Tuesday, 5 March 2024

சொந்த ஊர் 16 சகோ யீராலி பார்வையில் 06032024 புதன்





 சொந்த ஊர் 16

சகோ மீராலி பார்வையில்
06032024 புதன்
(எங்கள் பெரியத்தா மகள் காத்தூன் அக்காவின் மகன் மீராலி
அவர் சகோ மெஹராஜின் 140224 பதிவுக்கு தெரிவித்த கருத்தை பதிவாகப் போடுகிறேன் )
அல்ஹம்துலில்லாஹ், தங்களுடைய பதிவு மிகவும் அருமையாகவும், பேச்சு வழக்கு என்னை 45 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விட்டது, மேலும் சில விஷயங்களை பதிவிடுகிறேன் சீதளியில் தண்ணீர் இல்லாத நேரத்தில் ஈணா விட்டு தோட்டத்தில் பம்பு செட்டில் குளிக்க செல்வது உண்டு பெண்களுக்கு தனியாக நேரமும் ஆண்களுக்கு தேவையான நேரமும் ஆறுமுகம் அண்ணே மோட்டார் போட்டு விடுவார், அப்பொழுது ஆறுமுகம் அண்ணே மிகப்பெரிய ஹீரோவா தெரிவார், அதேபோல ஈனா வீட்டில் உள்ள ஊஞ்சல் ஒன்று இருக்கும் சிறு வயசுல அதுல ஆடாதவங்க யாருமே இருக்க முடியாது, அதேபோல ஈனா வீட்டில் நடக்கும் விசேஷங்களில் அந்த நெய் சோறும் பொடி குழம்பு அவ்வளவு அருமையாக இருக்கும்,
அந்த கரண்டிய யாரு தயார் செய்தார்கள் என்று கோபம் தான் வரும், காக் குழம்பு ஊத்தும்போது அதில் காய்கறிகளை அள்ளி வைக்க சொல்லுவதும், (இதுபோன்ற உணவுகள் தற்போது சாப்பிட்ட அனுபவம் இல்லாமல் போய்விட்டது) தங்களின் பதிவில் என்னுடைய தாயாரையும் எங்களின் பரிமளா பெரியம்மா அவர்களையும் உயர்வாக குறிப்பிட்டது மிகப்பெரிய ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது, மேலும் தாயாருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் எனக்கு கிடைத்த வாய்ப்பாக கீழக்கரையில் பணியாற்றிய பொழுது உடல் நலமில்லாமல் இருந்த என்னுடைய தாயாரை ஒரு தேவதை போல் வைத்திருந்தேன்,. (எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்), விருப்பப்பட்டு என்னுடைய தாயார் இளையான்குடிக்கு சென்ற பொழுது (மூத்த அண்ணன் ஷேக் மைதீன் வீட்டில்) இருந்த காலத்தில் இதற்காக வேண்டி நானும் கீழக்கரையில் இருந்து பரமக்குடிக்கு மாறுதல் செய்து அங்கு பணியாற்றினேன், (என்னை விட என்னுடைய அண்ணன் சிறப்பாக மிக சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள்) இத்தளத்தில் உள்ளவர்கள் வயதான தங்களுடைய தாயார் தகப்பனார் இருந்தால் சிறப்பான முறையில் கவனித்துக் கொள்வது தமக்கு கிடைத்த பாக்கியமாக நினைத்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்,(ஏப்பா சேக்கு ஒரு வாரமா மீரா பயலே காணாமே ! அண்ணனுடைய பதில் இப்பத்தான் அம்மா ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து பார்த்துட்டு போனா ன் அப்படின்னு அண்ணன் சொல்லிட்டு தொலைபேசியில் எனக்கு உடனே தகவல் சொல்லும் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பரமக்குடியில் இருந்து இளையான்குடிக்க உடனே வந்து அம்மா கிட்ட வெகு..... வெகு நேரம்.பேசிட்டு போவேன் நீங்கள் குறிப்பிட்ட மேல் உள்ள விஷயங்கள் 50, 60 வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அப்படியே படம்பிடித்து காண்பிப்பது போல் பேசுவார்கள் அதை நானும் அண்ணனும் உட்கார்ந்து ஆர்வமாக கேட்போம் பழைய நினைவுகள் அனைத்தும் நினைவில் இருக்கும், தற்போதைய நிகழ்வுகள் கடைசி காலத்தில் நினைவில் ஓரளவு இல்லாமல் இருந்தது, என்னுடைய தாயாரும் தகப்பனாரும் எங்கள் மீது திருப்தி கொண்ட நிலையில் இவ்வுலகை விட்டு சென்றார்கள், ( இன்னா லில்லாஹி.….) என்னுடைய தாயாரின் குப்பியின் கணவர் அவர்கள் திருக்கலாகுடியில் வபாத்தானார்கள்,(இன்னாலில்லாஹி...) அங்கு நேரடியாக சென்று வந்தேன், (என்னை யாருக்கும் தெரியவில்லை, நிறைய நபர்கள் வந்திருந்தார்கள் அவர்களை எனக்கு யாரும் தெரியவில்லை) எதுக்கு இந்த விஷயத்தை குறிப்பிடுகிறேன் என்றால் என்னுடைய தாயார் தற்போது இருந்தால் இதுபோன்ற விஷயத்திற்காக சென்று வந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார்கள், (அம்மாவும் அவர்களின் குப்பி யும் ஒத்த வயதுடைய நம்பிகள்).,
&&&&&&&&&&&&&&&&&&&&
விடுமுறை அறிவிப்பு
நாளையிலிருந்து என் பதிவுகளுக்கு விடுமுறை
ரமலான் விடுமுறை
புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பதிவுகள் தினமும் வரும்
மற்ற பதிவுகள் ஈகைத் திருநாளுக்கபின் மீண்டும் வரும்
எண்ணங்கள், திட்டங்கள் செயல்களாக மாற இறைவன் அருள் புரிய வேண்டும்
இன்றும் ஒரு எளிய வினா
அராபிய நாட்காட்டியில் வாரத்தின் முதல் நாள் எது ?
வெள்ளி / ஞாயிறு / திங்கள் ?
இறைவன் நாடினால் புனித ரமலான் மாதம் துவங்குவதற்கு முந்திய நாள் விடை ,விளக்கத்துடன் சிந்திப்போம்
06032024 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment