Saturday, 2 March 2024

தமிழ்( மொழி) அறிவோம் முசு முசுக்கை 03032024 ஞாயிறு






 தமிழ்( மொழி) அறிவோம்

முசு முசுக்கை
03032024 ஞாயிறு
இம்முறை மிக எளிய , நேரடி வினா
நிறைய சரியான விடைகள் எதிர் பார்க்கிறேன்
“இரு குரங்கின் கை “
பொருள் என்ன ?
விடை
முசுமுசுக்கை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
Khatheeb Mamuna Lebbai
முதல் சரியான விடை
ஆ ரா விஸ்வநாதன்
ஹசன் அலி
ஷர்மதா
வேலவன்
ரிffபாத்
தல்லத் &
சிவசுப்பிரமணியன்
விளக்க்ம்
முசுமுசுக்கை – ஒரு மிக அற்புதமான மூலிகை
மூலிகைகள் சிலவற்றின் பெயரை குறியீட்டில் சொல்வது
சித்தர்கள் வழக்கம்
கற்றாழையை குமரி மருந்து எனக் குறிப்பிடுவார்கள்
அது போல் முசுமுசுக்கையை இரு குரங்கின் கை எனச் சொல்கிறார்கள்
வடமொழியில் முசு என்றால் குரங்கு என்று பொருளாம்
இரு குரங்கின் கை = முசுமுசுக்கை
குரங்கின் கை முடிகளுடன் முசு முசு என்று இருக்கும்
அது போல் முசு முசுக்கை இலையும் இருப்பதால் இப்படி ஒரு பெயர் என இன்னொரு விளக்கமும் காதில் விழுந்திருக்கிறது
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௦௩௦௩௨௦௨௪.
03032024 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment