நட்சத்திரப்பூக்கள்வ
வண்ணங்கொண்டவெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
எல்லோர் மனதிலும் செவிகளிலும் உதடுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
....... உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப்பூப் பரிததேன்
என அழகிய வரிகள்
இதில் வரும் முதல் சொல் மங்கையா நங்கையா என்ற ஐயம் ஒரு வழியாக தீர்ந்து நங்கை என்று தெளிவானது
உடனே மனதில் அடுத்த வினா
மங்கை நங்கை இரண்டுக்கும் பொருள் ஒன்றா வேறு வேறா ?
வலை தளத்தில் தேடினால் தலை சுற்றும் அளவுக்கு பல்வேறு தகவல்கள்
சுவையான சிலவற்றை மட்டும் பார்ப்போம்
பெண்ணின் பருவங்களைக் குறிக்கும் ஏழு சொற்களில் ஒன்று மங்கை
12 முதல் 13 வயது வரை மங்கைப் பருவம்
பெண்ணைக் குறிக்கும் பொதுச் சொல்லாக இருக்கும் மங்கை ஒரு பெயராகவும் பயன்படுகிறது
மங்கை மங்கையர்க்கரசி மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் மங்கையர் உலகம் என்று எத்தனை சொற்கள்!
மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம்
அதுவும் நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று கவிஞர் பாடுகிறார்
மேட்டூரில் வந்த மங்கை
மேலேறிச் சென்று விட்டாள் என பிரிவுத் துயரை பாடுகிறான் காதலன்
மங்கை உன்னைத் தொட்டவுடன்
மறைந்து விட்டாலும் என்கிறான் இன்னொரு காதலன்
நங்கை என்ற சொல்லுக்கு மிகப்பல பொருட்கள்
அண்ணியை நங்கையா என்கிறது கொங்கு தமிழ்
நங்கையின் கூந்தலுக்கு நட்சத்திரப்பூப் பிரிக்கிறது கவிஞனின் கற்பனை
நாறு பூ குழல் நங்கையர் கண்கள் நீர் என்கிறான் கம்பன்
நங்கையின் சோதி முகத்தில் ஞான ஒளியைக் காண்கிறான் பாரதி
கன்னி நல்ல பெண் மருமகள் அண்ணி என பல பொருட்கள் உள்ளன நங்கை என்ற சொல்லுக்கு
இதே சொல்லுக்கு மிக மாறுபாடான ஒரு பொருளையும் அண்மையில் பார்த்தேன் நாகரீகம் கருதி அதை வெளியிடவில்லை
இறைவன் நாடினால் மீண்டும் எப்போதாவது தமிழில் சிந்திப்போம்
03102020sat
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment