நெஞ்சார்ந்த ஈகைத் திரு நாள் வாழ்த்துக்கள்—
ஈத்துவத்தலை வலியுறுத்தும் ஈகைத் திருநாள்
ஒரு மாதம்
புனித மாதம்
திருமறை அருளப்பட்டசிறப்பு மாதம்
இந்த ஒரு மாதமும் முழுமையாக ஒரு தவம் போல் வாழ்ந்தோம்
தவம் என்றால் காட்டுக்குள் கண்ணை மூடி அமரும் தவம் அல்ல
வீட்டுக் கடமைகள், அலுவலகக் கடமைகள் ,வணிகப் பணிகள் என எதையும் ஒதுக்கி வைப்பதில்லை
சில கட்டுப்பாடுகள்- -மிகக் கடுமையாக--
உணவுக்கட்டுப்பாடு, ,உணர்வுக் கட்டுப்பாடு, உளக் கட்டுப்பாடு உடல்கட்டுப்பாடு உறவுக்கட்டுப்பாடு
சுட்டெரிக்கும் வெயில் – 40 ,50 என்று அச்சுறுத்தும், மிரள வைக்கும் செய்திகள்
இதை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாடமல்
-14 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தோம் இந்த மாதம் முழுதும்
எப்படி முடிந்தது,?
ஒரே விடை
இறையச்சம , திடமான இறை நம்பிக்கை
இந்த நம்பிக்கைதான் மிக வலுவான பல எதிரிகளை வீழ்த்தி நமக்கு வெற்றியை ஈட்டித் தந்தது
இதுவும் முடியும் ,இன்னமும் முடியும் நம்மால்
என்ற உறுதியோடு அல்லவைகளை வென்று நல்லவற்றை அடைவோம்
நம் அனைவரும் இறையருளை முழுமையாகக் கைப்பற்றி
நல்ல வாழ்நாள், உடல் மன ஆன்மீக நலம் ,நிறைவான செல்வம் ,
உயர் மெய் ஞானம் பெற்று ஓங்கு புகழுடன் வாழ்வாங்கு வாழ்வோம்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment