Thursday, 18 April 2024

திருமறை குரான் சுவனத்தின் வாரிசுதாரர்கள் சுராஹ் 23 1-11 19042024 வெள்ளி





 திருமறை குரான்

சுவனத்தின் வாரிசுதாரர்கள்
சுராஹ் 23 1-11
19042024 வெள்ளி
சுவனத்தின் வாரிசுதாரர்கள் என இறைவன் யாரைக் குறிப்பிடுகிறான் ?
இறைவசனம் எது (எவை)?
விடை
சுராஹ் 23:1-11
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
இத்தகையோர் தாம் (சவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
அக்பர் அலி- முதல் சரியான விடை
ஷர்மதா
khatheeb Mamuna Lebbai
ஹசன் அலி (வசனம் 7:43 இதையும் குரிப்பிட்டிருக்கிறார்
“அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதத்தை எடுத்து விடுவோம். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். "நமக்கு இத்தகைய வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிருக்காவிட்டால் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். நமது இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டு வந்தனர்'' என அவர்கள் கூறுவார்கள். "உங்கள் செயல்களின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுவே'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.”
இறைவன் நாடினால் நாளைசிந்திப்போம்
9ஷவ்வால் (10) 1445
19 042024 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment