Tuesday, 26 March 2024

நபி ஸல் 16-20 ****

 




நபி ஸல்

16 அகழ்ப் போர்
பனி குரைஷா
27032024 புதன்
ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு மதீனாவை தாக்கி அழிக்கும் நோக்கத்துடன் 10,000,வீரர்கள் கொண்ட பெரும்படை மக்காவில் இருந்து புறப்பட்டது
குறைஷிகளின் எல்லாக் குலத்தவரும் , பாலைவனத்தின் பெரிய இனமான கடாபினின் எல்லாக் குலத்தவரும் இப்படையில் இருந்தனர்
பெர்ஷியாவைச் சேர்ந்த சல்மான் என்பவர் சொன்னபடி மதீனா எல்லையில் ஒரு பெரிய அகழி உண்டாக்கப்பட்டது
நபி பெருமானே முன்னின்று அகழி தோண்டும் பணியில் ஈடுபட்டார்கள்
அரபு போர் வரலாற்றில் அறியாத அகழியைப் பார்த்து திகைத்து நின்றது எதிரிப்படை
குறிப்பாக படையில் பெருமளவில் இருந்த குதிரை வீரர்களால் இந்த தடையைக் கடக்க முடியவில்லை
சற்றுத் தொலைவில் இருந்து அம்பு மழை பொழிந்தனர் குறைஷிப்படையினர்
எதி ரிக்ளின் தாக்குதலை எதிர்நோக்கியிருந்த இஸ்லாமியர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி ---
பனி குரைஷா எனும் யூத குலத்தினர் இதுநாள்வரை இஸ்லாமியர்களுக்கு இருந்தவர்கள், இப்போது எதிரிகளுடன் சேர்ந்து விட்டனர்
எனவே மிகவும் நம்பிக்கை இழந்த நிலையில் இஸ்லாமிய்ர்கள் .---
ஆனால் அகழியினால் உண்டான நேர விரயம் , எதிரிப்படை யின்
உற்சாகத்தை நீர்த்துப் போக வைத்த்து
மேலும்இஸ்லாமியர் ஒருவர் குரைஷிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளித்த யூதக் குலங்களுக்குமிடையே அவ நம்பிக்கையை விதைப்பதில் வெற்றி கண்டார்
இதன் விளைவாக செயலில் இறங்க ஒரு தயக்கம்
இதற்கெல்லாம் மேலாக தொடர்ந்து மூன்று நாட்கள் கடும் குளிர் காற்று
கூடாரங்கள் ஓன்று விடாமல் காற்றில் பறந்து விட்டன
விளக்கு, அடுப்பு பற்ற வைக்க வழியில்லை
துயரத்தின் எல்லையில் படை வீரர்கள்
வேறு வழியின்றி இரவோடு இரவாக பின் வாங்கிச் சென்றது குறைஷிப்படை
அதிகாலையில் இதை அறிந்த கடாபின் கூட்டத்தாரும் மூட்டை முடிசுகளை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பினர்
அகழ்போரிலிருந்து திரும்பியவுடன் நபி அவர்கள் நயவஞ்சகமாக போர் நேரத்தில் விலகிப்போன bani qurayzah பனி குரைஷா எனும் யூதர் குலத்தின் மேல் போர் தொடுத்தார்கள்
தங்கள் தவறை, குற்றத்தை உணர்ந்து அறிந்த யூதர்கள் தங்களுக்குப் பாதுகாப்பான ஒரு அரணில் தஞ்சம் புகுந்தனர்
ஒரு மாத முற்றுகைகுப்பின் , நிபந்தனையின்றி சரணடைந்த யூதர்கள்
நபியிடம் ஒரு கோரிக்கை வைத்தனர் :
“தங்களுக்கு நெருக்கமான அரபு இனத்தவர் ஒருவரை தங்களுக்கு நீதி வழங்க நியமிக்க வேண்டும்”
என்ற அந்தக் கோரிக்கையை நபிகள் ஏற்றுக் கொண்டார்கள்
ஆனால் அந்த அரபு இனத்தவரின் தீர்ப்பு யூதர்களுக்கு எதிரானதாகவே இருந்தது
அதன்படி நயவஞ்சக யூத ஆண்கள் அனைவரும் உயிர் துறக்க வேண்டும்
பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாகி விட வேண்டும்
15ஆவது இப்தாரையும் 16 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி முதல் சரியான விடை
Khatheeb Mamuna Lebbai
இன்றைய வினா
அன்னை ஆயிஷா அவர்கள் மேல் சுமத்தப்பட்ட வீண் பழிபற்றி வரும்
குரான் சுராஹ் எது ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
16ரமலான்(9) 1445
27032024 புதன்
சர்புதீன் பீ

**************************************************





நபி ஸல்
17 அவதூறு –வீண் பழி
28032024 வியாழன்
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டின் துவக்கம் –
பனி இ முஸ்தாலிக் இனத்தார் இஸ்லாமியர் மேல் படை எடுத்துத் தாக்க திட்டமிட்டிருந்தனர்
இதை அறிந்த நபி அவர்கள் படை எடுத்துப் போய் அவர்களுடன் போரிட்டார்கள்
போர் முடிந்து திரும்பி வரும்போது கவனக் குறைவால் அன்னை ஆயிஷா தனித்து விடப்பட்டார்கள்
இளம் வீரர் ஒருவர் ஆயிஷாவை நபி இருந்த முகாமுக்குக் கொண்டு சேர்த்தார்
இந்த சிறிய நிகழ்வு ஊதி பெரிதாக்கபட்டு மிகப் பெரிய அளவில் அன்னை மேல் அவதூறு பரப்பபட்டது
குரான் சூராஹ் 24 அந்நூர் வசனம் 11- 20ல் இந்த அவதூறை இறைவன் கடுமையாகக் கண்டிக்கிறான்
அந்த வசனங்களின் கருத்து +
“அவதூறைப் புனைந்தவர்கள் உங்களில் ஒரு குழுவினரே ;
இதுவும் உங்களுக்கு நன்மையாகவே உள்ளது
அவதூறில் பங்கெடுத்த அனைவருக்கும் கடும் தண்டனை உண்டு
அவதூறைக் கேள்விப்பட்ட நம்பிக்கை உள்ளவர்கள் யாரும் இது வீண் பழி என்று ஏன் சொல்லவில்லை ?
4 சாட்சிகள் கொண்டு வராமல் அவதூறு சொல்பவர்கள் பொய்யர்கள்
நீங்கள் அறியாத ஒன்றை பரப்பியது கடும் குற்றமாகும்
இறைவன் மிகுந்த இரக்க குணம் உள்ளவன்
இல்லையேல் ஆதாரம் இல்லாத ஒரு அவதூறைப் பரப்பிய உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும் “
அவதூறு பரப்பியதில் பெரும்பங்கு வகித்தவன் நயவஞ்சக முஸ்லிம் குழுவின் தலைவனாகிய அப்துல்லா இப்னு உபய்
ஒரு கட்டத்தில் புலம் பெயர்ந்து வந்த முஸ்லிம்களுக்கும் ,யத்ரீபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் நடந்த சிறு சண்டையைப் பார்த்து மனம் மகிழ்ந்து
“புலம் பெயர்ந்து வந்தோர் விரைவில் மதீனாவிலிருந்து வெளியேற்றப் படுவார்கள்”
என சொல்லி தன் மனதில் உள்ள துரோக எண்ணத்தை வெளிக்காண்பித்தான்
“நயாவஞ்சகர்கள் சொல்கிறார்கள் :
நாங்கள் மதி னாவுக்குச சென்றால் ,கண்ணியமிக்கவர்கள் கேவலமானவர்களை வெளியேற்றி விடுவார்கள்
என்று
இவர்கள் அறியவில்லை கண்ணியம் எனபது இறைவனுக்கும் ,இறைதூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும் (குரான் 63 :8)
16ஆவது இப்தாரையும் 17 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோKhatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா
பாப்டி
இன்றைய வினா
நபிகள் மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள முயற்சிக்கத் தூண்டுதலாய் இருந்தது எது ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
17ரமலான்(9) 1445
28032024 வியாழன்
சர்புதீன் பீ

&&&&&&&&&&&&&&&&&&&&&&&







நபி ஸல்
18 ஹுதய்பியா உடன்படிக்கை -- வெற்றி வெற்றி
29032024வெள்ளி
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு
நபிகளுக்கு ஒரு காட்சி தெரிந்தது –மக்கமாநகருக்குள் எதிர்ப்பேதும் இல்லாமல் தாம் நுழைவது போன்று
அதை உறுதி செய்யும் இறை வசனம் :
“இறைவன் நாடினால் நீங்கள் முழு அமைதியுடன் புனிதத் தலத்தில் நுழைவீர்கள்” ( குரான் 48: 27)
உடனே மக்காவுக்குப் புனிதப்பயணம் செல்ல முயற்சிக்க எண்ணினார்கள்
தன்னுடன் வருமாறு மதீனா வாசிகளுக்கு அழைப்பு விடுத்தார்
எதிர்பாராத அற்புதமாய் கிடைத்த அகழ்ப் போர் `வெற்றியின் விளைவாக பல அரபு இனங்கள் இஸ்லாத்தில் இணைந்தன . அவர்களுக்கும் நபிகள் விடுத்த புனிதப் பயண அழைப்புக்கு யாரும் செவி சாய்க்க்கவில்லை
புனிதப் பயண உடையணிந்து ,காணிக்கைகளை சுமந்து கொண்டு ,1400 பேருடன் நபிகள் பயணம் புறப்பட்டார்கள்
குழு மக்காவை நெருங்குமுன்னே நபிகளை ஒருவர் எச்சரித்தார்
“குறைஷிகள் உங்களை மக்காவுக்குள் நுழையாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்கின்றனர்
அவர்கள் வீரத்தின் அடையாளமான புலித் தோல் உடை அணிந்திருக்கிறார்கள்
குதிரைப்ப டை ஆயத்த நிலையில் இருக்கிறது “
இதனால் நபி தம் தோழர்களை மாற்றுப்பாதையில் இட்டுச் சென்றார் ஏற்கனவே களைத்து போயிருந்த அவர்களுக்கு இந்த சுற்று வழியில் , அதுவும் மலைப்பாதையில் வருவது மிகவும் சிரமமான பயணமாக அமைந்தது
ஒரு வழியாக மக்காவின் அருகில் வந்து
ஹுதய்பியா என்ற இடத்தில் முகாமிட்ட நபி, தாங்கள் வந்திருப்பதை அறிக்க்க மக்கமாநகருக்கு ஒருவரை அனுப்பினார்கள்
ஆனால் குறைஷிகள் அவரை துன்புறுத்தி , அவரின் ஒட்டகத்தையும் முடமாக்கி விட்டார்கள் . கொண்டு போன செய்தியைச சொல்லாமலே அவர் திரும்பி விட்டார்
குறைஷிகள் தங்கள் தூதுவர்களை அனுப்பினர்
முதலில் வந்த ஒருவர் மிகவும் அச்சமூட்டுவது போலப் பேசினார்
அடுத்து வந்தவர் நபிகளுக்கு உரிய மரியாதை எதுவும் காண்பிக்காமல் மிகவும் இயல்பாக தன நண்பருடன் பேசும் தொனியில் பேசினார்
நபித் தோழர்கல் அவரை கடுமையாக எச்சரித்து நபிக்கு உரியமரியாதையை நினைவூட்டினர்
அவர் மக்கா திரும்பியதும் சொன்னது
“நான் சீசர் போன்ற மாமன்னர்களின் அரசவை ஆடம்பரத்தை நேரில் பார்த்திருக்கிறேன்
ஆனால் நபித் தோழர்கள் நபிக்கு அளிக்கும் மரியாதை, கண்ணியத்துக்கு இணையான ஒரு காட்சியை எங்கும் கண்டதில்லை “
அடுத்து மக்காவுக்கு தூது செல்ல நபி அவர்கள் தெரிவு செய்தது
உத்மான் அவர்களை
உத்மானுக்கு என்று ஒரு தனி மரியாதை மக்காவில் உண்டு ; அவரின் நெருங்கிய உறவினர்கள் பலர் உம்மையத் எனும் செல்வாக்கான குடும்பதைச் சேர்ந்தவர்கள் அங்கே இருந்தனர் .
உத்மான் திரும்பி வருவதற்காகக் காத்திருந்தபோது
,அவர் கொல்லப்பட்டார்
என்ற செய்தி வந்தது
உடனே நபியவர்கள் ஒரு மர நிழலில் இருந்தவாறு உடன் வந்த தோழர்கள் அனைவரிடமும்
“வென்றாலும் வீழ்ந்தாலும் ஒன்றாக நிற்போம் “
என்ற உறுதி மொழி வாங்கினார்கள்
“அந்த மரத்தடியில் அவர்கள் உறுதி மொழி எடுத்த போது இறைவன் அவர்களைப் பொருந்திக்கொண்டான் ------------அவர்களுக்கு அண்மையில் இருக்கும் வெற்றியை அளித்தான்—“குரான் 48 :18
சிறிது நேரத்தில் உத்மான் கொல்லப் படவில்லை என்ற நல்ல செய்தி வந்தது
மக்காவிலிருந்து இஸ்லாமியர்களைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் வந்த படை ஓன்று மடக்கிப் பிடிக்கப்பட்டு நபிகள் முன் நிறுத்தப்பட்டது
பகைமை உணர்வை விட்டொழிக்க உறுதி அளித்ததன் பேரில் அவர்களை நபிகள் மன்னித்து அருளினார்கள்
அதன் பின் குறைஷிகள் முறையான தூதை அனுப்பினார்கள்
சில சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்
ஹுதய்பியா உடன் படிக்கை கையெழுத்திடப்பட்டது
அதன் படி ---
அடுத்த 10 ஆண்டுகளுக்கு இருவருக்கும் இடையில் பகைமை உணர்வு இருக்கக் கூடாது
இந்த ஆண்டு நபி பெருமான் காபா ஆலயத்துக்கு போகாமல் மதீனா திரும்ப வேண்டும்
அடுத்த ஆண்டு நபியும் தோழர்களும் புனிதப்பயணம் மேற்கொள்ளலாம்
அதற்காக குறைஷிகள் மூன்று நாட்களுக்கு மக்காவை விட்டு விலகி இருப்பார்கள்
இந்தப்பத்து ஆண்டு காலத்தில் முஸ்லிம்களா மாறும் குறைஷிகள் திருப்பி அனுப்பப் பட வேண்டும்
ஆனால் குரைஷிகளாக மாறும் முஸ்லிம்கள் திருப்பி அனுப்பப் பட மாட்டார்கள்
மற்ற இனங்களும் குலங்களும் தங்கள் விருப்பம்போல் முஸ்லிம்களுக்கோ ,குறைஷிகளுக்கோ ஆதரவாக ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ளலாம் ----
இந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது உறுதி அளிக்கப்பட்ட வெற்றி எங்கே ?
ஹுதைபியாவிலிருந்து நபியும் தோழர்களும் மதினா திரும்பிக்
கொண்டிருக்கும் போது
சுராஹ் 48 அல் fபத் – வெற்றி இறங்கியது
48:1
اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا ۙ‏ 48:1. (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்
2
48:2 لِّيَـغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَ مَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ‏
48:2. உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் இறைவன் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
48:3 وَّ يَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِيْزًا‏
48:3. மேலும், இறைவன் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்).
இந்த ஒப்பந்தம் இதுவரை முஸ்லிம்கள் அடைந்த வெற்றிகளில் மிகப் பெரிய வெற்றியாய் அமைந்தது
முஸ்லிம்களுக்கும் சிலை வணங்குவோருக்கும் இடையே ஒரு தடைக்கல்லாக இருந்த போர் இப்போது நீக்கப்பட்டு விட்டது
இருவரும் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டார்கள்
இதன் விளைவாக இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் துவங்கியது
ஒப்பந்தம் கை எழுத்திடப்பட்ட இரண்டு ஆண்டுகளில் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது
இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் இஸ்லாத்தில் இணைந்தோர் எண்ணிக்கை ,
இதுவரை இணைந்தோரின் எண்ணிகையை விட கூடுதலாக இருந்தது
ஒப்பந்தம் கை எழுத்தான இரண்டு ஆண்டுகளில் குறைஷிகள் ஒப்பந்தத்தை மீறி விட்டார்கள்
இரண்டு ஆண்டுமுன்பு 1400 தோழர்களுடன் மக்கா நோக்கிப் பயணித்த நபி அவர்கள் இப்போது 10000 வீரர்களுடன் படை எடுத்துச் சென்றார்கள்
17ஆவது இப்தாரையும் 18 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷர்மதா முதல் சரியான விடை
ஹசன் அலி
இன்றைய வினா
யாருடைய ஆட்சியின் கீழ் யூதர்கள் அரபு நாட்டிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டார்கள் ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
18ரமலான்(9) 1445
29032024வெள்ளி
சர்புதீன் பீ

&&&&&&&&&&&&&&






நபி ஸல்
19 கெய்பர் போர்
30032024 சனிக்கிழமை
ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு
வடக்கு அரேபியாவில் யூதர்களின் வலுவான் கோட்டையாக விளங்கிய
கெய்பர் இஸ்லாமிய எதிரிகள் கூடிப் பேசி சதித்திட்டங்கள் போடும் பாசறையாகவும் இருந்தது
ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு கெய்பரை நோக்கி நபிகள் படை எடுத்துச் சென்றார்கள்
கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாய் வீழ்ந்து விட யூதர்கள் மதினாவில் முஸ்லிம்களின் வீடுகளில் குடியிருந்து வந்தார்கள்
கலிபா உமர் காலத்தில் யூதர்கள் அரேபியாவிலிருந்து முழுதுமாக வெளியேற்றப்பட்டார்கள்
யூதர்களின் கோட்டைகள் அனைத்தும் வீழ்ந்த அந்த நாளில்
நபிகளின் நெருங்கிய உறவினர் அபுதாலிபின் மகன் ஜாfபர் தன உற்றார் உறவினர்களுடன் அபிசீனியாவில் இருந்து அரேபியா திரும்பினர்
15 ஆண்டுகள் முன்பு குறைஷிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டுப் போனவர்கள் இவர்கள்
நபி அவர்களுக்கு நஞ்சு கலந்த உணவு கொடுத்து யூதர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டதும் கெய்பரில்தான்
ஒரு சிறு துண்டை வாயில் வைத்து சுவைபார்த்து துப்பிய நபிகள் மற்றவர்கள் அதைச் சாப்பிட வேண்டாம் என்று எச்சரித்தார்கள்
அதற்குள் சாப்பிட்டுவிட்ட தோழர் உடனடியாக உயிர் நீத்தார்
சுவைத்துப் பார்த்து துப்பிவிட்ட நபிகளுக்கும் அது நோயை உண்டாக்கி பின்னாளில் அவர்கள் உயிர் பிரியவும் அதுவே காரணமாக அமைந்தது
நச்சு உணவை சமைத்த பெண்மணி தான் துன்புறுத்தப்பட்டு வற்புறுத்தப் பட்டதால் அவ்வாறு செய்ததாக நபியிடம் சொல்ல
நபி அந்தப் பெண்ணை மன்னித்து விட்டார்கள்
18ஆவது இப்தாரையும் 19 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷர்மதா முதல் சரியான விடை
ஹசன் அலி
இன்றைய வினா
நபி அவர்கள் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் மக்காவுக்குள் நுழைவதாகக் கண்ட காட்சி எப்போது நிறைவேறியது
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
19ரமலான்(9) 1445
30032024 சனிக்கிழமை
சர்புதீன் பீ

**********************************





நபி ஸல்
20 புனிதப்பயணம்
31032024 ஞாயிறு
ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு
கெய்பர் போர் நடந்த அதே 7 ஆம் ஆண்டு
நபிகள் கண்ட காட்சி –
“இறைவன் நாடினால் நீங்கள் முழு அமைதியுடன் புனிதத் தலத்தில் நுழைவீர்கள்” ( குரான் 48: 27)
என்ற இறைவசனம் சொன்னது நிறைவேறியது
ஆம்
மக்கமாநகரில் உள்ள புனித ஆலயம் காபாவில் நபி அவர்கள் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் நுழைந்தார்கள்
ஒப்ந்த்தத்தின்படி குறைஷிகள் மக்காவை விட்டு வெளியேறிவிட்டார்கள் உயரமான் இடங்களில் இருந்து முஸ்லிம்களின் புனிதக் கடமை முறைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்
மூன்று நாள் காலம் நிறைவடையப் போவதாக குறைஷி தலைவன் செய்தி அனுப்ப நபி அவர்கள் மதீனா செல்ல ஆயத்தமானார்கள்
நபி கிளம்பிய பின் குறைஷிகள் மக்காவுக்குத் திரும்பினார்கள்
19ஆவது இப்தாரையும் 20 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறும்
ஒரே சகோ
ஹசன் அலி
இன்றைய வினா
முடாஹ் போரின் நோக்கம் என்ன ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
20ரமலான்(9) 1445
31032024 ஞாயிறு
சர்புதீன் பீ


OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

No comments:

Post a Comment