எழுபதாம் அறிவு
மதிய உணவுக்குப் பின்
தொலைக்காட்சி அலைவரிசைகளை புரட்டிக் கொண்டிருந்தேன்
மூன் அலைவரிசையில் யார் நீ திரைப்படம்
இளமையான அழகான ஜெய் சங்கர் ஜெயலலிதா இணை சற்று மாறுபட்ட மர்மக்கதை
அதெற்கெல்லாம் மேல் இனிமையான பாடல்கள்
நானே வருவேன் என்ற பாடலுக்காகவே படத்தைப் பார்க்கலாம்
ஒரு இருபது நிமிடம்தான் பார்த்திருப்பேன்
அதற்குள் மூன்று இனிமையான பாடல்கள் சுசீலாவின் குரலில்.
சிறிது நேரம் கழித்து பார்த்த பாடல்களை நினைவு படுத்திப் பார்த்தேன்
எவ்வளவோ மூளையைக் கசக்கியும் மூன்றாவது பாடல் நினைவுக்கு வரவில்லை
வேறு வழியில்லாமல் இணையத்தில் பார்த்து மூன்றாவது பாடலை தெரிந்து கொண்டேன்
அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் இதே குடைச்சல் மூன்றாவது பாடல் மறந்து விட்டது
மீண்டும் இணையும்
மீண்டும் மறதி பத்து நிமிடத்தில்
அதற்குள் கைப்பேசி பேரன் கைக்குப் போய்விட்டது
அவனிடம் கேட்க_
நல்ல வேளை பேரன் காதில் எதுவும் மாட்டவில்லை -
உடனே இணையத்தில் பார்த்து பொன்மேனி என்று பாடல் வரியைச் சொல்ல அதன் பிறகுதான் மனதில் பதிந்தது
இதேபோல் இன்னொரு நிகழ்வு
சில நாட்கள் முன்பு
மனதில் என்ன நினைவுகளோ என்ற பாடல்
எனக்குப் பிடித்த பாடல்
முதல்முறையாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
என் கற்பனையில் இருந்த காட்சிக்கு முற்றிலும் மாறுபாடாக ஒரு குழு நடனக் காட்சி
அதனால் பாடல் மனதில் பதியவில்லை
அடுத்தநாள் அது என்ன பாட்டு எஸ் பீ பியும் சைலஜாவும் பாடியது என்று குடைச்சல்
நல்ல வேளை படப்பெயர் நினைவில் இருந்ததால் வலையில் தேடி பாடலைத் தெரிந்து கொண்டேன்
இதற்கெல்லாம் மேல் அவ்வப்போது வேறுவிதமான குடைச்சல்
நன்றாகத் தெரிந்த ஒரு பாடலின் இசை ராகம் மெட்டு எல்லாம் தெளிவாக மனத்திரையில் வரும்
ஆனால் பாடல் வரிகளோ சொற்களோ நினைவில் வராது
வலையில் தேட முடியாது யாரிடமும் கேட்கவும் முடியாது
பாடல் நினைவுக்கு வரும் வரையில் காத்திருப்பதுதான் ஓரே வழி
இதையெல்லாம் பார்த்தால் நானும் சுஜாதா ஆகி விட்டேனோ என்ற எண்ணம்
அபியும் நானும் படத்தில் நானும்
Freelance journalist ஆக இருந்தேனோ என்று begger ஆக இருந்து அபியின் நண்பனான ரவி சாஸ்திரி சொல்வது போல்
நிறைவாக
மூன் தொலைக்காட்சியெல்லாம் இப்போதுதான் கண்ணில் படுகிறது
நான் அடிக்கடி பார்க்கும் சன் கே முரசு இசையருவி கலைஞர் இதெல்லாம் வரிசையாக முதலில் இருந்தது
அலை வரிசை எண்கள் மாற்றியதில் கே முரசு எல்லாம் மிகவும் பின்னால் போய்விட்டன
அவற்றைத் தேடும்போது மூன் பொதிகை பெப்பர் போன்ற பல அலை வரிசைகள் கண்ணில் படுகின்றன
Freelance journalist
கட்டற்ற இதழாளர் என்று சொல்லலாமா?
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
No comments:
Post a Comment