நபி ஸல்
21 முடாஹ் போர்
01042024திங்கள்
இஸ்லாமை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு சிரியாவில் Byzantineபய்ஷன்டைன்பேரரசர் ஒரு பெரிய படைதிரட்டி வருவதாய் நபி அவர்களுக்கு செய்தி கிட்டியது
(மேலும் தூதுக்காகஅனுப்பப்பட்ட இஸ்லாமியரை கொலை செய்ததால்,பொது நீதியை கடைப்பிடிக்காத இந்த கொடிய செயலுக்காகவும் இந்தப் போர் )
உடனே 3000 பேர் கொண்ட முஸ்லிம் படை ஓன்று சிரியா நோக்கிப் புறப்பட்டது தலைமை தாங்கியவர் ஜைத்
இஸ்லாமியர்களுக்கு வெற்றியாக அமையாத இந்தப்போரில் முஸ்லிம்களின் வீர தீரத்தைக் கண்டு வியந்தனர் சிரியா நாட்டு மக்கள்
நூறாயிரம் சிரியப் படையினர்
மூவாயிரம் முஸ்லிம் படையினர்
தயக்கம் என்பதே இல்லாமல் முழு மூச்சுடன் போரிட்டனர் முஸ்லிம்கள்
படைத் தலைவர்கள் மூவர் ஒன்றன் பின் ஒன்றாக வீர மரணம் எய்தினர்
எஞ்சியிருந்த வீரர்களை தன்போர்த்திறனாலும் வீரத்தினாலும் காப்பாற்றிக் கொண்டு வந்தார் அதன் பின் தலைமை தாங்கிய காலித் இப்ன் அல் வலித் Khalid ibn al-Walid
முடாஹ் என்ற இடத்தில் நடந்ததால் இந்தப்போர் முடாஹ் போர் என்று
சொல்லபடுகிறது
ஒப்பந்த முறிவு –குறைஷிகள்
அதே 8 ஆம் ஆண்டில்
ஹுதை பியாஹ் உடன்படிக்கைக்கு மாறாக
நபியிடம் நம்பிக்கை கொண்டிருந்த ஒரு இனத்தவரை தாக்கி படுகொலை செய்தனர் குறைஷிகள் –அதுவும் மக்காவின் புனிதத் தலத்திலேயே
தங்கள் செயலால் அச்சமுற்ற அவர்கள் (குறைஷிகள்) –ஒரு முயற்சி செய்தார்கள்
அபு சுfபையன் என்பவரை மதீனாவுக்கு தூது அனுப்பி உடன்படிகையை புதுப்பித்து கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பது பற்றிப் பேச எண்ணினார்கள்
குறைஷிகள் செய்த படுகொலை பற்றிய செய்தி நபியை எட்டுமுன் தங்கள் தூதுவர் நபியை சந்தித்துப் பேசி விடுவார் என்று எண்ணினார்கள்
ஆனால் அதற்கு முன்பே தாக்குதலில் படு காயம் அடைந்த ஒருவர் மூலமாக நபிகளுக்கு படு கொலை பற்றிய செய்தி கிடைத்து விட்டது
தூதின் நோக்கம் நிறைவேறவில்லை
20ஆவது இப்தாரையும் 21 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
ஹசன் அலி
இன்றைய வினா
நபிகள் மக்காவை வென்ற பின் மக்கமாநகர் மக்கள் அனைவரும் விரைந்து இஸ்லாத்தில் இணையக் காரணமாக இருந்த நபியின் செயல் எது “
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
21ரமலான்(9) 1445
01042024திங்கள்
சர்புதீன் பீ
AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
02042024 செவ்வாய்
உடனே நபிகள் உடல் வலிமையுள்ள இஸ்லாமியர்கள் அனைவரையும் படை திரட்டிக்கொண்டு மக்கா நோக்கிச் சென்றார்கள்
அச்சமும் கலக்கமும் கொண்ட குறைஷிகள் தங்கள் குதிரைப்படையை முன்னிறுத்தி இஸ்லாமியப் படையை தடுக்க முயன்றனர்
அந்தக் குதிரைப்படை தோற்று ஓடியது
ஒரு துளி குருதி சிந்தாமல்
வெற்றியாளராக நபிகள் தம் பிறந்து வளர்ந்த சொந்த ஊருக்குள் நுழைகிறார்கள்
நபிகளுக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் செய்த இன்னல் , கொடுமைகளுக்கு நபிகள் பழி வாங்குவார் என்று அசசத்துடன் காத்திருந்த மக்கா வாசிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி
மிகக் கொடுமையான தவறு செய்த ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோருக்கும்
பொது மன்னிப்பு
அறிவித்தார்கள் நபி அவர்கள்
அந்த ஒரு சில்ரிலும் பெரும்பாலோருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது
இதனால் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்த மக்கத்துவாசிகள் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தில் இணைய விரைந்தார்கள்
புனித காபாவில் இருந்த சிலைகள் அனைத்தையும் அழித்து ஒழிக்கச செய்தார்கள் நபி அவர்கள்
“இருள் மறைந்தது ,உண்மையின் ஒளி வந்தது “என்று சொன்னார்கள்
. (நபியே!) இன்னும், “உண்மை வந்தது; பொய்மை அழிந்தது. நிச்சயமாக பொய்மையானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. குரான் 17:81
21ஆவது இப்தாரையும் 22 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
பாப்டி
ஹசன் அலி
இன்றைய வினா
ஹுனைன் போர்—பெயர்க் காரணம் என்ன ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
22ரமலான்(9) 1445
02042024 செவ்வாய்
சர்புதீன் பீ
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஹிஜ்ரி 8
அரேபியப் பழங்குடி இனம் ஓன்று காபாவைக் கைப்பற்ற தீவிரமான எண்ணம் கொண்டிருந்தது
15,000 வீரர்களுடன் நபி அவர்கள் படையெடுத்துச் சென்றார்கள்
ஹுனைன் எனும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் அந்தப் பழங்குடி இனம்மறைந்திருந்து தாக்கியதில் நிலை குலைந்து போன முஸ்லிம் படை பின்வாங்கி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டது
மிகச் சிரமப்பட்டு அவர்களை ஓன்று சேர்த்து மீண்டும் போர் புரிந்த இஸ்லாமியர்களுக்கு மகத்தான வெற்றி கிட்டியது
அதோடு எதிரிப்படை விட்டுச் சென்ற ஏராளமான பொருட்களும் கிடைத்தன
22ஆவது இப்தாரையும் 23 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
பாப்டி
ஹசன் அலி
ஷர்மதா
ஷிரீன் பாfரூக்
இன்றைய வினா
அன்சாரிகள் எனப்படும் மதினா வாசிகளை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்த நிகழ்வு எது ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
23 ரமலான்(9) 1445
03042024 புதன்
சர்புதீன் பீ
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
நபி ஸல் 24
தாயிfப் நகர் வெற்றி
04042024 வியாழன்
ஹுனைன் போரின் வெற்றிக்குப்பின் தாயிfப் நகர் முற்றுகை இடப்பட்டு வீழ்ந்தது
அதன்பின் நபிகள் மக்காவில் ஒரு ஆளுனரை நியமித்து விட்டு மதினா திரும்பினார்கள்
சொந்த ஊருக்குப் போகும் நபிகள் மதினத்தை மறந்து துறந்து மக்காவிலேயே தங்கி விடுவார்களோ என்ற கவலையில் இருந்த
அன்சாரிகள் எனப்படும் மதினா வாசிகள் நபியின் வருகையால் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைந்தனர்
23ஆவது இப்தாரையும் 24 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுபவர்
சகோ
ஹசன் அலி மட்டுமே
இன்றைய வினா
போருக்கு நபிகள் அழைத்ததை புறக்கணித்த இஸ்லாமிய வீரர்களுக்கு இறைவன் விடுத்த எச்சரிக்கை குர்ஆனில் எங்கு வருகிறது ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
24 ரமலான்(9) 1445
04042024 வியாழன்
சர்புதீன் பீ
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
நபி ஸல்25
தபுக் (போர் )
05042024வெள்ளி
நபி அவர்கள் எல்லா முஸ்லிம்களும் போருக்கு ஆயத்தமாக் அழைப்பு விடுத்தார்கள்
ஆனல் தொலை தூரப்பயணம் , கடும் கோடை, பயிர் அறுவடைக்காலம்
பலம் பொருத்திய எதிரிப்படை
இது போன்ற பல காரணங்களால் ஒரு தயக்கம் முஸ்லிம்களிடத்தில்
காரணம் ஏதும் இல்லாமலும் பலர் பின் தங்கினர்
இவர்களை இறைவன் கடுமையாகச் சாடுகிறான்
9:38. நம்பிக்கை கொண்டவர்களே! இறைவனின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
9:39. நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (இறைவன் ) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது – இறைவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.
சுராஹ் 9 (அத்தவ்பா - மன்னிப்பு தேடுதல்) 38, 39
இந்தப்போர் நடக்காமலே சமாதானமாக நிறைவடைந்தது
சிறிய நாட்டு எல்லையில் உள்ள தபுக் என்ற இடத்தில் முஸ்லிம் படை தங்கியிருந்தபோது சிரிய நாட்டுப் படைஎடுப்பு இல்லை என செய்தி கிடைத்தது
24ஆவது இப்தாரையும் 25 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுபவர்
சகோ
ஹசன் அலி மட்டுமே
இன்றைய வினா
புனிதப் பயணத்தை ஒழுங்கு படுத்தும் இறை வசனம் எது
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
25 ரமலான்(9) 1445
05042024வெள்ளி
சர்புதீன் பீ
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
No comments:
Post a Comment