Friday, 5 April 2024

நபி ஸல் 26 -30 ******






 நபி ஸல்26

பொறுப்புத் துறவு (Declaration of Immunity)
சிலை வணக்க ஒழிப்பு
06042024 சனிக்கிழமை
மக்கமா நகர் வெற்றி கொள்ளப்பட்டது
மக்கள் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்
இருந்தாலும்புனிதப் பயணம் பற்றி பழைய விதிகளே நடைமுறையில் இருந்தன
அதன்படி முஸ்லிம்கள் அல்லாத அரபிகள் தங்கள் முறையில் புனிதப் பயணம் மேற்கொண்டனர்
முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படி செய்தனர்
ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு
அரேபியாவின் வடக்குப் பகுதி முழுதும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்து விட்டது
புனிதப் பயணக்குழு மதீனாவிலிருந்து புறப்பட்டு விட்டது
இந்த நிலையில்தான்
பொறுப்புத் துறவு declaration of immunity---Al Bara at-
அறிவிக்கபட்டது
“நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இணை வைப்பாளர்களுக்கு ,அவர்களை விட்டு இறைவனும் அவ்னுடைய தூதரும் விலகிக் கொ ண்டனர் “
என்று தெரிவிக்கும் அறிவிப்பு இது
எனவே (இணைவைப்பாளர்களான)நீங்கள் 4 மாதங்கள் பூமியில் நடமாடிக்கொள்ளுங்கள்
திண்ணமாக நீங்கள் இறைவனை தோல்வியுறச் செய்ய முடியாது எனதையும் சத்தியத்தை நிராகரிப்பவர்களை இறைவன் நிச்சயம் இழிவு படுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்
(சூராஹ் 9 அத்தவ்பா/அல் பரா அத்- 1,2)
நபி அவர்கள்
புனிதப் பயணக்குழு தலைவர் அபு பக்ருக்கு இந்த செய்தியை அனுப்பி
அலி இந்தச் செய்தியை பரவலாக மக்கள் கூட்டத்தில் அறிவிக்கச் செய்தார்
அதன் மூலம் அடுத்த ஆண்டு முதல் முஸ்லிம்கள் மட்டுமே புனிதப் பயணமாக மக்கா காபா ஆலயத்துக்கு வரமுடியும்
இதில் விதிவிலக்ககு முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்து, அதை ஒரு போதும் மீறாமல்,, இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஒரு போதும் உடன் போகாத சிலை வணங்கிகளுக்கு மட்டும் ஒப்பந்த காலம் வரை
அதன் பின் அவர்களும் வர முடியாது
அரேபியாவில் சிலை வணக்கம் ஒழிக்கபட்டதை குறிக்கும் வரலாறு படைத்த அறிவிப்பு இது
25ஆவது இப்தாரையும் 26 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
இன்றைய வினா
நபி பெருமான் முன்னிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ,என்று விளக்கும் சூராஹ் எது ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
26 ரமலான்(9) 1445
06042024 சனிக்கிழமை
சர்புதீன் பீ

ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ





நபி ஸல்27
தூதுக் குழுக்கள் வருகை
07042028 ஞாயிறு
ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு
நபி பெருமானை சந்தித்து தங்கள் நம்பிக்கையை , விசுவாசத்தைத் தெரிவிக்கவும் ,குரான் வசனங்களை ஓதக் கேட்கவும் அரேபியாவின் பல பகுதிகளிலிருந்து தூதுக்குழுக்கள் வந்த வண்ணம் இருந்தன
எனவே இது தூதுக் குழு ஆண்டு (year of Deputations) என்று அறியப்படுகிறது
நபி ஸல் அவர்கள் இப்போது அரபு நாட்டின் மாமன்னர்
ஆனால் பழைய எளிய வாழ்க்கை முறையில் சிறிதும் மாற்றமில்லை
நபி பெருமான் முன்னிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ,
இறைவனை எப்படி கண்ணியபடுத்த வேண்டும்
என்பதை தூதுக்குழுக்களுக்கு எடுத்துக் சொல்லும் பல வசனங்கள்
சூராஹ் 49 அல் ஹுஜூரத்தில் வருகின்றன
49:1 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَيْنَ يَدَىِ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ وَ اتَّقُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏
49:1. இறை நம்பிக்கை கொண்டோரே (முஃமின்களே! இரறைவனுக்கும் (அல்லாஹ்வுக்கும்), அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; இறைவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக இறைவன் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.:
49:2 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِىِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْـتُمْ لَا تَشْعُرُوْنَ‏
49:2. இறை நம்பிக்கை கொண்டோரே (முஃமின்களே!) நீங்கள் நபியின் குரலுக்கு மேல், உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.
49:3 اِنَّ الَّذِيْنَ يَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰى‌ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ‏
49:3. நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய குரல்களை தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு.
49:4 اِنَّ الَّذِيْنَ يُنَادُوْنَكَ مِنْ وَّرَآءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ‏
49:4. (நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே!
49:5 وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا حَتّٰى تَخْرُجَ اِلَيْهِمْ لَـكَانَ خَيْرًا لَّهُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
49:5. நீர் அவர்களிடம் வெளிப்பட்டு வரும் வரையில், அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்) அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
நபி பெருமானின் இவ்வுலக வாழ்வின் நிறைவு பத்து ஆண்டு காலத்தில் அவர்களே தலைமை ஏற்று நடத்திய போர்களின் எண்ணிக்கை 27
அதில் 9 இல் மிகக் கடுமையான போராட்டம்
நபிகள் மிகத் தெளிவாக துல்லியமாகத் திட்டமிட்டு மற்றவர்கள் தலைமையில் நடந்த போர்கள் 38
போரின் ஒவ்வொரு நிலையையும் தம் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்த நபிகள் யாரும் எளிதில் நெருங்கி விளக்கம் கேட்கலாம் என்ற அளவுக்கு எளிமையாகவும் இருந்தார்கள்
இந்தப் பத்து ஆண்டுகளில் அரேபியாவில்
சிலை வணக்கம் ஒழிக்கப்பட்டது
தட்டு முட்டு சாமான்களுக்கு இணையாக இருந்த பெண்கள் நிலையை மாற்றி சட்டப்படி ஆண்களுக்கு இணையாக சமத்துவ நிலையும் உரிமையும் வழங்கப்பட்டது
அரபியர்களுக்க் இழிவை ஏற்படுத்திய மது ,ஒழுக்கக்கேடு போன்ற தீமைகள முழுமையாக் ஒழிக்கப்பட்டு அரபு மக்கள் நம்பிக்கை ,நாணயம் நேர்மையின் பக்கம் திரும்பினார்கள்
நூற்றாண்டுகளாக அறியாமை இருளில் இருந்த இனத்தோர்
அறிவுவேட்கை மிகுந்தவராய் மாறினார்
உலகளாவிய சகோதரத்துவம் –universal brotherhood –என்பது உதட்டளவில் இல்லாமல் பொதுச் சட்டத்தின் அடிப்படையாக அமைந்தது ---இது உலக அரசியல் , மனிதவியல் வரலாற்றில் ஒருமிகப் பெரிய மாற்றம் - முதன் முறையாக நிகழ்ந்த ஒரு புரட்சி என்றே சொல்லலாம்
குரான் தொடர்பான பணிகளுக்கு நபிகள் மிகவும் ஆதரவாகஇருந்தார்கள்
26ஆவது இப்தாரையும் 27 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா
இன்றைய வினா
நபி பெருமான்நிறைவுப் புனிதப்பயண உரை எந்த இடத்தில் நிகழ்ந்தது ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
27 ரமலான்(9) 1445
07042028 ஞாயிறு
சர்புதீன் பீ
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX






நபி ஸல்
28 பிரியா விடை
08042024 திங்கள்
ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு
நபி அவர்கள் மக்காவுக்கு புனிதப் பயணம் செல்கிறார்கள்
மக்காவிலிருந்து விடை பெறும் புனிதப் பயணமா Farewell Pilgrimage ஆக
அமைந்தது இது
அரபாத் மலை யிலிருந்து—பத்னுல் வாதி –என்ற இடத்தில் இருந்து ஒரு மிகபெரும் கூட்டத்தில் நபிகள் உரையாற்றினார்கள்
இஸ்லாம் சொல்லும் கடமைகள் அனைத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி
“ எல்லோரும் இறைவனிடமே திரும்பிச செல்லவேண்டும்
ஒவ்வொருவரின் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு இறைவன் தீர்ப்பு வழங்குவான் “
என்பதை நினைவூட்டினார்கள்
உரையின் நிறைவாக
“”நான் உங்களுக்கு சொல்லவேண்டிய செய்தியைச் சொல்லி விட்டேனா இல்லையா “
என்று கேட்க.
சில காலம் முன்பு சிலை வணங்கிகளாக இருந்த கடல் அலை போல் திரண்டிருந்த அந்தகூட்டம் ஒருமித்த குரலில்
“ ஆம் ! இறைவன் மிகப்பெரியவன் “
என்று முழங்கிய ஒலி விண்ணை எட்டியது
நபிகள் “ இறைவா நீயே சாட்சி “ என்று சொன்னார்கள்
27ஆவது இப்தாரையும் 28 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
பாப்டி
மெஹராஜ்
ஹசன் அலி “ பத்னுல் வாதி –என்ற இடத்தில் இருந்து” என்று குறிப்பிட்டுச் சொன்னதுக்கு நன்றி
----
ஷர்மதா.
இன்றைய வினா
நபி பெருமானின் இவ்வுலக வாழ்வு நிறைவடயப்போவதை அறிவித்த குரான் சூராஹ் எது ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
28 ரமலான்(9) 1445
08042024 திங்கள்
சர்புதீன் பீ

ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ






நபி ஸல்
29 நிறைவு ?ப்பகுதி
09042024 செவ்வாய்
நபி பெருமானின் புனிதப் பயணத்தின் போது இறைவன் சுராஹ் 110 (அந் நஸ்ர் ) ஐ அருளினான்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
உதவி سورة النصر An-Nasr
110:1
இறைவனுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
,
110:2
மேலும், இறைவனின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
,
110:3
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு துதிப்பீராக , மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
இது நபிஸல் அவர்களின் இவ்வுலக் வாழ்வு நிறைவடையப் போவததை பற்றி இறைவன் அறிப்பு
புனிதப்பயணத்ததிலிருந்து மதினா திரும்பிய சில நாட்களில் நபி அவர்கள் நோயுற்றார்கள்
இந்த செய்தி அறிந்த நாட்டு மக்கள் துயரத்தில் கலங்கினர்
ஒரு நாள் அதிகாலை வேளையில் வீட்டை விட்டு வெளியே வந்து பள்ளிக்குப் போய் காலை கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்டார்கள் நபிகள் நோயுற்ற நாளிலிருந்து அபூபக்ர் தொழுகையை நடத்தி வந்தார்கள்
நபிகளை பள்ளியில் பார்த்த மக்கள் உடல் நலமடைந்து விட்டார் என்ற எண்ணத்தில் நிம்மதி அடைந்தனர்
ஆனால் அன்றே நபி பெருமான் மறைந்ததாக ஒரு செய்தி பரவியது
“இறைவனின் தூதர் மரிக்க முடியாது .
மறைவு பற்றிய செய்தியைப் பரப்புவோர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் “
என்று மக்களை எச்சரித்தார் உமர்
பள்ளியிலிருந்து வந்த அபூபக்ர் நபியின் வீட்டில் ஆயிஷா வின் அறையில் நபிகள் படுதிருப்பதை பார்த்தார்
மறைவை உறுதி செய்து கொண்டு நபியின் நெற்றியில் முத்தமிட்டார் அபூபக்ர்
“ எல்லோருக்கும் எல்லாமாக இருக்கும் நபிக்கு இறப்பு கிடையாது
அப்படி ஒரு செய்தி முழுப்பொய், மோசமான பொய்”
என்று உமர் பேசுவதை மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்
அபூபக்ர் உமரின் காதில் உண்மையை உரைக்க முயற்சித்ததை உமர் கவனிக்கவில்லை
இப்போது அபூபக்ர் மக்களிடம் பேச முற்பட்டார்
அவரை ,அவர் குரலை அறிந்து கொண்ட மக்கள் கூட்டம் இப்போது உமரிடமிருந்து அபூபக்ர் பக்கம் திரும்பியது
“எல்லாப்புகழும் இறைவனுக்கே
முகமதை வழிபடுவோருக்கு முகமது மறைந்து விட்டார்
இறைவனை வழிபடுவோருக்கு இறைவன் என்றும் உயிருடன் இருக்கிறன் “
என்று சொல்லி விட்டு திருமறை குரானை எடுத்து
3:144. முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;
அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா?
அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
என்ற குரான் வசனத்தை ஓதினார்
இப்படி ஒரு வசனம் –
-- ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டில் அருளப்பட்ட இந்த வசனம் ---
நபிகள் மறைவுக்கு 7 ஆண்டுகள் முன்பு வந்த வசனம் -
குர்ஆனில் இருப்பதே இது வரை தெரியாது என்பது போல் இருந்தது மக்களின் மனநிலை
“அபூபக்ர் இதை ஓதக் கேட்டவுடன் கால்களை இழந்தவன் போல் தரையில் விழுந்தேன்
நபிபெருமான் மறைந்து விட்டார்
இறைவன் அவர்மேல் அருள் மழை பொழிந்து பாதுகாகாட்டும் “
இது உமர் சொன்னது
28ஆவது இப்தாரையும் 29 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
ஹசன் அலி “
அக்பர் அலி (முத்தவல்லி)
இன்றைய வினா
குரான் இன்று உள்ள வடிவில் அமைப்பில் தொகுக்கப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில்
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானையும் அவர் வழியே இறைவன் அருளிய திரு மறை யையும் சிந்திப்போம்
29 ரமலான்(9) 1445
09042024 செவ்வாய்
சர்புதீன் பீ

ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ





நபி ஸல்
30குரான்
10042024 புதன்
நபி பெருமான் வாழ் நாள் காலத்திலேயே குரான் முழுதும் எழுத்து வடிவாக்கபட்டது
பல நபித் தோழர்கள் குரானை முழுமையாக மனனம் செய்திருந்தனர்
ஆனால் எழுத்துப் பதிவுகள் பல பகுதிகளாக பலரிடம் இருந்தன
நபிகள் மறைந்த இரண்டு ஆண்டுகளில் அபூபக்ர் ஆட்சிக் காலத்தில் நடந்த போரில் குரானை மனனம் செய்த பல நபித் தோழர்கள் உயிர் நீத்தனர்
எனவே குரான் பதிவுகளை சேகரித்து மீண்டும் எழுத்து வடிவில் ஆக்கப்பட்டது
மீண்டும் உத்மான் ஆட்சிக் காலத்தில் எல்லா குரான் பதிவுகளும் சேகரிக்கப்பட்டன
அபூபக்ர் தொகுப்பின் அடிப்படையில் அவை சரி பார்க்கபட்டன .அதோடு குரானை மனனம் செய்தவர்களைக் கொண்டும் சரி பார்க்கப்பட்டன
முழுமையாக இஸ்லாத்தில் இணைந்த நெருங்கிய நபித் தோழர்கள், உதவியுடன் குரான் இன்று உள்ள வடிவில் அமைப்பில் தொகுக்கப்பட்டது
இதுவே நபிகள் தொகுத்து அமைத்த வடிவமாகக் கருதிப்
போற்றப்படுகிறது
அன்றிலிருந்து இன்று வரை குரான் மிக கவனமாகப் பாதுகாக்கப் படுகிறது
குரானின் அமைப்பை புரிந்து கொள்வது சற்று சிரமம்
பல காலங்களில் இறங்கிய வசனங்கள் , பல்வேறு செய்திகள் ஒரே சூராவில் வரும்
மதினா சூராவில் மக்காவில் இறங்கிய வசனங்கள் வரும்
ஒரே சூராவில் பிற்காலத்தில் மதினாவில் இறங்கிய வசனங்கள் முதலிலும் மிக முந்திய மக்கா வசனங்கள் சூராவின் பின் பகுதியிலும் வரும்
உடனே குரான் ஒரு சரியான அமைப்பில்லாதது என்று சொல்லி விட முடியாது
சற்று கூர்ந்து கவனித்தால் அதில் உள்ள ஒரு ஒழுங்கு ,காரணம் புரியும்
வசனங்கள் கால வரிசைப்படி இல்லாமல் முன் பின்னாக வருவதற்குக் காரணம்
எண்ணங்களின் புரிதல் ,தாக்கம் அகத்திலிருந்து புறத்திற்குப் பரவுகிறது நபிகளுக்கு
பெரும்பாலோருக்கு மாறாக புறத்திலிருந்து அகதிற்குப் பரவும்
அரபைத் தவிர மற்ற மொழிகளில் குரானைப் படிப்பவர்களுக்க்கு குழப்பாமகத் தெரிவது அதன் வாக்கிய அமைப்பு
அரபு மொழியின் தனித் தன்மையே இதற்குக் காரணம்
அரபு மொழி ஒலியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது
ஒரு சொல் அல்லது ஒலி திரும்பத் திரும்ப rhythm ஆக வரும்போது அந்த ஒலியில் வசனம் நிறைவுற்றது போல் ஒரு நிறுத்தம் வரும்
ஆனால் அந்த வசனம் – அதன் பொருள் -தொடர்ந்து பல வசனங்களில் வரும்
அரபு மொழிக் குர்ஆனில் உள்ளது போல் அந்த ஒலி நிறுத்தங்களில் மொழி பெயர்ப்பபிலும் வசன எண் கொடுக்கப்படுகிறது
29ஆவது இப்தாரையும் 30 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷர்மதா முதல் சரியான விடை
Khatheeb Mamuna Lebbai
ஹசன் அலி “
அக்பர் அலி (முத்தவல்லி)
என்னுரை
ஒரு மாத காலம்
நபிகளை சிந்தித்து அவர்களோடு பயணித்தோம்
வாழ்க்கை வரலாறு என்றோ வரலாற்றுச் சுருக்கம் என்றோ சொல்லமுடியாது
வாழ்க்கைக் குறிப்பு என்று சொல்லலாம்
என்னைப் பொருத்த வரையில் பல புதிய செய்திகள், சொற்களைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது இது என்பதை மறுக்க முடியாது
பிக்தால் ஆங்கிலக் குரானை பல முறை முழுமையாகப் படித்திருக்க்றேன்
ஆனால் 36 பக்க முகவுரையை முழுமையாக ஊன்றிப் படித்தது இதுவே முதல் முறை
வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி
தொடர்ந்து படித்த உங்களுக்கும் ஓரளவு பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன்
வினாக்களுக்கு விடை அளித்து ஊக்கமூட்டிய சகோ
Khatheeb Mamuna Lebbai ஹசன் அலி ஷர்மதா ,பாப்டி சிராஜுதீன்
மெஹராஜ் ஷிரீன் பாருக்,அக்பர் அலி
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சகோ ஜோதி
அனைவருக்கும் நன்றி
உடல் நலம், மன நலம் காத்து முழுப் பதிவையும் வெளியிட அருள் புரிந்த ஏக இறைவனுக்கு
நன்றி நன்றி நன்றி
நம் அனைவருக்கும் இந்த புனித மாதத்தின் பர்லானா வாஜிபானசுன்னத்தான நfபிலான அமலகளின் முழுப்பயனையும்
இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றமானா வாழ்வையும் அருள ஏக இறைவனை இறைஞ்சிக் கேட்டவனாக இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
30ரமலான் (9) 1445
10042024 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment