தமிழ் (மொழி) அறிவோம்
அரிஞ்சான் குழஞ்சான் ஆக்குனா வெரைச்சான்
21042024 , ஞாயிறு
எங்கள் திருப்பத்தூர் வட்டாரத்தில் பயன்பாட்டில் உள்ள ஒரு சொல் வழக்கு
"அறிஞ்சான் கொளஞ்சான்----"
விலை தரம் மலிவான உணவு வகையைக் குறிக்கும் இதன் சரியான முழு வடிவம் விளக்கம் என்ன?
விடை
அரிஞ்சான் குழஞ்சான் ஆக்குனா வெரைச்சான்
தும்பிலி( Lizard fish) என்பது விலை குறைந்த வகை மீன்.
அதிகபட்சம் 150 க்கு விற்பார்கள். சிந்தாதிரிப்பேட்டை போன்ற பெரிய மார்க்கெட்களில் 100 ரூபாய்க்கே கிடைக்கும்.
மீனிலேயே புழங்குபவர்கள் இந்த மீனை பெரும்பாலும் வாங்கமாட்டார்கள்.
பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில், 'அரிஞ்சான் குழஞ்சான் ஆக்குனா வெரைச்சான்' என்ற சொலவடை இந்த மீனுக்கு உண்டு.
அதாவது அரியும் போது குழைவாக சதை பிய்த்துக்கொண்டு வருவது போல இருக்கும் இந்த மீன்கள் , சமைத்த பின் கல்லு மாதிரி ஆகிவிடும் என்பதால் அப்படி ஒரு சொலவடை.
விடையளிக்க முயற்சித்த
சகோ ஹசன் அலிக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
21042024 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment