கவிதை 220424
19042024 கவிதைப் போட்டி
தலைப்பு
'காத்திருப்பு"
ஒரு ஆறே எழுத்துச் சொல்
காத்திருப்பு
அதில்தான் எத்தனை வகைகள் வடிவங்கள் பொருட்கள்
கருவில் இருக்கும் போது தாயின் எதிர்பார்ப்பு
தேர்வு எழுதி முடிவுக்காக
காத்திருப்பு
தோழியின் வருகைக்காக காத்திருக்கும் இனிமை
மணநாள் இரவில் துணைவியை எதிர்நோக்கும் பதற்றம்
பேறுகால அறைக்கு வெளியே தந்தையின் தவிப்பு
கட்டாயக் காத்திருப்பில் உள்ள உயர் அதிகாரியின் மன நிலை என
எண்ணில் அடங்காததில் எண்ணி எடுத்துரைத்தேன்
(8_10 என்ற)எண்ணிக்கை கட்டுப்பாட்டால்
இப்போது என் காத்திருப்பு உங்கள் தெரிவுக்காக
சர்புதீன் பீ
கவிதை 19/220424
No comments:
Post a Comment