நபி ஸல்
6
முஸ்லீம்கள் அபீசீநியப் பயணம்
உமரின் மன(த) மாற்றம்
சமூக விலக்கு ஒப்பந்தம் (சஹிfபா)
17032024 ஞாயிறு
பெரும்பாலும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு,எதிர்த்து நிற்க முடியாத எளிய முஸ்லிம்களையே குறி வைத்துத் துன்புறுத்தினர் குறைஷிகள்- இது முதல் நான்கு ஆண்டுகளில்
சொல்ல முடியாத ,பொறுக்க முடியாத அளவுக்கு துன்புறுத்தல் அதிகரித்த நிலையில் போக முடிந்தவர்கள் கிறித்தவ நாடான அபீசீநியாவுக்கு புலம் பெயர்ந்து செல்லும்படி சொன்னார் நபி ஸல்
துன்புறுத்தல் தொடர்ந்து அதிகரிக்கிறது ; புலம் பெயர்ந்து போகிறவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்
இதையெல்லாம் மீறி,மக்காவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை படிப் படியாக உயர்கிறது
இது குறைஷிகளின் மனதில் ஒரு அபாய எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது
அரபியர்கள் அனைவரும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் காபா புனித ஆலயத்தின் பாதுகாவலர்கள் என்ற பெருமை குறைஷிகளுக்கு உரியது
அந்தப் புனித ஆலயத்தில் நடக்கும் சிலை வணக்கத்தை, அதனால் அவர்கள் அடையும் ஆதாயத்தை போற்றிப் பாதுகாப்பதை அவர்களின் தலையாய பணியாகக் கருதினார்கள்
அதில் ஒரு முயற்சியாக புனிதப் பயணத்தில் காபாவில் மக்கள் கூடும் நாட்களில் ஒவ்வொரு தெரு முனையிலும் நபியின் பரப்புரைக்கு எதிராக அவர் ஒரு மன நிலை சரியில்லாதவர் என்று சொல்லி மக்கள் அவரை நாடிச் செல்வதை தடுக்க முயன்றனர்
இன்னும் ஒரு முயற்சியாக நபி பெருமானிடம் தூது போனார்கள்
“நீங்கள் சொல்லும் மதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் .
ஆனால் அதில் எங்கள் கடவுளர்களுக்கும் இடம் வேண்டும்
நீங்கள் விரும்பினால் உங்களை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம் சிலை வணக்க எதிர்ப்பை நீங்கள் கை விட்டு விட்டால் “
இந்த முயற்சியும் தோல்வியை சந்தித்தது
அடுத்து நபியின் உறவினரும் பாதுகாவலரும் ஆன அபு தாலிபிடம் போனார்கள்
குறைஷிகள் முஹமதைக் கொல்ல அபு தாலிப் அனுமதித்தால் முகமதுக்கு ஈடாக் ஒரு மிகச் சிறந்த இளைஞரை அனுப்பி , அதோடு அபு தாலிப் விரும்பியது எல்லாம் கொடுப்பதாய்ச் சொன்னார்கள்
அபு தாலிப் இதற்கு மறுத்து விட எரிகிற தீயில் நெய்யை ஊற்றியது போல் இன்னொரு நிகழ்வு
இஸ்லாமிய எதிர்ப்பில் மிகத் தீவிரமாக இருந்த உமர் அவர்கள் மனம் மாறி இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்
நிலைமை கட்டுக்கு மீறிப் போவதை உணர்ந்த குறைஷிகள் தலைவர்கள் கூடி முகமது , அவர் குடும்பம், ,குலம், அவர்களுக்கு உதவும் நண்பர்கள் –அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் குறைஷிகளாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் சமூக விலக்கு செய்யத் துணிந்தனர்
அதன்படி குறைஷிகள் யாரும் அவர்களோடு சமூக ,வணிகத் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது
சஹிfபா என்ற இந்த ஒப்பந்ததை ஒரு ஆவணமாக எழுதி, குறைஷித் தலைவர்கள் அனைவரும் ஒப்பமிட்டு அந்த ஆவணம் காபாவில் பாதுகாப்பாக வைக்கபட்டது
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நபியும் அவர் உற்றார் உறவினர்களும் மக்காவின் அருகில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இருந்தனர்
புனிதப் பயணக் காலங்களில் மட்டுமே அவர்கள் அதை விட்டு வெளியேறி மக்காவுக்குப் போக முடியும்
நேற்றைய வினாவுக்கு
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப்
பெறுவோர் சகோ
Khatheeb Mamuna Lbbai முதல் சரியான விடை
பாப்டி
ஷர்மதா
ஹசன் அலி
இன்றைய வினா
சஹிfபா ஒப்பந்தம் விளக்கிக் கொள்ளப்பட காரணமாக இருந்த அற்புத நிகழ்வு எது ?
இறைவன் நாடினால் நாளை விடையுடன் நபி பெருமானை சிந்திப்போம்
ஐந்தாவது இப்தாரையும் ஆறாவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
சர்புதீன் பீ
6 ரமலான்(9) 1445.
17032024 ஞாயிறு
சர்புதீன் பீ
&&&&&&
நபி ஸல்
7சஹிfபாஆவணம் அழிப்பு ;யத்ரீபர்கள் வருகை
"பிஸ்மில்லாஹ் "
18032024 திங்கள்
காலம் செல்லச் செல்ல சமூக் விலக்கு ஒப்பந்தம் குறைஷிகளிடையே
ஒரு சலிப்பை உண்டாக்கியது .பல நல்ல உள்ளங்கள் தங்கள் நெருங்கிய நண்பர்கள், அண்டை அயலாரை காண ஏங்கின
எனவே சமூக விலக்கு ஒப்பந்தத்தை மறு பரீசீலனை செய்ய வேண்டிய கட்டாயம்
காபாவில் இருந்த அந்த ஆவணத்தை எடுத்துப் பார்த்தால்--
-பிஸ்மில்லா அல்லாஹும்ம - இறைவனே உன் பெயரால் –என்ற சொற்களைத் தவிர மற்ற எல்லாம் கரையான் அரித்திருந்தது
இதைப் பார்த்த குறைஷித் தலைவர்கள் மனதில் ஒரு வித அச்சம் உண்டாக ,அந்த ஒப்பந்தம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டது
நபியவர்களும் , அவரைச் சார்ந்தவர்களும் மக்கமா நகருக்குள் முன்போல் வந்து போகலாம்
ஆனால் நபி எதிர்ப்பு மிகக் கடுமையாகிக் கொண்டே இருந்தது .அதனால் மக்கா வாசிகளிடையே இஸ்லாம் மிகச சிறிய அளவிலேயே பரவியது
தாயிப்f நகர் போய் இஸ்லாத்தைப் பரப்ப நபி அவர்கள் முயற்சித்ததும் படு தோல்வி அடைந்தது
இந்த நிலையில் மதீனா (யத்ரீப்) நகரிலிருந்து புனிதப் பயணமாக வந்த ஒரு குழுவை நபிகள் சந்தித்துப் பேசியதை அவர்கள் கவனமாகக் கேட்டு மகிழ்ந்தார்கள் .
யத்ரீப் என்பது மக்கமா நகரிலிருந்து 200 மைல் (270 கி மீ) தொலைவில் உள்ள ஒரு நகர்
பின்னர் அல் மதினா என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற , மிகச் சிறந்த நகரமாக உருவானது
அந்த மதினாவில் நன்கு கற்றுத் தேர்ந்த யூத மதக்குருக்கள் (rabbis) பலர் இருந்தார்கள் அவர்கள் ஒரு நபியின் வரவு பற்றி தெளிவாகப் பல செய்திகளை சொல்லியிருந்தார்கள்
ஆத், தமுத் குலத்தவர்கள் அவர்களுக்குரிய நபி வந்து அறிவுரை சொல்லியும் திருந்தாமல் சிலை வணக்கத்தில் ஈடுபட்டதால் அடியோடு அழிக்கப்பட்டார்கள்
அது போல் மதினாவில் உள்ள சிலை வணக்கத்தில் ஈடுபடும் அரபியர்கள் நபியின் வருகைக்குப்பின் அழிக்கப் படுவார்கள் என்று யூத மதகுருக்கள் சொல்லிவந்தார்கள
அவர்கள் நபி பற்றிய செய்திகளைக் கேட்டிருந்த மதீனா வாசிகள் மக்காவில் அவர்கள் சந்தித்த் முகமதுதான் அந்த நபி என்று எளிதாக புரிந்து கொண்டார்கள்
மதீனா திரும்பிய அவர்கள் தாங்கள் மக்காவில் பார்த்தது ,கேட்டது பற்றி மதீனா வாசிகளுக்கு எடுத்துரைத்தார்கள்
அதன் விளைவாக அடுத்த புனிதப் பயணக் காலத்தில் நபி ஸல் அவர்களை சந்திக்கப்பதற்க்காவே ஒரு குழு புறப்பட்டுச் சென்றது
அந்தக்குழுவினர் அனைவரும் நபி காட்டிய ஏக இறைகொள்கையை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தில் இணைந்தனர்
அவர்கள் நபிக்கு கொடுத்த உறுதி மொழி அல் அகா பா (al aqabah) என்றும் முதல் குழுவினர் செய்த உறுதி மொழி முதல் அல் அகா பா என்றும் சொல்லப்படுகிறது
யத்ரீப் குழுவினர் ஒரு இஸ்லாமிய ஆசிரியருடன் ஊர் திரும்பினர்
நபி ஸல் அவர்கள் பற்றிய செய்தி மதீனா முழுதும் மிக வேகமாகப் பரவியது –நபியைப் பற்றி பேசாத வீடே மதினாவில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு
இரண்டாவது அல் அகா பா
அடுத்த ஆண்டு புயதக்பயணக் காலத்தில் 73 யத்ரீபர்கள் மக்கா வந்து நபி அவர்களோடு இணைய உறுதி எடுத்தனர்
அதோடு நபி ஸல் அவர்களை தங்கள் மதீனா நகருக்கு வருமாறு அழைத்தார்கள்
வெறும் அழைப்பல்ல அது ; எங்கள் மனைவி மக்களை , குடும்பத்தாரைப் பார்த்துக் கொள்வது போல் நபிக்கும் பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்தார்கள்
அப்போதுதான் ஹிஜ்ரா எனும் மதீனப் பயணம் பற்றிய சிந்தனை உதித்தது
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப்
பெறுவோர் சகோ
Khatheeb Mamuna Lbbai முதல் சரியான விடை
ஹசன் அலி
இன்றைய வினா
ஹிஜ்ராஹ் எனும் மக்க மதீனப் பயணம் நிகழ்ந்த ஆங்கில ஆண்டு எது ?
இறைவன் நாடினால் நாளை விடையுடன் நபி பெருமானை சிந்திப்போம்
ஆறாவது இப்தாரையும் ஏழாவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
07 ரமலான்(9) 1445
18032024 திங்கள்
சர்புதீன் பீ
&&&&&&
நபி ஸல்
8 நபி பெருமானைக் கொல்ல சதி
ஹிஜ்ராஹ்
1903 2024 செவ்வாய்
ஹிஜ்ராவுக்கு ஆயத்தமாக , முடிந்த அளவு முஸ்லிம்கள் தங்கள் சொத்துக்களை விற்க ஏற்பாடு செய்தனர் –அதுவும் குறைஷிகளுக்கு தெரியாமல் கமுக்கமாக
ஹிஜ்ரத் பயணம் பற்றிய செய்தி காற்று வாக்கில் குறைஷிகளுக்கு எட்டி விட்டது
நபிகள் மக்காவில் இருப்பதில் மிகவும் வெறுப்படைந்த குறைஷிகள்
நபி தங்களை விட்டுத் தப்பிப் போய்விட்டால் என்ன ஆகும் என்பதை நினைத்து மிகவும் அச்சமும் கவலையும் கொண்டனர்
இதை விட நபியின் கதையை முடித்து விடுவதே நல்லது என்று தீர்மானித்தனர்
நபி அவர்களுக்கு பாதுகாவலக இருந்த அபு தாலிப் மறைந்து விட்டார்
இருந்தாலும் நபிக்கு தீங்கு செய்பவரை நபியின் குலத்தார் பழி வாங்காமல் விட மாட்டார்கள் என்ற அச்சம் ஒரு தயக்கத்தை உண்டாக்கியது
சீட்டுப் போட்டு குலுக்கி ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவரைத் தெரிவு செய்து , அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்துல் நபியை தாக்கி உயிரை எடுப்பது என்று தீர்மானித்தனர். இதனால் கொலைப் பழி எல்லாக் குலங்கள் மேலும் பரவி விரிந்து விடும்
இந்த நிலையில் இறை கட்டளை வருகிறது
இறை மறுப்பாளர்களை எதிர்த்து போர் புரிய ஆணை –முதன் முறையாக
சுராஹ் 8 :39 ---“குழப்பம் ஒழிந்து மார்க்கம் -தீன் -முழுவதும் ஏக இறைவனுக்கே உரித்தாகும் வரை நீங்கள் இறை மறுப்பவர்களுடன் போர் புரியுங்கள் -----“குரான் 8:39
ஹிஜ்ராஹ் ( 622 கி பி )
முடிந்த வரை எல்லா முஸ்லிம்களும் மதீனா நோக்கி பயணித்து விட்டார்கள்
இப்போது இருப்பது நபி ஸல், அலி , அபூபக்ர் என மூவர்தான்
செல்வந்தரான அபு பக்ர் பயணத்துக்கு இரண்டு ஒட்டகங்களைக் கொண்டு வந்திருந்தார் .கூடவே ஒரு வழி காட்டியையும் அழைத்து வந்திருந்தார்
நபி ஸல் எதிர்பார்த்துக் காத்திருந்த இறை கட்டளையும் வந்து விட்டது
எதிரிகள் கொலை செய்யத் தேர்வு செய்த அந்த இரவு –அவர்கள் வீட்டுக்கு வெளியே காத்திருந்தார்கள்
நபி தன் மேலாடையை அலியிடம் கொடுத்து அதை போட்டுக்கொண்டு நபியின் படுக்கையில் படுக்க அலியிடம் சொன்னார்
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நபி படுத்திருப்பது போல் தெரியும்
நபி ஸல் வெளியே வரும்போது தாக்க கொலையாளிகள் காத்திருந்தார்கள் . அவர்கள் அலியை தாக்க துணிய மாட்டார்கள் என்று நபிக்குத் தெரியும்
நபி அவர்கள் வெளியே வருகிறார்கள்
கொலையாளிகளின் கண்களில் மண் பட்டது போல் ஒரு திரை கண்ணை மறைத்து விட்டது
அவர்கள் அறியாமல் அவர்களைக் கடந்து நபி அவர்கள் அபூபக்ர் வீடு போய் அவரை அழைக்க இருவரும் பாலைவன் மலைக் குகை ஒன்றில் ஒளிந்து கொண்டார்கள்
அபூபக்ரின் மகன் மகள் பணியாள் மூவரும் பொழுது சாய்ந்த பின் உணவு கொண்டு வந்தார்கள் . குகைக்கு வெளியில் உள்ள நிலவரம் பற்றி தகவல்கள் சொன்னார்கள்
ஒரு முறை கொலையாளிகள் குகைக்கு மிக அருகில் வந்து விட்டார்கள் .
மகவும் அஞ்சிய அபு பக்ருக்கு நபி அவர்கள் ஆறுதல் சொன்னார்கள் :
“அச்சம் வேண்டாம் ;இறைவன் நம்முடன்இருக்கிறான் “ என்று (குரான் 9:40.)
ஒரு வழியாக தேடுதல் வேட்டை ஓய்ந்த பின் அபு ப்க்ர் பயணத்துக்கான ஒட்டகத்தையும் வழி காட்டியையும் இரவு நேரத்தில் குகைக்கு வரவைத்து , இருவரும் மதீனா நோக்கி நீண்ட பயணத்தைத் துவக்கினர்
ஏழாவது இப்தாரையும் எட்டாவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்குசரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப்
பெறுவோர் சகோ
Khatheeb Mamuna Lbbai முதல் சரியான விடை
பாப்டி
ஷர்மதா
ஷிரீன் fபாருக்
ஒரு விளக்கம்
ஒரு ஹிஜ்ரி ஆண்டுக்கு 360 நாட்கள்
ஆங்கில ஆண்டுக்கு 365
எனவே
2024 minus 1445 = 579
என்ற கணக்கு இதற்குப் பொருந்தாது
இன்றைய வினா
நபி அவர்கள் மதினா வந்தடைந்ததை ஊருக்கு அறிவித்தவர் யார்
இறைவன் நாடினால் நாளை விடையுடன் நபி பெருமானை சிந்திப்போம்
ஏழாவது இப்தாரையும் எட்டாவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
08 ரமலான்(9) 1445
1903 2024 செவ்வாய்
சர்புதீன் பீ
&&&&&&&
நபி ஸல் 9
நபி ஸல் மதினா வருகை
20032024 புதன்
பாதம் படாத பல பாதைகள் வழியே பலநாள் பயணம்
ஒரு வழியாக சொந்த ஊரை வீட்டுத் தப்பித்து வந்த நபிஸல் , அபூபக்ர் இருவரும் மதினாவின் புறநகர்ப் பகுதியை அடைந்தனர்
பல வாரங்களாக நபியின் வருகைக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர் அவ்வூர் மக்கள்
அதிகாலையில் வந்து , வெயில் உச்சத்தை அடையும் வரை பார்த்து விட்டு பின் வெப்பம் தாங்க முடியாமல் திரும்பி விடுவார்கள்
அப்படி ஊரார் திரும்பி விட்ட உச்சி வெயில் நேரத்தில்தான் பயணிகள் இருவரும் மதீனா வந்து சேர்ந்தார்கள்
ஒரு யூதர்தான் இவர்களைப் பார்த்து விட்டு ஒரு நக்கலான தொனியில் முஸ்லிம்களிடம் அவர்கள் எதிர்பார்த்தவர்கள் வந்து விட்டனர் என்று அறிவித்தார்
இஸ்லாமிய ஆண்டின் துவக்கத்தை குறிக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஹிஜ்ரத் இப்படிதான் எளிமையாக நிகழ்ந்தது
அலங்கார வளைவுகள் , ஆடம்பர வரவேற்பு எதுவும் இல்ல
13 ஆண்டு கால துன்புறுத்தல், இழிவு படுத்துதல் ,நபித்துவமே தோற்றுப் போய்விட்டதோ என எண்ணும் அளவுக்கு நிகழ்வுகள் எல்லாம் கடந்த காலமாகிப்போய் விட்டன
இவ்வளவு இன்னல்களையும் பொறுத்துக் கொண்டு மனம் தளராமல் உறுதியாக் நின்ற நபி ஸல் அவர்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகள் வெற்றிப் பயணமாக அமைந்தன
வெற்றி என்றால் இது வரை எந்த ஒரு தனி மனித முயற்சிக்கும் கிடைக்காத மாபெரும் வெற்றி
நபி ஸல் அவர்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்த்து ஹிஜரத்
இதற்கு குரானே சான்று பகர்கிறது
இது வரை ஒரு மதப் பரப்புரையாளராக மட்டும் இருந்த நபி ஸல் அவர்கள் இப்போது ஒரு ஆட்சியாளர் ---ஒரு சிறிய நிலப் பரப்பில் துவங்கி , பத்து ஆண்டுகளில் முழு அரபுப் பேரரசின் ஆட்சியாளர் ஆகி விட்டார்கள்
இறைவனிடமிருந்து இது வரை வந்த வழிகாட்டுதல்கள்
(குரான் மக்கத்து சூராக்கள் ) இதற்குப்பின் வந்த அறிவுரைகள் (மதீனத்து சூராக்கள் ) இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன
தனி மனிதன் வாழ்வுக்கு வேண்டியிய அறிவுரைகள், வழிகாட்டுதல்கள
ஒரு எச்சரிக்கையாளராக நபியின் பொறுப்புகள் இவை பற்றி மக்கத்து சூராக்கள் சொல்கின்றன
சமூக அமைப்பு, அரசியல் அமைப்புகளின் அங்கமாக மக்கள் செயல்படுவதற்கு வேண்டிய வழி முறைகள் ,நபி ஸல் அவர்கள் ஒரு ஆட்சியாளராக ,பிறருக்கு எடுத்துக்காட்டாக, சமூக சீர் திருத்த வாதியாக செயல் பட வழி காட்டும் விதமாக இருக்கின்றன மதீனத்து சூராக்கள்
எட்டாவது இப்தாரையும் ஒன்பதாவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்குசரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப்
பெறு பவர்வ சகோ
Khatheeb Mamuna Lbbai மட்டுமே
இன்றைய வினா
மக்கத்து சூராக்கள் அருளப்பட்ட காலத்தின் அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன “
இறைவன் நாடினால் நாளை விடையுடன் நபி பெருமானை சிந்திப்போம்
09 ரமலான்(9) 1445
20032024 புதன்
சர்புதீன் பீ
&&&&&&&&&&&&
நபி ஸல்
10 மக்கத்து சூராககள்
இது வரை பார்த்தது நபி ஸல் அவர்களின் மக்கா வாழ்க்கை பற்றி
இனி வரும் பகுதிகளில் அவர்களின் மதினா வாழ்க்கை பற்றிப் பார்க்க இருக்கிறோம்
அதற்ககிடையில் மக்கத்து சூராக்கள் அருளப்பட்ட காலத்தின் அடிப்படையில் எப்படிப் பிரிக்கப் படுகின்றன என்று பார்ப்போம்
(ஒரு சூரா முழுதுமோ அல்லது பெரும்பகுதியோ நபி ஸல் அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் அருளப்ப்ட்டிருந்தால் அது மக்கத்து சூராஹ் )
Very early -மிக முற்கால
Early முற்கால
Middle – இடைக்கால
Late- பிற்கால
சூராக்கள் அருளப்பட்ட காலத்தை மிகச்சரியாக கணக்கிட சான்றுகள் எதுவும் இல்லை
நபி ஸல் அவர்களுக்கும் ,அவரோடு இனைந்தவர்களுக்கும் குறைஷிகள் தொல்லை கொடுக்கத் துவங்கு முன் அருளப்பட்ட சூராக்கள் –
மிக முற்கால –very early
தொல்லைகள் துவங்கியதில் இருந்து ,உமர் ரலி அவர்கள் இஸ்லாத்தில் இணையும் வரை உள்ளவை ----
முற்கால -early
உமர் ரலி இணைந்ததில் இருந்து ,சமூக விலக்கு ஒப்பந்தம் அழிக்கப்படும் காலம் வரை உள்ளவை--
இடைக்கால – Middle
அதற்குப்பின் ஹிஜரத் வரை உள்ளவை
பிற்கால Late-
என்னுரை
ஏற்கனவே நபி ஸல் அவர்கள் வரலாறை அறிந்தவர்களுக்கு இந்தப் பதிவு
மிக மிக சுருக்கமாகவும் , பல நிகழ்வுகள் விடு பட்டது போலவும் தோன்றலாம்
எடுத்துகாட்டாக
குகையில் மறைந்திருந்த நிகழ்வு ,
நபிகள் வீட்டை விட்டு போனபின் அலிக்கு என்ன ஆனது
நலிந்த நிலை முஸ்லிம்களுக்கு குறைஷிகள் செய்த கொடுமைகள்
நபி ஸல் மக்காவிலும் , தாயிப்f நகரிலும் அனுபவித்த இன்னல்கள்
இவை எல்லாம் மிக விரிவாக சொல்லப்படும்
ஆனால் நான் மேற்கொண்ட பணி இறைவன் அருளால்
புனிதரமலான் மாதத்தில் நபி ஸல் அவர்கள் பற்றி முழுமையாகப் பதிவு செய்வது
அதற்கு இந்த இந்த சுருக்கப்பதிவுதான் பொருத்தமாக இருக்கிறது
பின்னர் எப்போதவது இறைவன் நாடினால் , தேவைபட்டால் எல்லாம் விரிவாக எழுதலாம் (தேவை இருக்காது என நினைக்கிறேன் ) .
ஒன்பதாவது இப்தாரையும் பத்தாவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்குசரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப்
பெறுவோர் சகோ
ஹசன் அலி முதல் சரியான விடை
ஷர்மதா
இன்றைய வினா
மதீனத்து யூதர்களிடையே நபிக்கு எதிரான ஒரு அலை உருவானது
அதற்கு என்ன காரணம் ?
இறைவன் நாடினால் நாளை விடையுடன் நபி பெருமானை சிந்திப்போம்
10 ரமலான்(9) 1445
சர்புதீன் பீ
No comments:
Post a Comment