இப்படித் திடீரென கேட்பார் என எதிர்பார்க்கவிலலை .
.அலுவல் முறையில் அறிமுகமாகி சில நாட்களில் மிக
நெருக்கமான நண்பனாகி விட்ட அவர்
ஒருநாள் மாலை அலுவல் வேலைகளை ஒருவழியாக நிறைவு செய்து
வங்கியை பூட்டும் நேரத்தில் வந்தார்
பேசிக்கொண்டிருக்கையில்
உங்களுக்கு பேய் பிசாசு, பில்லி சூனியம் ,ஏவல் இதிலெல்லாம்
நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார் .
இப்படி எதிர் பாராத ஒரு கேள்வி வந்ததும் நான் திகைத்துப்
போய்விட்டேன்
“எனக்குத் தெரியவில்லை “ என்று சொன்னேன்
எனக்கு இது பற்றி நிறைய பேச வேண்டி இருக்கிறது . இப்போது
வங்கி அடைக்கப்படும் நேரத்தில் நான் உங்கள் நேரத்தை கடத்த விரும்பவில்லை
நாளை எனக்கும் உங்களுக்கும் விடுமுறைதான் ,இருவரும்
சந்தித்துப் பேசுவோம் என்று சொன்னார் .
பேய் பிசாசு பற்றிப்பேச இவ்வளவு பெரிய பீடிகையா என்று
எண்ணியபடி வீடு போய்ச் சேர்ந்தேன்
நல்லவேளை பேய்க்கனவு எதுவும் வரவில்லை
அடுத்த நாள் காலை பதினோரு மணியளவில் (தரை வழி) தொலைபேசியில்
இப்போது வரலாமா என்று கேட்டார் . சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார்
காபி சிற்றுண்டியுடன் பேசத் துவங்கினோம்
நீங்களாவது பேய் பிசாசு பற்றி தெரியவில்லை என்று சொன்னீர்கள் . ஆனால் நான்
இதெல்லாம் கிடையவே கிடையாது, மூட நம்பிக்கை ,பத்தாம்பசலித்தனம் என்று அடித்துச்
சொல்வேன் அது ஒரு காலம்
சில நிகழ்வுகள் என்
எண்ணத்தை அடியோடு மாற்றிவிட்டன.
அப்போது நாங்கள் வேறு ஊரில் இருந்தோம். துணைவி, நான்
இருவரும் பள்ளி ஆசிரியர்கள் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை என அழகான அளவான குடும்பம்
சொந்த வீடு . நிறைய சுற்றம் நட்புகள் அக்கம் பக்கத்தில்
பிள்ளைகள்இருவரும்
நன்றாகப் படிப்பார்கள் மகள் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஒரு
குறிக்கோளில் இருந்தார் . நானும் அதற்கேற்றார் போல் பணம் சேர்த்து வந்தேன், நல்ல
மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் கட்டணம்
பெரிய சுமையாக இருக்காது
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பெண்களுக்கே உரிய சுப
நிகழ்ச்சி என் மகளுக்கு .அந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடினோம்
விழா முடிந்த சில நாட்களில் என் மகளிடம் ஒரு மாற்றம்
தெரிந்தது , வழக்கத்துக்கு மாறாக தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளத் துவங்கினார்
உடல் மனதில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக இருக்கும் என
எண்ணி நாங்கள் அதைப் பெரிது படுத்தவில்லை. நாளாக நாளாக வெறித்த பார்வை எதிலும்
சிரத்தையின்மை படி ப்பிலும் கவனம் குறைவு ஆனால் தொடர்ந்து நன்றாகப் படிக்கும்
மாணவி என்பதால் ஆசிரியர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை
வீட்டில் சூழ்நிலை முற்றிலுமாக மாறி விட்டது மகிழ்ச்சி
மறைந்து ஒரு இறுக்கமான அமைதி
என்ன செய்வது என்று சிந்திக்கையில் நிலைமை சற்று மிகவும்
மோசமாகிவிட்டது
வீட்டை விட்டு வெளியே வந்து அலங்கோலமாக தெருவில் ஓட , மிகவும் பதறிப்போனோம்
பொது மருத்துவர் உடலில் எந்த நோயும் இல்லை என்றார்
நரம்பியல் வல்லுநர் பெரிதாக ஒன்றும் இல்லை போகப் போக
சரியாகிவிடும் என்றார்
உளவியல் வல்லுநர், மன நோய் மருத்துவர் என எல்லோரும்
பார்த்தும் எந்த வித முன்னேற்றமும் இல்லை
எங்கள் இருவரில்
ஒருவர் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம்
மந்திரம் தந்திரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லைதான். ஆனால்
நாடகள் போகப்போக எதையாவது செய்து மகளை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம்
இந்தக் குழப்பமான நிலையில் என் நண்பர் ஒருவர் மிகவும்
தயக்கத்துடன் சொன்னார்
“ எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் இருக்கிறார் . மிகவம் கண்ணியமானவர்
தனக்கு மிகவும் தெரிந்தவர்களுக்கு மட்டும் இது போன்ற
மருத்துவ அறிவுக்கு எட்டாத பிரச்னைகளை தீர்த்து வைக்கிறார் . இதற்கு
கட்டணம் எதுவும் வாங்காமல் ஒரு சேவையாக செய்து வருகிறார்
நீ சம்மதித்தால் உன்னை அவரிடம் கூட்டிச் செல்கிறேன் “
என்றார்
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த நான் உடனே
சரி என்றேன்
அந்த ஆசிரியரைப் பார்த்ததுமே மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது
.அப்படி ஒரு கண்ணியமான , அமைதியான தோற்றம் மனதுக்கு இதமான கனிவான பேச்சு
உங்கள் வீட்டைப் பார்க்க வேண்டும் என்றார் கூட்டிச் சென்றேன் வீட்டின் எல்லா இடங்களையும் மிக நுணுக்கமாக
ஆராய்ந்தார் .
இந்த வீட்டில் ஓர் இடத்தில் ஏவல் வைக்கப்பட்டிருக்கிறது . எனக்கு சில
தற்காப்புகள் செய்து கொண்டு நாளை வந்து அந்த இடத்தை சரியாகக் கண்டுபிடிக்கிறேன்
என்று சொல்லி விட்டுப்போனவர் அடுத்த நாள் வந்தார்
நீரோட்டம் பார்ப்பது போல் கையை ஒரு விதமாக ஆட்டிக்கொண்டே
இங்கும் அங்கும் மெதுவாக நடந்தார் தோட்டத்தில் ஒரு மூலையில் சற்று நேரம் திகைத்து நின்றார்
இருக்கும் இடம் தெரிந்து விட்டது – இன்னும் இரண்டு நாள்
கழித்து வருவேன் அதை எடுக்க . அப்போது நான் அதிகம் பேசும் நிலையில் இருக்க
மாட்டேன் எனவே இப்போதே என்ன செய்ய
வேண்டும் என்பதை சொல்லி விடுகிறேன் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்
காலை ஆறு மணியளவில் நான் வந்து விடுவேன் அன்று பெண்கள் ,
சிறுவர் சிறுமியர் யாரும் வீட்டில் இருக்க வேண்டாம்
உங்களுக்குத் துணைக்கு மூன்று , நான்கு மனத்திடமான ஆண்களை வைத்துக்கொள்ளுங்கள்
என் அருகில் யாரும் வராமல் ஒரு ஐந்தாறு அடி தள்ளி நின்று
என்னைப்பார்துக்கொண்டே இருங்கள் . இறைவன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கும்
எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்கூட என் அருகில் வர வேண்டாம்
.இந்த எண்ணில் இன்னாரைத் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள் .
நல்ல படியாக ஏவலை எடுத்து விட்டால் அதை ஒரு சிறிய
பெட்டியில் போட்டு ஒரு பையில் போட்டு உங்களிடம் கொடுப்பேன் .அதை வெகு தொலைவு
சென்று கடலில் தூக்கிப் போட்டு விடுங்கள் அதற்கு இரண்டு பேர் வண்டியுடன் ஆயத்தமாக
இருக்க வேண்டும் . இரு சக்கர வண்டி வேண்டாம் மகிழுந்து நல்லது அதற்கு நீங்கள் போக வேண்டாம்
இந்த வேலை முடிந்தவுடன் எனக்குக் கை கால் கழுவ உப்புக்
கலந்த வெந்நீர் வேண்டும் குடிப்பதற்கு
நிறைய தண்ணீர் வேண்டும்
ஒரு ஒன்னரை மணி நேரத்தக்குள் இதெல்லாம் நடந்து விடும்
என்று எதோ எதிரியைத் தாக்க படைஎடுக்க ஆயத்தம் செய்வது போல்
அவர் சொல்லச் சொல்ல எனக்கு என்னவென்று
புரியாத ஒரு வித அச்சம் ,குழப்பம் .
பிறகு அவர் தொடர்ந்து பேசினார்
இன்னொரு மிக முக்கியமான் செய்தி .
ஏவலை நான் எடுக்கும்போது அல்லது சிறிது நேரத்தில் அதை
வைத்தவர் இங்கு வருவார்
என்று சொன்னார்
அடுத்த இரண்டு நாளும் இரண்டு யுகமாகக் கழிந்தது . மூன்றாம்
நாள் காலை அவர் வந்து விட்டார் முகம் முற்றிலும் வேறு மாதிரி இருந்தது ஒரு பெரிய
அறுவை சிகிச்சை செய்யப்போகும் மருத்துவர் வெடிகுண்டு அருகில் நெருங்கிய வெடிகுண்டு
நிபுணர் இவர்கள் முகத்தில் காணப்படும் பதற்றம் , களைப்பு எல்லாம் அவர் முகத்தில்
தெரிந்தது ஒரு தியான நிலையில் இருப்ப்து
போல் வாய் அமைதியாக முணுமுணுத்துக் கொண்டே இருந்தது .
மெதுவாக தோட்டத்து
மூலைக்குப் போய் ஒரு நீளமான கம்பியினால் அங்கு சற்று ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த
ஒரு சிறிய துணிப்பையை எடுத்தார் . அதற்குள் சில கரித்துண்டுகள் ஆணிகள் இருந்தான்
,அந்தப்பையை அவர் சிறிய பெட்டிக்குள்
போட்டு அடைத்து அந்தப்பெட்டியை ஒரு சிறிய சுருக்குப்பையில் போட்டு மூடி என்னிடம்
கொடுதது விட்டு அப்படியே இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிகொண்டார் .
சில நொடிகள் கழித்து உப்புத் தண்ணீரில் முகம் கைகாலை நன்றாகக் கழுவிக்கொண்டு நிறைய
தண்ணீர் குடித்தார்
“இறைவன் அருளால் நான் வந்த
வேலை நல்லபடியாக நிறைவேறியது . இனி உங்கள் மகளுக்கு ஒரு குறையும் வராது. நிறைய
இறைவணக்கத்தில் ஈடுபடுங்கள் .முடிந்த வரை தான தருமங்கள் செய்யுங்கள்
ஓரிரு மாதங்களுக்கு இந்த ஊரை விட்டு எங்காவது இயற்கை எழில்
கொஞ்சும் மலைப்பகுதி, கடற்கரை , காடுகள் , சிற்றூர் போன்ற இடங்களில் தங்கி
இருங்கள் . குழந்தை உங்கள் கண்காணிப்பில் இருக்கட்டும் இறைவன் அருளால் எல்லாம்
சரியாகிவிடும் நான் புறப்படுகிறேன்
என்றார்.பணம் பத்தாயிரம் கொடுத்தேன் . தொடவே இல்லை . இது எனக்கு இறைவன் கொடுத்த
வரம் இதற்கு காசு வாங்கினால் அது எனக்கு
நானே செய்யும் துரோகம் என்று சொல்லி விட்டு எழுந்தார்
சரியான முறையில் நன்றி சொல்லக்கூட எனக்குத் தெரியவில்லை
வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தேன். ஏவல் வைத்தவர்
வருவார் என்று சொன்னீர்களே என்று கேட்டு வாயை மூடுவதற்குள் வீட்டுக்கு வந்த ஒருவரை
காண்பித்து இவர்தான் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்
எனக்கு சொல்ல முடியாத அதிர்ச்சி,குழப்பம் ஒரு வித மயக்கம் .
இப்படியும் நடக்குமா என்று மனதில் எண்ணங்கள் அலைமோதின.
என்று சொல்லி விட்டு சற்று நேரம் அமைதி காத்தார் நண்பர் .
முகத்தில் உணர்ச்சிப் பிழம்புகள்.நானும் ஒன்றும் கேட்காமல் அவர் பேசட்டும் என்று
காத்திருந்தேன்
“ இப்போது கூட என்னால் அதை நம்ப முடியவில்லை . ஆசிரியர்
இவர்தான் என்று சுட்டிக்காட்டியவர் எனது மாமனார் – என் துணைவியின் தந்தை – என்
குழந்தைகளுக்கு தாத்தா
ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டேன் என்னப்பா
சொல்கிறாய் ஒன்றும் விளங்கவில்லை என்றார்
சற்று மிரட்டும் தொனியில் கேட்டவுடன் ஆம் நான்தான் செய்தேன்
,பேத்தியின் விழாவில் எனக்குரிய மரியாதை செய்யாமல் புறக்கணித்தீர்கள் . அதற்கு பழி
வாங்கத்தான் இப்படி செய்தேன் என்று எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல்
சொன்னார்
எனக்கு வந்த ஆத்த்ரத்தில் அவரை அப்படியே அடித்து நொறுக்க
வேண்டும் போல் தோன்றியது . அதை கட்டுப்படுத்திக்கொண்டு உடனே வெளியே போய்விடுங்கள்
இதுவே நமது கடைசி சந்திப்பாக இருக்கட்டும் ,இனி உங்களுக்கும் என் குடும்பத்க்கும்
ஒட்டு உறவு எதுவும் கிடையாது என உறுதியாகச் சொன்னேன்
தலை குனிந்தவாறே எழுந்து வெளியே போய் விட்டார்
நான் இதுவரை இவ்வளவு விரிவாக இது பற்றி யாரிடமும் சொன்னது
கிடையாது , உங்களைப் பார்த்தவுடன் சொல்ல வேண்டும் போல் தோன்றியது .இப்போது என்
மனதில் இருந்து பெரிய பாரம் இறங்கியது போல் உணர்கிறேன் .பொறுமையாகக் கேட்டதற்கு
நன்றி என்று சொன்னார்
நான் கேட்க வாய் திறப்பதற்குள் அவரே சொன்னார்
என் மகள் இறைவன் அருளால்
இப்போது மருத்துவம்
இரண்டாம் ஆண்டு படிக்கிறார் . நன்றாகப் படிக்கிறார் என்று சொல்லிவிட்டு மீண்டும் நன்றி தெரிவித்து
விட்டுப் புறப்பட்டார்
வெகு நேரம் எனக்கு திகைப்பு அடங்கவில்லை இப்படியும்
மனிதர்கள் இருப்பார்களா .அதுவும் பாசத்தை கொட்ட வேண்டிய தாத்தா
எனக்கே திகைப்பு அடங்க வெகு நேரம் ஆயிற்றே அவருக்கு எப்படி
இருந்திருக்கும் பேய் பிசாசு ஏவல் சூனியம்
இவற்றை எல்லாம் தாண்டி மனித மனம் இவ்வளவு மோசமானதா இவ்வளவு தப்பாக இருக்குமா என்ற
சிந்தனை மேலோங்கியது
எந்த ஒரு தந்தையும் தன் மகள் பற்றி இப்படி ஒரு செய்தியை
சொல்லும்போது அது முழுக்க முழுக்க
உண்மையாகத்தான் இருக்க வேண்டும்
சொன்னவரின் அடையாளம் வெளியே தெரிய வேண்டாம் என்பதற்காக சில மாற்றங்கள் செய்திருக்கிறேன்
இ(க)டைச்செருகல்
இந்த சந்திப்பு, உரையாடல் நடந்து இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. அதற்குப்
பிறகு அவரை அதிகம் சந்திக்க வாய்ப்பு இல்லை
இருந்தாலும் அவர் பெயர், அவர் மகள் படிக்கும் மருத்துவக் கல்லூரி
எல்லாம் தெளிவாக நினைவில் நிற்கின்றன
இன்று கூட அதை நினைத்தால் அந்த உண்மையை உண்மை என்று தெளிவாகத் தெரிந்தாலும் மனது ஏற்க
மறுக்கிறது
இறைவன் நாடினால் மீண்டும் வேறொரு பதிவில் சிந்திப்போம்
31102020sat
sherfuddinp.blogspot.com
sherfuddinp@gmail.com
No comments:
Post a Comment