தமிழ் மொழி அறிவோம்
பெற்ற தாய் வயிறு
புலியின் குகை
இவை இரண்டையும் தொடர்பு படுத்தும் சங்க இலக்கியப்பாடல்
ஒன்று இருக்கிறது
அது என்ன பாடல்?
புலி சேர்ந்து போகிய கல் அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!
என் மனதில் பதிந்த பாடல் வரிகள் இவை
படித்தது பார்த்து கேட்டது எல்லாம் மனதில் பதிவதில்லை
பலி .... வரிகள் பதிந்ததற்கு இரண்டு காரணங்கள்
உறவினர் ஒருவர் தன் மகன் பற்றி இந்த வரிகளை சொல்லி கேலி செய்து
என் மகன் எங்கே என்று யாராவது கேட்டால் அவன் கல்யாணப் பந்தி உணவு விடுதி விருந்து நடக்கும் இடங்களில் சாப்பிட்டடுக் கொண்டிருப்பான் என்றுதான் சொல்ல வேண்டும்
என்று சொன்னது என் மனதில் நன்றாகப் பதிந்து விட்டது அப்போது எனக்கு பணிரெண்டு வயது இருக்கும்
அடுத்து இதே பாடல் கல்லூரிப் பாடமாக வந்தது
பொள்ளாச்சி ந மு க ம கல்லூரி பேராசிரியர் கேசவன் பாடம் நடத்திய விதம் பாடலின் பொருள் முழுமையாக மனதில் படம் போல் பதிந்து விட்டது
பாடல்
சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன்
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன்
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!
புறநானூறு 86
பாடலின் பொருள்
என் வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிக்கொண்டு நின்று
“உன் மகன் எங்கு இருக்கிறான்” என வினவுகிறாய்.
அவன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது.
புலி வெளியேறியுள்ள கல்லுக்குகை போல
அவனைப் பெற்றெடுத்த வயிறுதான் இது.
அவன் தானாகவே போர்க்களத்தில் தோன்றுவான்.
(நீங்கள் அவனைப் போருக்கு அழைக்க வேண்டியது இல்லை).
இந்தப் பாடலுக்கு பல்வேறு நீண்ட விளக்கங்கள் பல அறிஞர்கள் எழுதியுள்ளனர்
ஆனால் எனக்குத் தெரியும் காட்சி இதுதான்
ஒரு வீரத் தமிழ்ப் பெண்ணின் முகம்
அதில் மின்னும் பெருமை பெருமிதம்
இவையெல்லாம் கலந்த ஒரு தாய்மை உணர்வு
இந்தப்பாடலை இயற்றியவர் காவற்பெண்டு என்ற பெண் புலவர்
சரியான விடை அனுப்பி பாராட்டுப் பெறுபவர்கள்
திருவாளர்கள்
ரவி ராஜ்
சிவசுப்பிரமணி
DRP சுந்தரம்
முத்துக்கண்ணன் கனகராஜ்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
28102020wed
sherfuddinp.@gmail.com
sherfuddinp.blogspot.com
Also please support and subscribe my channel
My channel link :
https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA
No comments:
Post a Comment