நபி
ஸல்
13
பதுருப்போர்
24032024ஞாயிறு
ஹிஜ்ரி
இரண்டாம் ஆண்டு –
குறைஷிகளின்
வணிகக் குழு ஓன்று சிரியாவிலிருந்து மக்கா திரும்பிக் கொண்டிருந்தது
மதினாவுக்கு
அருகாமையில் உள்ள வழக்கமான பாதையில் போய்க்கொண்டிருந்தது
குழுவின்
தலைவன் அபு சுfபியானுக்கு நபி ஸல் அவர்கள் வணிகக் குழுவை கைப்பற்றத்
திட்டமிட்டிருப்பதாக செய்தி கிடைத்தது
உடனே
உதவிக்குப் படை அனுப்பச் சொல்லி மக்காவுக்கு செய்தி அனுப்பினார் அவர்
கண்ணியத்தையும்
பொருளையும் காப்பாற்ற உடனடியாக ஆயிரம் வீரர்கள் கொண்ட படை மதீனாவுக்கு
விரைந்தது
இஸ்லாமியர்களை
தாக்குவதை விட ,
வணிகக் குழுவை மீட்பதே அவர்கள் நோக்கம்
உதவிப்படை
மதினா
வந்து சேர்வதற்குள் நபிஸல் அவர்கள் வணிகக் குழுவைக் கைப்பற்றி
இருப்பார்கள்
வணிகப்
பொருட்களைக் கைப்பற்றுவதை விட குறைஷிப் படையை போரிட்டு வெல்வதே நபி ஸல் அவர்களின்
நோக்கமாக இருந்தது
போர்
புரிய இறைவன்ஆணை, போரில் வெற்றியை உறுதிப் படுத்திய இறை செய்தி ,இவை
நபியவர்களுக்கு போரிட தூண்டுதலாக இருந்தன
முஸ்லிம்
வீரர்களோ மிகவும் வலுவற்ற நிலையில் இருந்தனர் ;ஆயதங்கள் எதுவுமே சரியாக
இல்லை
அவர்களிடம்
போய் ஒரு வலிமையான பெரிய படையை எதிர்த்துப் போரிட்ட வேண்டும் என்று சொன்னால்
அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது
எனவே
நபிகள் தங்கள் உண்மையான நோக்கத்தை சொல்லாமல் மறைத்து விட்டார்கள்
நபி
அவர்கள் படையுடன் புறப்படு முன் குறைஷிப் படை பாதித் தொலைவு வந்து விட்டது
வணிகக்குழு, இஸ்லாமியர்
படை, குறைஷிப் படை மூன்றும் பதுரை நோக்கிப் பயணித்தன .
இஸ்லாமியப்
படையும்
குறைஷிப் படையும் நேருக்கு நேர் சந்தித்தன
இதற்கிடையே
நபி அவர்கள் இஸ்லாமியப் படையில் இருந்த யத்ரீபர்களுக்கு போர்க்களத்தை விட்டு ஊர்
திரும்ப அனுமதி அளித்தார்கள் .அவர்கள் ஒப்பந்தப்படி யத்ரீபர்கள் போரில்
ஈடுபட வேண்டியதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்
ஆனால்
யத்ரீபர்கள் இதைகேட்டு மிகவும் மன வருத்தம் அடைந்தனர் இக்கட்டான நிலையில் நபியை
விட்டு விலகிப் போவதென்பாதை அவர்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை
முதலில்
முஸ்லிம்களுக்கு பின்னடைவாக இருந்தாலும் போர் நிறைவு அவர்களுக்கு வெற்றியாக ,மாபெரும்
வெற்றியாக அமைந்தது
இந்த
வெற்றியால் நபியின் பேரும்புகழும் அரபுலகம் முழுதும் பரவியது
அதே
நேரத்தில் குறைஷிகளின் வன்மம் மேலும் அதிகமானது
முன்பிருந்த
மத வெறுப்போடு இப்போது போரில் இழந்த உயிர்களுக்கு பழி வாங்கும் உணர்வும் சேர்நது
கொண்டது
பதுருப்போர்
பற்றிய இறைவசனங்கள் வரவிருக்கும் பெரிய போராட்டங்கள் பற்றித்
தெளிவாக்குகின்றன
12ஆவது
இப்தாரையும் 13 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும்
நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள்
அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான
விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
ஹசன்
அலி
ஷர்மதா
இன்றைய வினா
உஹத் போரில்
முஸ்லிம்களுக்குப் பின்னடைவு ஏற்படக் காரணம் என்ன ?
, இறைவன்
நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
13 ரமலான்(9) 1445
24032024ஞாயிறு
சர்புதீன் பீ
&&&&&&&&&&&&
நபி ஸல்
14 உஹதுப்போர்
25032024 திங்கள்
பத்ருபோர் நடந்த ஒராண்டுக்குள் மூவாயிரம் வீரர்கள் கொண்ட படை ஒன்று மதினா நகரை அழிக்கும் நோக்கத்துடன் மக்காவில் இருந்து புறப்பட்டது
எதிரிகளைத் தாக்கி அழிப்பதை விட , மதீனா நகரைப் பாதுகாப்பதே முதல் கடமை என்று நபிகள் எண்ணினார்கள்
நபிஸல் லுடன் இருந்த முஸ்லிம்களிலும் முழுமையாக நம்பிக்கை கொள்ளாத நயவஞ்சகக் கூட்டம் ஓன்று இருந்தது .அதன் தலைவர் அப்துல்லா பின் உபே
அவரும் நபியின் கருத்தை முழுமையாக ஆதரித்தார்
ஆனல் பதுருப் போரில் வெற்றியை சுவைதத வீரர்கள் , இறைவன் எல்லா இடங்களிலும் தங்களுக்கு துணை நிற்பான் என்று எண்ணினர்
அதனால் , போரில் இறங்காமல் நகருக்குள் பாதுகாப்பாக தங்குவதை அவர்கள் ஏற்கவில்லை
வீரர்களின் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கண்ட நபி ஸல் போருக்கு அனுமதி அளிக்க,
ஆயிரம் பேர் கொண்ட இஸ்லாமியப்படை எதிரிகள் முகாமிட்டிருந்த
உஹது மலையை நோக்கிச் சென்றது
நபியின் இந்த மனமாற்றம் அப்துல்லா பின் உபே க்கு பிடிக்கவில்லை
முஸ்லிம்களுக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்று தெரிந்தும் வீரர்களின் ஆர்வக் கோளாறுக்கு இடம் கொடுத்ததாக நினைத்த அந்த நயவஞ்சகன் ,தன் கூட்டத்தாரை படையிலிருந்து விலகி வரச் செய்தான்
இதனால் படையினர் எண்ணிக்கையில் கால் பங்கு குறைந்து விட்டது
இருந்தாலும் பத்ரு போரை விட இந்தப்போரில் வெற்றி வாய்ப்பு நன்றாகவே இருந்தது
நபியின் சொல்லை மீறிய 50 வில் வீரர்களின் செயலால் நிலைமை தலை கீழாக மாறியது
மலையில் உள்ள ஒரு கனவாயைக் காக்க இந்த 50 பேரை நியமித்து , எந்த நிலையிலும் அவர்கள் அங்கிருத்து நகரக் கூடாது என்று நபி சொல்லியிருந்தார்
இஸ்லாமியர்களின் வெற்றியைக் கண்ட அவர்கள் ,எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் தங்களுக்கு உரிய பங்கு கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் நபியின் சொல்லை மறந்து தங்கள நிலையை விட்டு இறங்கி வந்தார்கள்
தோல்வி அடைந்து பின் வாங்கிக் கொண்டிருந்த எதிரிப்படையினர் கனவாய் காவல் இன்றி இருப்பது கண்டு, திரும்பி வந்து வெற்றிக் களிப்பில் இருந்த இஸ்லாமிய வீரர்கள் மேல் பாய்ந்து தாக்கினர்
நபி அவர்களுக்கும் காயம் ஏற்பட்டு விட , நபி பெருமான் உயிர் நீத்தார் என்று செய்தி பரவியது
நபியை அடையாளம் கண்ட வீரர் ஒருவர்நபி உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியை உரக்க அறிவிக்க , வீரர்கள் அனைவரும் நபி பெருமானைச் சுற்றி பாதுகாப்பாக நின்றனர்
பல வீரர்களை இழந்த நிலையில் இஸ்லாமியப்படை பின் வாங்கியது
இருந்தாலும் நபி அவர்கள் அடுத்த நாள் இருந்த வீரர்களைத் திரட்டிக்கொண்டு போர்க்களம் போனார்கள்
போர் புரிவது நோக்கமல்ல
ஆனால் இதன் மூலம் குறைஷிகள் படை மதீனாவைத் தாக்கத் தயங்குவார்கள் என்ற எண்ணம்
எண்ணம் வெற்றிகரமாய் நடந்தேறியது
இதில் பெரிதும் நபிக்கு உதவியாய் இருந்தவர் பெடாவி என்ற நண்பர்
இவர் முஸ்லிம் படையினரோடு பேசி விட்டு பின் குறைஷிப் படையிடம் போனார்
அங்கு அவர்கள் தலைவரிடம்
நபி அவர்கள் மிக வலிமையான படையுடன் வந்திருக்கிறார்
நேற்றைய போரில் இழந்த உயிர்களுக்காக பழி வாங்கும் வேட்கை அவரிடம் மேலோங்கி நிற்கி றது
என்று சொன்னார்
இதைகேட்ட குறைஷித் தலைவன் அபு சுபியான் உடனே படையுடன் மக்கா திரும்ப தீர்மானித்தான்
13ஆவது இப்தாரையும் 14 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா
இன்றைய வினா
“பனு நடிர் “ யார் ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
14ரமலான்(9) 1445
25032024 திங்கள்
சர்புதீன் பீ
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நபி ஸல்
15 உஹதின் தாக்கம்
பனு நடிர்
26032024 செவ்வாய்
உஹது
போரில் தோல்வியின் விளைவாக அரபு குலங்கள் இடையே இஸ்லாத்தின் கண்ணியம், புகழ் மங்கியது
இது அப்படியே மதீனத்து யூதர்களிடமும் பரவியது
அரபு நாட்டில் பல குலத்தோர் குறைஷிகள் பக்கம் போகத் தலைப்பட்டனர்
சிறு குழுக்களாக பயணம் செய்த இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்
இஸ்லாத்தைப் பரப்பச் சென்ற குபெய்ப் என்ற தூதர் அரபு குலம் ஒன்றினால் சிறை பிடிக்கப்பட்டு ,அடிமையாகக் குறைஷிகளிடம் விற்கபட்டார்
குறைஷிகள் அவரை மக்கள் எல்லோரும் பார்க்கும் படி பொது இடத்தில் துன்புறுத்தி உயிரைப் பறித்தனர்
யூதர்கள் கங்கள் உடன்படிக்கையை மறந்து பகைமை பாராட்டி இஸ்லாமிய வெறுப்புணர்வை வெளிப்படுத்தினர்
இன்னும் ஒரு படி மேலே போய் குறைஷிகள் பின்பற்றும் (சிலை வணக்க ) மதம் இஸ்லாத்தை விட மிக உயர்வானது என்றும் பேசித் திரிந்தனர
“வேதத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்ட அவர்கள் , எப்படி சிலை வணக்கத்தைப் போற்றி ,ஏக இறை நம்பிக்கை கொண்டோரை விட சிலையை வணங்குவோர் மிகவும் உயர்ந்தவர்கள் என்று அறிவிக்கிறார்கள் “ (குரான் 4:81கருத்து )
இதனால் யூதர்களுக்கு எதிராக நபி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று
அதன் ஒரு பகுதியாக யூதர்களின் ஒரு பிரிவான பனு நடிர் Banu Nadi குலம் பாதுகாப்பாக இருந்த இருப்பிடத்தை முற்றுகையிட்டு அவர்களை ஊரை விட்டு வெளியேறச் செய்தார்கள்
நயவஞ்சக முஸ்லிம்கள் தொடர்ந்து யூதர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்
குரான் சூராஹ் 59 அல் ஹஷ்ர் இந்தச் செய்தியை எடுத்குச் சொல்கிறது
59:2 هُوَ الَّذِي أَخْرَجَ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ مِن دِيَارِهِمْ لِأَوَّلِ الْحَشْرِ ۚ مَا ظَنَنتُمْ أَن يَخْرُجُوا ۖ وَظَنُّوا أَنَّهُم مَّانِعَتُهُمْ حُصُونُهُم مِّنَ اللَّهِ فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا ۖ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ ۚ يُخْرِبُونَ بُيُوتَهُم بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே,
எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை, அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக இறைவனை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்
ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் இறைவன் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான், அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் நம்பிக்கை உடையோர் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர் எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.
59:3 وَلَوْلَا أَن كَتَبَ اللَّهُ عَلَيْهِمُ الْجَلَاءَ لَعَذَّبَهُمْ فِي الدُّنْيَا ۖ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابُ النَّارِ
தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை இறைவன் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான், இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
59:4 ذَٰلِكَ بِأَنَّهُمْ شَاقُّوا اللَّهَ وَرَسُولَهُ ۖ وَمَن يُشَاقِّ اللَّهَ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
அதற்கு(க் காரணம் நிச்சயமாக அவர்கள் இறைவனுக்கும் , அவனுடைய தூதருக்கும் மாறு செய்தார்கள், அன்றியும், எவன் இறைவனை பகைத்துக் கொள்கிறானோ, (அவனை) நிச்சயமாக இறைவன் வேதனை செய்வதில் கடினமானவன்.
59:5 مَا قَطَعْتُم مِّن لِّينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَىٰ أُصُولِهَا فَبِإِذْنِ اللَّهِ وَلِيُخْزِيَ الْفَاسِقِينَ
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ இறைவனின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காவுமே தான்.(சூராஹ் 59 2-5)
14ஆவது இப்தாரையும் 15 ஆவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
ஹசன் அலி
பாப்டி
ஷர்மதா
இன்றைய வினா
மிகப் பெரிய எண்ணிக்கையில் வந்த குறைஷிப்படையை அகழ்ப் போரிலிருந்து பின் வாங்கச் செய்த இயற்கை நிகழ்வு எது ?
, இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன்நபி பெருமானை சிந்திப்போம்
15ரமலான்(9) 1445
26032024 செவ்வாய்
சர்புதீன் பீ
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
No comments:
Post a Comment