Saturday, 13 April 2024

தமிழ் (மொழிழ்) அறிவோம் குரோதி 14042024 ஞாயிறு

 






தமிழ் (மொழிழ்) அறிவோம்

குரோதி
14042024 ஞாயிறு
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மூன்ற எழுத்து (தமிழோடு தொடர்புள்ள) சொல்
முதலும் ,மூன்றாவதும் வல்லினம்
மற்றது இடையினம்
இடையை நீக்கினால் உடல் அசைவு
என்ன அந்தச் சொல் ?
மிக எளிய வினா, நிறைய சரியான விடைகள் வரும் என நினைத்தேன்
கவிஞர் செங்கை சண்முகத்தின் பதிவுக்குப்பின் அவரோ மற்றவர்களோ விடை அனுப்பலாம் என எதிர்பார்த்தேன்
ஆம்
பிறக்கும் ஆண்டின் பெயர்
குரோதி
அதுவே வினாவுக்கு விடை
ஆண்டுகள் பட்டியலில் உள்ள 60 பெயர்களில் ஓன்று கூட தமிழில் இல்லை
38 ஆவது ஆண்டாக வருகிறது குரோதி
சொல்லின் பொருள் மிகக் கடுத்தமாக இருப்பதை மறந்து
சித்திரைப் பெண்ணே வருக
நலமும் வளமும் தருக
என்று வாழ்த்தி வரவேற்போம்
இறைவன் நாடினால் நாளைஆங்கிலத்தில் சிந்திப்போம்
௧௪௦௪௨௦௨௪
14042024ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment