது . மூன்றாம் நாள் காலை அவர் வந்து விட்டார் முகம் முற்றிலும் வேறு மாதிரி இருந்தது ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்போகும் மருத்துவர் வெடிகுண்டு அருகில் நெருங்கிய வெடிகுண்டு நிபுணர் இவர்கள் முகத்தில் காணப்படும் பதற்றம் , களைப்பு எல்லாம் அவர் முகத்தில் தெரிந்தது  ஒரு தியான நிலையில் இருப்ப்து போல் வாய் அமைதியாக முணுமுணுத்துக் கொண்டே இருந்தது .

மெதுவாக  தோட்டத்து மூலைக்குப் போய் ஒரு நீளமான கம்பியினால் அங்கு சற்று ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய துணிப்பையை எடுத்தார் . அதற்குள் சில கரித்துண்டுகள் ஆணிகள் இருந்தான் ,அந்தப்பையை  அவர் சிறிய பெட்டிக்குள் போட்டு அடைத்து அந்தப்பெட்டியை ஒரு சிறிய சுருக்குப்பையில் போட்டு மூடி என்னிடம் கொடுதது விட்டு அப்படியே இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிகொண்டார் . சில நொடிகள் கழித்து உப்புத் தண்ணீரில் முகம் கைகாலை நன்றாகக் கழுவிக்கொண்டு நிறைய தண்ணீர் குடித்தார்

இறைவன் அருளால் நான் வந்த வேலை நல்லபடியாக நிறைவேறியது . இனி உங்கள் மகளுக்கு ஒரு குறையும் வராது. நிறைய இறைவணக்கத்தில் ஈடுபடுங்கள் .முடிந்த வரை தான தருமங்கள் செய்யுங்கள்

ஓரிரு மாதங்களுக்கு இந்த ஊரை விட்டு எங்காவது இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதி, கடற்கரை , காடுகள் , சிற்றூர் போன்ற இடங்களில் தங்கி இருங்கள் . குழந்தை உங்கள் கண்காணிப்பில் இருக்கட்டும் இறைவன் அருளால் எல்லாம் சரியாகிவிடும்  நான் புறப்படுகிறேன் என்றார்.பணம் பத்தாயிரம் கொடுத்தேன் . தொடவே இல்லை . இது எனக்கு இறைவன் கொடுத்த வரம்  இதற்கு காசு வாங்கினால் அது எனக்கு நானே செய்யும் துரோகம் என்று சொல்லி விட்டு எழுந்தார்

சரியான முறையில் நன்றி சொல்லக்கூட எனக்குத் தெரியவில்லை

வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தேன். ஏவல் வைத்தவர் வருவார் என்று சொன்னீர்களே என்று கேட்டு வாயை மூடுவதற்குள் வீட்டுக்கு வந்த ஒருவரை காண்பித்து இவர்தான் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்

எனக்கு சொல்ல முடியாத அதிர்ச்சி,குழப்பம் ஒரு வித மயக்கம் . இப்படியும் நடக்குமா என்று மனதில் எண்ணங்கள் அலைமோதின.

என்று சொல்லி விட்டு சற்று நேரம் அமைதி காத்தார் நண்பர் . முகத்தில் உணர்ச்சிப் பிழம்புகள்.நானும் ஒன்றும் கேட்காமல் அவர் பேசட்டும் என்று காத்திருந்தேன்

“ இப்போது கூட என்னால் அதை நம்ப முடியவில்லை . ஆசிரியர் இவர்தான் என்று சுட்டிக்காட்டியவர் எனது மாமனார் – என் துணைவியின் தந்தை – என் குழந்தைகளுக்கு தாத்தா

ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டேன் என்னப்பா சொல்கிறாய் ஒன்றும் விளங்கவில்லை  என்றார்

சற்று மிரட்டும் தொனியில் கேட்டவுடன் ஆம் நான்தான் செய்தேன் ,பேத்தியின் விழாவில் எனக்குரிய மரியாதை செய்யாமல் புறக்கணித்தீர்கள் . அதற்கு பழி வாங்கத்தான் இப்படி செய்தேன் என்று எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சொன்னார்

எனக்கு வந்த ஆத்த்ரத்தில் அவரை அப்படியே அடித்து நொறுக்க வேண்டும் போல் தோன்றியது . அதை கட்டுப்படுத்திக்கொண்டு உடனே வெளியே போய்விடுங்கள் இதுவே நமது கடைசி சந்திப்பாக இருக்கட்டும் ,இனி உங்களுக்கும் என் குடும்பத்க்கும் ஒட்டு உறவு எதுவும் கிடையாது என உறுதியாகச் சொன்னேன்

தலை குனிந்தவாறே எழுந்து வெளியே போய் விட்டார்

நான் இதுவரை இவ்வளவு விரிவாக இது பற்றி யாரிடமும் சொன்னது கிடையாது , உங்களைப் பார்த்தவுடன் சொல்ல வேண்டும் போல் தோன்றியது .இப்போது என் மனதில் இருந்து பெரிய பாரம் இறங்கியது போல் உணர்கிறேன் .பொறுமையாகக் கேட்டதற்கு நன்றி என்று சொன்னார்

நான் கேட்க வாய் திறப்பதற்குள் அவரே சொன்னார் 

என் மகள் இறைவன் அருளால் 

 இப்போது மருத்துவம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார் . நன்றாகப் படிக்கிறார்  என்று சொல்லிவிட்டு மீண்டும் நன்றி தெரிவித்து விட்டுப் புறப்பட்டார்

வெகு நேரம் எனக்கு திகைப்பு அடங்கவில்லை இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா .அதுவும் பாசத்தை கொட்ட வேண்டிய தாத்தா

எனக்கே திகைப்பு அடங்க வெகு நேரம் ஆயிற்றே அவருக்கு எப்படி இருந்திருக்கும்  பேய் பிசாசு ஏவல் சூனியம் இவற்றை எல்லாம் தாண்டி மனித மனம் இவ்வளவு மோசமானதா இவ்வளவு தப்பாக இருக்குமா என்ற சிந்தனை மேலோங்கியது

 

எந்த ஒரு தந்தையும் தன் மகள் பற்றி இப்படி ஒரு செய்தியை சொல்லும்போது அது முழுக்க முழுக்க  உண்மையாகத்தான் இருக்க வேண்டும்

சொன்னவரின் அடையாளம் வெளியே தெரிய வேண்டாம் என்பதற்காக சில மாற்றங்கள் செய்திருக்கிறேன்

இ(க)டைச்செருகல்

இந்த சந்திப்பு, உரையாடல் நடந்து இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. அதற்குப் பிறகு அவரை அதிகம் சந்திக்க வாய்ப்பு இல்லை

இருந்தாலும் அவர் பெயர், அவர் மகள் படிக்கும் மருத்துவக் கல்லூரி எல்லாம் தெளிவாக நினைவில் நிற்கின்றன

இன்று கூட அதை நினைத்தால் அந்த உண்மையை  உண்மை என்று தெளிவாகத் தெரிந்தாலும் மனது ஏற்க மறுக்கிறது

 

இறைவன் நாடினால் மீண்டும் வேறொரு பதிவில் சிந்திப்போம்

 

31102020sat  

sherfuddinp.blogspot.com  

sherfuddinp@gmail.com

 

 

Friday 30 October 2020

சுலைமான் நபி

 சுலைமான் நபி


கைத்தடியில் சாய்ந்த நிலையில் உயிர் நீத்த நபியின் பெயர் என்ன ?

கைத்தடி யின் சாய்ந்த நிலையில் உயிர் நீத்த நபியின் பெயர் என்ன?


சுலைமான் நபி என்பது விடை


அவர் நபி மட்டுமல்ல மன்னரும் கூட


Living king size என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்


மிகப்பெரிய நாடு, மிகப்பெரிய அரண்மனை மிகப்பெரிய அரியணை மிகப்பெரிய--------------என்று சொல்லிக்கொண்டே போகலாம்


காற்றையும் ஜின்களையும் வசப்படுத்தும் திறன், விலங்குகள் பேசும் மொழிஅறிவு  என்று மிகப்பல அருட்கொடைகளை இறைவன் இவருக்கு  வாரி வாரி  வழங்கியிருந்தான்


ஆடம்பரத்தில் எளிமை என்ற தலைப்பில் இந்த நபியின் வரலாற்றை நான் முன்பே எழுதியிருக்கிறேன்


அவர் மறைவு பற்றி புனித குர் ஆன் என்ன சொல்கிறது ?


அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை அவர் கீழே விழவே "தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிதிருக்க வேண்டியதில்லை" என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது(34:14)


இறைவனே கூறும் இந்த தெளிவு, விளக்கத்துக்கு மேல் யாரும் இதற்கு விளக்கம் கூற முடியாது


இசுலாம் பற்றிய வினாக்களுக்கு விடைகள் அதிகம் வருவதில்லை என்ற ஒரு எண்ணம் இருந்தது


இந்த முறை சரியான விடை அனுப்பிய


திருவாளர்கள்

Crescent சேக்

இ ச பீர் முகமது அஷ்ரப் ஹமீதா சிராஜுதீன் பாடி பீர்


அனைவருக்கும் நன்றி , வாழ்த்துகள் , பாராட்டுகள்


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


30102020fri


sherfuddinp.blogspot.com

sherfuddinp@gmail.com


 


Wednesday 28 October 2020

தமிழ் மொழி அறிவோம்

 தமிழ் மொழி அறிவோம்



பெற்ற தாய் வயிறு

புலியின் குகை

இவை இரண்டையும் தொடர்பு படுத்தும் சங்க இலக்கியப்பாடல்

ஒன்று இருக்கிறது


அது என்ன பாடல்?


புலி சேர்ந்து போகிய கல் அளை போல,

ஈன்ற வயிறோ இதுவே;                  

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!


என் மனதில் பதிந்த பாடல் வரிகள் இவை


படித்தது பார்த்து கேட்டது எல்லாம் மனதில் பதிவதில்லை

 பலி .... வரிகள் பதிந்ததற்கு இரண்டு காரணங்கள்


உறவினர் ஒருவர் தன் மகன் பற்றி இந்த வரிகளை சொல்லி கேலி செய்து


என் மகன் எங்கே என்று யாராவது கேட்டால் அவன் கல்யாணப் பந்தி உணவு விடுதி விருந்து நடக்கும் இடங்களில் சாப்பிட்டடுக் கொண்டிருப்பான் என்றுதான் சொல்ல வேண்டும்

என்று சொன்னது என் மனதில் நன்றாகப் பதிந்து விட்டது அப்போது எனக்கு பணிரெண்டு வயது இருக்கும்


அடுத்து இதே பாடல் கல்லூரிப் பாடமாக வந்தது

பொள்ளாச்சி ந மு க ம கல்லூரி பேராசிரியர் கேசவன் பாடம் நடத்திய விதம் பாடலின் பொருள் முழுமையாக மனதில் படம் போல் பதிந்து விட்டது


பாடல்

சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன்

யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன்

யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல,

ஈன்ற வயிறோ இதுவே;                  

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!


புறநானூறு 86 


பாடலின் பொருள்


என் வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிக்கொண்டு நின்று 

“உன் மகன் எங்கு இருக்கிறான்” என வினவுகிறாய். 


அவன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. 

புலி வெளியேறியுள்ள கல்லுக்குகை போல 

அவனைப் பெற்றெடுத்த வயிறுதான் இது. 


அவன் தானாகவே போர்க்களத்தில் தோன்றுவான். 

(நீங்கள் அவனைப் போருக்கு அழைக்க வேண்டியது இல்லை).


இந்தப் பாடலுக்கு பல்வேறு நீண்ட விளக்கங்கள் பல அறிஞர்கள் எழுதியுள்ளனர்


ஆனால் எனக்குத் தெரியும் காட்சி இதுதான்

ஒரு  வீரத் தமிழ்ப் பெண்ணின் முகம் 

அதில் மின்னும் பெருமை பெருமிதம் 

இவையெல்லாம் கலந்த ஒரு தாய்மை உணர்வு


இந்தப்பாடலை இயற்றியவர் காவற்பெண்டு என்ற பெண் புலவர்


சரியான விடை அனுப்பி பாராட்டுப் பெறுபவர்கள்


திருவாளர்கள்


ரவி ராஜ்

சிவசுப்பிரமணி

DRP சுந்தரம்

முத்துக்கண்ணன் கனகராஜ்


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


 28102020wed

sherfuddinp.@gmail.com

sherfuddinp.blogspot.com


Also please support and subscribe my channel


My channel link : 

https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA

Monday 26 October 2020

 



Delhi male ink $400-mn pact for connectivity


What you see above is a recent news headline in print media


I have made small changes in it which make the headline seem meaningless


Can you find out the changes ?


Answer

I have removed the comma(,) between Delhi and Male and  put m in male in small letter

 The original headline is


Delhi ,Male ink $ 400-mn pact for connectivity


Male is capital of Maldives


Hope it is clear


Thanks to those who attempted

_Ms I S Peer Mohammed

Rajathi and A R Viswanathan


Thanks greetings and congratulations to

Mr.Abdul Salam 

Who responded with right answer


26102020mon

sherfuddinp.blogspot.com

sherfuddinp.@gmail.com










Friday 23 October 2020

மறுமை நாள் காட்சிகள்

 மறுமை நாள் காட்சிகள் 

குர்ஆன் பார்வையில் 

மறுமை நாளில் பூமியில் ஏற்படும் மாற்றங்கள் எவை?



1.இந்த பூமி வேறு பூமியாக ------------மாற்றப்படும் --------(14 :48)

2.அவைகளை (மலைகளை)—இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப்போல்) பரப்பி விடுவான் 

3.பின்பு அவற்றை (பூமியை) சமவெளியாக்கிவிடுவான் 

4.அதில் மேடு பள்ளம் இருக்காது  (20: 105-107)

5..(அப்)பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான் என்று (சுவர்க்க வாசிகள்) கூறுவார்கள்  (39:74)

6..கடல்கள் தீமூட்டப்படும்  (81:6)

7..கடல்கள் (பொங்கி ஒன்றால் ஓன்று) அகற்றப்படும் ---(82:3)

8..இன்னும் பூமி விரிக்கப்படும்(84:3)


இந்த இறை மொழிகளின் அடிப்படையில் இப்ன் அப்பாஸ் போன்ற  மார்க்க அறிஞர்கள் சொல்கிறார்கள் :

நாம் வாழும் இந்த பூமியே சுவனத் தோட்டமாக மாற்றப்படும் , பூமியைப் பிரிக்கும் மலைகள், கடல்கள், ஆறுகள், பாலைவனங்கள் எதுவும் இல்லாமல் ஒரே நாடாக இந்தப்பரந்த பூமி இருக்கும் 

.நாடு மதம் ,இனம் ,குலம் போன்ற பிரிவினைகள் எதுவும் இல்லாமல்  இறைவனின் நல்லடியார்கள் இங்கு என்றும் நிரந்தரமாக வசிப்பார்கள்  

(Source:Towards understanding Quran – V 20: 107 Explanatory note  83  )

நம் எல்லோருக்கும் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ந்த சுவனவாசிகளாகும் வாய்பபை இறைவன் அருள வேண்டும்


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


23102020fri


sherfuddinp@gmail.com

sherfuddinp.blogspot.com

Wednesday 21 October 2020

தமிழ் மொழி அறிவோம்

தமிழ் மொழி அறிவோம்


திருக்குறள்
சில வினாக்கள்

குறளில் வரும்
பழங்கள்
பூக்கள் எவை?

வக்ரபோலி
என்றால் என்ன?
இதற்கும் குறளுக்கும் என்ன தொடர்பு?

விடை

திருக்குறளில் வரும் ஓரே பழம்
நெருஞ்சில் பழம்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1120)

பொழிப்பு: அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.(குறள்  1114,)
பொருள்

என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ``இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.

வக்ரபோலி

நரிக்குறவர்கள் பேசும் மொழி

இந்த மொழியிலும் திருக்குறள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது

இந்த மொழிக்கு எழுத்து வடிவம் உண்டு

முழுமையாக விடையளித்த
திருவாளர்கள்
  A R விசுவநாதன்
DRP சுந்தரம்
பகுதி விடையளித்த திருவாளர்கள்
பாடி பீர்
பீர் ராஜா
மெகராஜ்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பாராட்டுகள்

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

21102020wed
sherfuddinp@gmail.com
sherfuddinp.blogspot.com


Sunday 18 October 2020

ENGLISH

 



The most spoken native language in the world is English.

Correct?

Answer

No

English is the third most spoken NATIVE language in the world after
Standard Chinese and
Spanish

However English is the largest language by number of speakers

Hope the difference is clear

Source Wikipedia

Thanks to all those who responded

Congratulations and greetings to those who sent right answer__

M/S
Ganesa subramanian
Raviraj
Ajmeer Ali
Panneer
AR Viswanathan (Special thanks for mentioning the third place of English)
Hidayath
PeerRaja
Ashraf Hameeda
Varadarajan
Mohana Bhaarathi
Nilofer Aleemudeen

Hope no omissions 
Please mention if any

19102020mon
sherfuddinp@gmail.com
sherfuddinp.blogspot.com

Friday 16 October 2020

ஆசிரியர் மாணவர்

 ஆசிரியரும் மாணவரும்


நபி இப்ராஹீம் அவர்களுக்கு ஆசிரியராய் இருந்து கற்பித்தவர் யார் ?


முதிய வயதில் நபி இப்ராஹிமுக்கு மகனை அருளிய இறைவன் அருளால்

அந்த நபி தனக்கு பத்து தலைமுறை முந்திய நுஹ் நபி அவர்களை சந்திக்கிறார்

வெறும் சந்திப்பல்ல . 


மூத்தவர் இளையவருக்கு நாற்பது ஆண்டுகள்  ஆசிரியராக இருந்து ஞானத்தைக் கற்பிக்கிறார் .


 மனிதன் படைக்கப்பட்ட நாளில் இருந்து ஏக இறைவன் பற்றிய

அனைத்து செய்திகளையும் கற்பிக்கிறார் 


நுஹ் நபி அவர்களுக்கு இறைவன் வழங்கிய வாழ்நாள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள்


 மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்;

ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; -------

(1000-50 =950)                           .( குரான் 29:14)


இப்ராகிம் நபி பிறக்கும்போது நுஹ் நபிக்கு வயது 892. நுஹ் நபி காலமாகும்போது இப்ராகிம் நபிக்கு வயது 58. நுஹ் நபியிடமும் அவர் மகன் செம்மிடமும் நாற்பது ஆண்டுகாலம் இப்ராகிம் நபி

 கல்வி கற்றுக் கொண்டார்



நுஹ் நபியின் கல்வி ,அறிவு ஞானம் அந்த அளவுக்குப் பரந்து விரிந்து ஆழமாக இருந்தது


முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் அலை அவர்களின் பல நூற்றாண்டுத் தோழர் மெதுசெலாஹ் என்பரின் பல நூற்றாண்டுத் தோழர் நபி நுஹ்


மேலும் இறைவனின் சாபமாக வந்த அழிவு மழை வெள்ளத்திலிருந்து தாம் உருவாக்கிய Noah’s Ark எனும் கப்பல மூலம் மனித இனத்தைக் காப்பாற்றி தானும் தப்பித்து வந்த சிறப்பு நுஹ் நபிக்கு உண்டு


இப்படி மனித இனம் தோன்றியதில் இருந்துஏக இறைவன் பற்றிய அனைத்து செய்திகளையும் ஞானத்தையும் நூஹ் நபி அவர்கள் இப்ராஹீம் நபி அவர்களுக்கு

கற்பிக்கிறார்கள் 


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


17102020sat

sherfuddinp@gmail.com

sherfuddinp.blogspot.com

Wednesday 14 October 2020

எழுபதாம் அறிவு

 

எழுபதாம் அறிவு


மதிய உணவுக்குப் பின்
தொலைக்காட்சி அலைவரிசைகளை புரட்டிக் கொண்டிருந்தேன்

மூன் அலைவரிசையில் யார் நீ திரைப்படம்
இளமையான அழகான ஜெய் சங்கர் ஜெயலலிதா இணை  சற்று மாறுபட்ட மர்மக்கதை

அதெற்கெல்லாம் மேல் இனிமையான பாடல்கள்
நானே வருவேன் என்ற பாடலுக்காகவே படத்தைப் பார்க்கலாம்

ஒரு இருபது நிமிடம்தான் பார்த்திருப்பேன்
அதற்குள் மூன்று இனிமையான பாடல்கள் சுசீலாவின் குரலில்.

சிறிது நேரம் கழித்து பார்த்த பாடல்களை நினைவு படுத்திப் பார்த்தேன்
எவ்வளவோ மூளையைக் கசக்கியும் மூன்றாவது பாடல் நினைவுக்கு வரவில்லை
வேறு வழியில்லாமல் இணையத்தில் பார்த்து மூன்றாவது பாடலை தெரிந்து கொண்டேன்

அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் இதே குடைச்சல் மூன்றாவது பாடல் மறந்து விட்டது
மீண்டும் இணையும்
மீண்டும் மறதி பத்து நிமிடத்தில்

அதற்குள் கைப்பேசி பேரன் கைக்குப் போய்விட்டது

அவனிடம் கேட்க_
நல்ல வேளை  பேரன் காதில் எதுவும் மாட்டவில்லை -
உடனே இணையத்தில் பார்த்து பொன்மேனி என்று பாடல் வரியைச் சொல்ல அதன் பிறகுதான் மனதில் பதிந்தது

இதேபோல் இன்னொரு நிகழ்வு
சில நாட்கள் முன்பு

மனதில் என்ன நினைவுகளோ என்ற பாடல்
எனக்குப் பிடித்த பாடல்
முதல்முறையாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
என் கற்பனையில் இருந்த காட்சிக்கு முற்றிலும் மாறுபாடாக ஒரு குழு நடனக் காட்சி
அதனால் பாடல் மனதில் பதியவில்லை

அடுத்தநாள் அது என்ன பாட்டு எஸ் பீ பியும் சைலஜாவும் பாடியது என்று குடைச்சல்
நல்ல வேளை படப்பெயர் நினைவில் இருந்ததால் வலையில் தேடி பாடலைத் தெரிந்து கொண்டேன்

இதற்கெல்லாம் மேல் அவ்வப்போது வேறுவிதமான குடைச்சல்

நன்றாகத் தெரிந்த ஒரு பாடலின் இசை ராகம்  மெட்டு எல்லாம் தெளிவாக மனத்திரையில் வரும்
ஆனால் பாடல் வரிகளோ சொற்களோ நினைவில் வராது
வலையில் தேட முடியாது யாரிடமும் கேட்கவும் முடியாது
பாடல் நினைவுக்கு வரும் வரையில் காத்திருப்பதுதான் ஓரே வழி

இதையெல்லாம் பார்த்தால் நானும் சுஜாதா ஆகி விட்டேனோ என்ற எண்ணம்
அபியும் நானும் படத்தில் நானும்
Freelance journalist ஆக இருந்தேனோ என்று begger ஆக இருந்து அபியின் நண்பனான ரவி சாஸ்திரி சொல்வது போல்

நிறைவாக
மூன் தொலைக்காட்சியெல்லாம் இப்போதுதான் கண்ணில் படுகிறது
நான் அடிக்கடி பார்க்கும் சன் கே முரசு இசையருவி  கலைஞர் இதெல்லாம் வரிசையாக முதலில் இருந்தது
அலை வரிசை எண்கள் மாற்றியதில் கே முரசு எல்லாம் மிகவும் பின்னால் போய்விட்டன
அவற்றைத் தேடும்போது மூன் பொதிகை பெப்பர் போன்ற பல அலை வரிசைகள் கண்ணில் படுகின்றன

Freelance journalist
கட்டற்ற இதழாளர் என்று சொல்லலாமா?

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

15102020thu
sherfuddinp.blogspot.com
sherfuddinp@gmail.com

Monday 12 October 2020

FIND THE ODD MAN OUTp

  

FIND THE ODD MAN OUT:

Inaccurate
Inadmissible
Incapable
Incredible
Incomplete
Incorrect
Incompatible

INCREDIBLE is the odd word.
All others are antonyms (opposite )
formed by prefixing IN
Accurate x inaccurate
Capable x incapable

But Incredible is not opposite of credible
Credible means trustworthy
Incredible has many meanings 
One is
Unbelievably true

Thanks to all those who responded

Congratulations and Greetings to those who sent right answer--
M/S
I S Peer Mohammed
Riffath
Meharaj
Shanmugam 
Somasekar
A V Bhaskar
Shahee Anees
A R Viswanathan and
Mohammed Basha

,12102020mon
sherfuddinp.blogspot.com
sherfuddinp@gmail.com

Friday 9 October 2020

அக்மல்து

 அக்மல்து

குர்ஆனில் இந்தச் சொல் எங்கு வருகிறது?

பொருள் சிறப்பு என்ன


அக்மல்து என்ற சொல்லுக்கு

நான் முழுமை செய்துவிட்டேன்

என்று பொருள்

குர்ஆன் வசனம் 5:3 (அல்மாயிதா)

" இன்று நான் உங்களுக்கு இசுலாமிய மார்க்ததை முழுமை செய்து விட்டேன்"

என்று இறைவன் சொல்கிறான்

 

திருமறையின் இறுதி வசனம் என்று கருதப்படும் இது


 எம்பெருமான் நபி ஸல் அவர்களின் கடைசி ஹஜ் புனிதப் பயணத்தின்போது அருளப்பட்டகாகச் சொல்லப்படுகிறது


முழுமை செய்து விட்டேன் என்ற சுருக்கமான சொற்களுக்கு மிக நீண்ட விளக்கம் உண்டு இறைவன் நாடினால் பின்பு அது பற்றிப் பார்ப்போம்


சரியான விடை அனுப்பிய 

ஜனாப் லியாக்கத் அலி கலிமுல்லா அவர்களுக்கும் ஜனாப் அஜீஸ் வாகிதி அவர்களுக்கும் நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள்



இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

09102020fri

sherfuddinp.blogdpot.com

sherfuddinp@gmail.com


முகநூலில் தடை செய்யப்பட்டது 


Wednesday 7 October 2020

சின்னச் சிதறல் அட மாங்கா

 







சின்னச் சிதறல்

 

அட மாங்கா


 டிஸ்கவரி தொலைக்காட்சியில் சில் நாட்கள் முன்பு ஒரு உணவு _


முற்றிலும் மாறுபாடான ஒரு உணவ பற்றிய காட்சியை அரைகுறையாகப் பார்த்தேன்


உடனே இது போன்று பார்த்த படித்த கேள்விப்பட்ட சில வித்தியாசமான உணவு வகைகள் எண்ணத்தில் அலைமோத அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


நாலைந்து பெண்கள் ஒன்றாக

 உட்கார்ந்து கொண்டு பெரிய அரிவாள் மனையில் பெரிய மாங்காயில் அலகுகளை பாதிக்கு மேல் நறுக்கி நிறைய கல் உப்பை அலகுக்கும் கொட்டைக்கும் இடையில் திணித்து சாடியில் போட்டு விடுவார்கள் எண்ணெய் மிளகாய்ப்பொடி எதுவும் இல்லாத ஒரு ஊறுகாய்

இது தான் அட மாங்கா (அடை மாங்காய்?)

உப்பில் ஊறிய மாங்காய் தேன் நிறத்தில் மிகச் சுவையாக இருக்கும்


அடுத்து ஒரு இனிப்பு 

மெல்லிய சிரட்டை உள்ள  தேங்காயின் கண்களில் துளையிட்டு தேனை ஊற்றி துளையை அடைத்து விட்டு தண்ணீரில் வேக வைத்தால் தேன் தேங்காயில் கலந்து மிகச் சுவையாக இருக்குமாம்


மீண்டும் தேங்காய் 

தேனுக்குப் பதில் முட்டை

தேன் ஊற்றியது போல் நாலைந்து முட்டைகளை உடைத்து ஊற்றி துளையை அடைத்து நீரில் வேகவைத்து எடுத்து தேங்காயை கவனமாக உடைத்தால் கிடைப்பது யானை முட்டை


நெய்தல் நில சிறப்பு உணவு ஒன்று

சிவப்பு அரிசி சோறை சுடச்சுட புதிய பனை ஓலையில் போட்டு புத்தம்புது வாவல் மீன் குழம்பை அதில் ஊற்றி பனை ஓலையை மூடி நன்றாகக் குலுக்கி விட்டு கொஞ்ச நேரம் கழித்து திறந்தால் சோறு மணம் மீன்குழம்பு மணம்  பனை ஓலை மணம் எல்லாம் கலந்து நாசிக்கும நாக்குக்கும் விருந்து படைக்கும்

தொட்டுக்கொள்ள புத்தம்புது வஞ்சிர  மீன் வறுவல்

நாக்கு ஊறுகிறதா !!


மக்கி ரொட்டி பஞ்சாப் குளிர்கால சிறப்பு உணவு

மக்காச்சோளத்தில். ரொட்டி

பக்க உணவும் அதே மக்காச்சோளத்தில் குழம்பு போல்.

மேலே அரை சென்டிமீட்டருக்கு வெண்ணெய் மிதக்கும்

மிகச் சுவையாக இருக்கும்


நெல்லை கல்தோசை சொதி கேரள பத்ரி கோழிச்சாறு இன்று நினைத்தாலும் கண்ணில் நீர்வரும் ராஜஸ்தான் மிளகாய் போண்டா ஒரு கிலோ அரிசிக்கு பத்துப் பன்னிரண்டு கிலோ கறி சேர்க்கும் காயல்பட்டினம் பிரியாணி இவற்றைஎல்லாம் மிஞ்சும் எங்கள் ஊர் தாளிச்சோறு பொடிக்கறி ஆணம் இதெல்லாம் பற்றி. ஏற்கனவே எழுதியிருக்கிறேன்


நிறைவாக டிஸ்கவரி தொலைக்காட்சியில் நான் பார்த்த உணவு

மசாலாவில் நன்றாக ஊறிய கறித்துண்டுகள் அரை கிலோ இருக்கும் அதை அப்படியே மூடுவது போல் நாலைந்து புரோட்டாவை வைத்து வாழை இலையில் மடித்து அதற்கு மேல் வெள்ளி இழைத்தாள் (சில்வர் பாயில்)

இதற்கு மேல் பச்சைக்களி மண்ணைப் பூசி கொழுந்து விட்டு எரியும் தீயில் மூன்று மணி நேரம் வேக விட்டு எடுக்கிறார்கள்

சுவை எப்டடியோ செய்முறை கேட்க பார்க்க நன்றாக இருக்கிறது

 

இ(க)டைச்செருகல்


அடமாங்காய் மறந்துபோன ஒன்று என்று நினைத்தேன்..ஆனால் நீர் குழாயில் ( யூ ட்யூப்) நிறைய குறிப்புகள் இருக்கின்றன


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

07102020wed

sherfuddinp.bligspot.com

sherfuddinp@gmail.com


FB

Blocked

அட மாங்கா






Monday 5 October 2020

Sepsis English

 



Recently I came across a news in print media about a peculiar disease 


IT is a life threatening complication of an infection


The chemicals released into the bloodstream to fight an infection trigger inflammation through out the body  causing failure of multiple organ systems sometimes resulting in death


What is that disease? 




 

SEPSIS is the name of the disease


Former Union Minister Jaswant Singh was being treated for sepsis........Hindu 28092920


Thanks greetings and congratulations to

Mr Panneer 

who responded with right answer


05102020mon

sheruddinp.blogspot.com


Also please support and subscribe my channel


My channel link : 

https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA




Saturday 3 October 2020

தமிழ் மொழி அறிவோம்

நட்சத்திரப்பூக்கள்வ

வண்ணங்கொண்டவெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

எல்லோர் மனதிலும் செவிகளிலும் உதடுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்

....... உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப்பூப் பரிததேன்
என அழகிய வரிகள்

இதில் வரும் முதல் சொல் மங்கையா நங்கையா  என்ற ஐயம் ஒரு வழியாக தீர்ந்து நங்கை என்று தெளிவானது

உடனே மனதில் அடுத்த வினா
மங்கை நங்கை இரண்டுக்கும் பொருள் ஒன்றா வேறு வேறா ?

வலை தளத்தில் தேடினால் தலை சுற்றும் அளவுக்கு பல்வேறு தகவல்கள்

சுவையான சிலவற்றை மட்டும் பார்ப்போம்
பெண்ணின் பருவங்களைக் குறிக்கும் ஏழு சொற்களில் ஒன்று மங்கை
12 முதல் 13 வயது வரை மங்கைப் பருவம்
பெண்ணைக் குறிக்கும் பொதுச் சொல்லாக இருக்கும் மங்கை ஒரு பெயராகவும் பயன்படுகிறது
மங்கை மங்கையர்க்கரசி மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் மங்கையர் உலகம்‌  என்று எத்தனை சொற்கள்!

மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம்
அதுவும் நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று கவிஞர் பாடுகிறார்

மேட்டூரில் வந்த மங்கை
மேலேறிச் சென்று விட்டாள் என பிரிவுத் துயரை பாடுகிறான் காதலன்

மங்கை உன்னைத் தொட்டவுடன்
மறைந்து விட்டாலும் என்கிறான் இன்னொரு காதலன்

நங்கை என்ற சொல்லுக்கு மிகப்பல பொருட்கள்

அண்ணியை நங்கையா என்கிறது கொங்கு தமிழ்

நங்கையின் கூந்தலுக்கு நட்சத்திரப்பூப் பிரிக்கிறது கவிஞனின் கற்பனை

நாறு பூ குழல்  நங்கையர் கண்கள் நீர் என்கிறான் கம்பன்

நங்கையின் சோதி முகத்தில் ஞான ஒளியைக் காண்கிறான் பாரதி

கன்னி நல்ல பெண் மருமகள் அண்ணி என பல பொருட்கள் உள்ளன நங்கை என்ற சொல்லுக்கு

இதே சொல்லுக்கு மிக மாறுபாடான ஒரு பொருளையும் அண்மையில் பார்த்தேன் நாகரீகம் கருதி அதை வெளியிடவில்லை

இறைவன் நாடினால் மீண்டும் எப்போதாவது தமிழில் சிந்திப்போம்

03102020sat
sherfuddinp.blogspot.com

Friday 2 October 2020

“இறைவன் ஏழை “

 இறைவன் ஏழையா?



“இறைவன் ஏழை “

திரு மறை குர்ஆனில் வரும் வசனம் இது


இதற்கு விளக்கம் என்ன ?(இடம் சுட்டிப் பொருள் விளக்கவும் )


இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்


01102020thu


அகில உலகங்களையும் படைத்து பராமரித்து படியளிப்பவன் அந்த ஏக இறைவன்


வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியன

அள்ளிக்கொடுத்தாலும் கொட்டிக் கொடுத்தாலும் துளியும் குறையாத ஞானத்தையும் செல்வத்தையும் உடைய அந்த


 இறைவன் ஏழை 

நாங்கள் செல்வந்தர்கள் என்று கிண்டலாகப் பேசுகின்றனர் சிலர்


இறைவன் இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றான்


அவர்களுக்கு சுட்டெரிக்கும் நெருப்பின் தண்டனை நிச்சயம் என்று எச்சரிக்கிறான 

குர்ஆன் 3:181


இப்படி அவர்களை பேசத் தூண்டியது எது?


உங்களில் எனக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்? 

என்று இறைவன் மக்களைப் பார்த்துக் கேட்பதாய் ஒரு வசனம்  குர்ஆனில் வருகிறது (2 :245)


மக்கள் செய்யும் தான தருமங்களை இறைவனுக்குக் கொடுக்கும் அழகிய கடன் என்று குறிப்பிட்டு அந்தக் கடனை பல மடங்காக திருப்பி அளிப்பதாய் இறைவன் வாக்குறுதி கொடுக்கிறான் இது குர்ஆனில் பல இடங்களில் வரும் செய்தி


இதைத்தான் 

இறைவன் ஏழையாகி விட்டான் நம்மிடம் கடன் கேட்கிறான் என்று கிண்டல் செய்து பேசுகிறார்கள் குழப்ப வாதிகள்


அழகிய கடன் கொடுப்பவர்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கி வைப்பானாக

சரியான விடையை எழுதிய ஐ. எஸ்.பீர் முகமதுக்கு நன்றி பாராட்டுகள் வாழ்த்துகள் 

02102020fri

sherfuddin.blogspot.com 


Also please support and subscribe my channel

My channel link : 

https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA







Thursday 1 October 2020

“இறைவன் ஏழை “

 





“இறைவன் ஏழை “

திரு மறை குர்ஆனில் வரும் வசனம் இது

இதற்கு விளக்கம் என்ன ?(இடம் சுட்டிப் பொருள் விளக்கவும் )

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

01102020thu

sherfuddinp.blogspot.com