மறுமை நாள் காட்சிகள்
குர்ஆன் பார்வையில்
மறுமை நாளில் பூமியில் ஏற்படும் மாற்றங்கள் எவை?
1.இந்த பூமி வேறு பூமியாக ------------மாற்றப்படும் --------(14 :48)
2.அவைகளை (மலைகளை)—இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப்போல்) பரப்பி விடுவான்
3.பின்பு அவற்றை (பூமியை) சமவெளியாக்கிவிடுவான்
4.அதில் மேடு பள்ளம் இருக்காது (20: 105-107)
5..(அப்)பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான் என்று (சுவர்க்க வாசிகள்) கூறுவார்கள் (39:74)
6..கடல்கள் தீமூட்டப்படும் (81:6)
7..கடல்கள் (பொங்கி ஒன்றால் ஓன்று) அகற்றப்படும் ---(82:3)
8..இன்னும் பூமி விரிக்கப்படும்(84:3)
இந்த இறை மொழிகளின் அடிப்படையில் இப்ன் அப்பாஸ் போன்ற மார்க்க அறிஞர்கள் சொல்கிறார்கள் :
நாம் வாழும் இந்த பூமியே சுவனத் தோட்டமாக மாற்றப்படும் , பூமியைப் பிரிக்கும் மலைகள், கடல்கள், ஆறுகள், பாலைவனங்கள் எதுவும் இல்லாமல் ஒரே நாடாக இந்தப்பரந்த பூமி இருக்கும்
.நாடு மதம் ,இனம் ,குலம் போன்ற பிரிவினைகள் எதுவும் இல்லாமல் இறைவனின் நல்லடியார்கள் இங்கு என்றும் நிரந்தரமாக வசிப்பார்கள்
(Source:Towards understanding Quran – V 20: 107 Explanatory note 83 )
நம் எல்லோருக்கும் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ந்த சுவனவாசிகளாகும் வாய்பபை இறைவன் அருள வேண்டும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
23102020fri
sherfuddinp@gmail.com
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment