Wednesday, 7 October 2020

சின்னச் சிதறல் அட மாங்கா

 







சின்னச் சிதறல்

 

அட மாங்கா


 டிஸ்கவரி தொலைக்காட்சியில் சில் நாட்கள் முன்பு ஒரு உணவு _


முற்றிலும் மாறுபாடான ஒரு உணவ பற்றிய காட்சியை அரைகுறையாகப் பார்த்தேன்


உடனே இது போன்று பார்த்த படித்த கேள்விப்பட்ட சில வித்தியாசமான உணவு வகைகள் எண்ணத்தில் அலைமோத அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


நாலைந்து பெண்கள் ஒன்றாக

 உட்கார்ந்து கொண்டு பெரிய அரிவாள் மனையில் பெரிய மாங்காயில் அலகுகளை பாதிக்கு மேல் நறுக்கி நிறைய கல் உப்பை அலகுக்கும் கொட்டைக்கும் இடையில் திணித்து சாடியில் போட்டு விடுவார்கள் எண்ணெய் மிளகாய்ப்பொடி எதுவும் இல்லாத ஒரு ஊறுகாய்

இது தான் அட மாங்கா (அடை மாங்காய்?)

உப்பில் ஊறிய மாங்காய் தேன் நிறத்தில் மிகச் சுவையாக இருக்கும்


அடுத்து ஒரு இனிப்பு 

மெல்லிய சிரட்டை உள்ள  தேங்காயின் கண்களில் துளையிட்டு தேனை ஊற்றி துளையை அடைத்து விட்டு தண்ணீரில் வேக வைத்தால் தேன் தேங்காயில் கலந்து மிகச் சுவையாக இருக்குமாம்


மீண்டும் தேங்காய் 

தேனுக்குப் பதில் முட்டை

தேன் ஊற்றியது போல் நாலைந்து முட்டைகளை உடைத்து ஊற்றி துளையை அடைத்து நீரில் வேகவைத்து எடுத்து தேங்காயை கவனமாக உடைத்தால் கிடைப்பது யானை முட்டை


நெய்தல் நில சிறப்பு உணவு ஒன்று

சிவப்பு அரிசி சோறை சுடச்சுட புதிய பனை ஓலையில் போட்டு புத்தம்புது வாவல் மீன் குழம்பை அதில் ஊற்றி பனை ஓலையை மூடி நன்றாகக் குலுக்கி விட்டு கொஞ்ச நேரம் கழித்து திறந்தால் சோறு மணம் மீன்குழம்பு மணம்  பனை ஓலை மணம் எல்லாம் கலந்து நாசிக்கும நாக்குக்கும் விருந்து படைக்கும்

தொட்டுக்கொள்ள புத்தம்புது வஞ்சிர  மீன் வறுவல்

நாக்கு ஊறுகிறதா !!


மக்கி ரொட்டி பஞ்சாப் குளிர்கால சிறப்பு உணவு

மக்காச்சோளத்தில். ரொட்டி

பக்க உணவும் அதே மக்காச்சோளத்தில் குழம்பு போல்.

மேலே அரை சென்டிமீட்டருக்கு வெண்ணெய் மிதக்கும்

மிகச் சுவையாக இருக்கும்


நெல்லை கல்தோசை சொதி கேரள பத்ரி கோழிச்சாறு இன்று நினைத்தாலும் கண்ணில் நீர்வரும் ராஜஸ்தான் மிளகாய் போண்டா ஒரு கிலோ அரிசிக்கு பத்துப் பன்னிரண்டு கிலோ கறி சேர்க்கும் காயல்பட்டினம் பிரியாணி இவற்றைஎல்லாம் மிஞ்சும் எங்கள் ஊர் தாளிச்சோறு பொடிக்கறி ஆணம் இதெல்லாம் பற்றி. ஏற்கனவே எழுதியிருக்கிறேன்


நிறைவாக டிஸ்கவரி தொலைக்காட்சியில் நான் பார்த்த உணவு

மசாலாவில் நன்றாக ஊறிய கறித்துண்டுகள் அரை கிலோ இருக்கும் அதை அப்படியே மூடுவது போல் நாலைந்து புரோட்டாவை வைத்து வாழை இலையில் மடித்து அதற்கு மேல் வெள்ளி இழைத்தாள் (சில்வர் பாயில்)

இதற்கு மேல் பச்சைக்களி மண்ணைப் பூசி கொழுந்து விட்டு எரியும் தீயில் மூன்று மணி நேரம் வேக விட்டு எடுக்கிறார்கள்

சுவை எப்டடியோ செய்முறை கேட்க பார்க்க நன்றாக இருக்கிறது

 

இ(க)டைச்செருகல்


அடமாங்காய் மறந்துபோன ஒன்று என்று நினைத்தேன்..ஆனால் நீர் குழாயில் ( யூ ட்யூப்) நிறைய குறிப்புகள் இருக்கின்றன


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

07102020wed

sherfuddinp.bligspot.com

sherfuddinp@gmail.com


FB

Blocked

அட மாங்கா






No comments:

Post a Comment