காற்று வாங்கப்போனேன் ஒரு –----
காற்று வாங்கப்போனேன் ஒரு –----
காரணம் நான் கவிஞன் இல்லை
கவிதை மட்டுமா !
இலக்கணம் ,இலக்கியம் எல்லாமே எனக்கு சற்று தொலைவில்தான்
அத்தாவின் கம்பராமாயணக் கட்டுரைகளை வெளியிடும்போது பாடல்களை சரி பார்க்க இணைய தளத்தில் உலாவியபோது இலக்கியத்தில் கொஞ்சம் சுவை உண்டானது
போகப்போக பள்ளி ,கல்லூரியில் படித்த பாடல்களின் இலக்கிய நயம் புலப்படத் துவங்கியது
ஓரளவு எழுத்துப்பிழை ,இலக்கணப்பிழை இல்லாமல் எழுதுவது இறைவன் கொடுத்த வரம்,
ஆனால் இன்றும் இலக்கணம் என்றால் வேப்பங்கனி, எட்டிக்கய்தான்
ஏழெட்டு ஆண்டுகள் முன்பு பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என் குட்டிபபேத்தி “ ஐயா தமிழ் project டுக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள் “ என்று கேட்டார் (கட்டளையிட்டார் என்பதே உண்மை)
தமிழில் project என்பது நான் அறியாத, ,கேள்விப்படாத ஓன்று
“எனக்குக் கவிதை எல்லாம் வராது , தெரியாது “ என்று சொன்னதைக் கேட்காமல்
“ எதாவது எழுதிக்கொடுங்கள்” என்று பிடிவாதம் பிடித்தார் பேத்தி
சரி முயற்சி செய்வோம் என்று வழக்கம் போல் இறைவன் மேல் சுமையை ஏற்றி வைத்து விட்டுத் துவங்கினேன்
அப்போது மின் வெட்டு அதிகமாக இருந்த நேரம
“அனலில் எடுத்தோம் புனலில் எடுத்தோம்
அணுவில் எடுத்தோம் வளியிலும் ஒளியிலும் எடுத்தோம்
ஆனாலும் தீரவில்லை மின் பற்றாக்குறை “
என்று எழுதினேன்
ஓரளவு கவிதை மாதிரி இருந்தது
தொடர்ந்து
“அணைகள் கட்டினோம் ஆழ்துளை போட்டோம்
ஆழியைப பகுததோம் மழையையும் சேகரித்தோம்
ஆனாலும் தீரவில்லை தண்ணீர் பற்றாக்குறை”
“மருந்தடித்தோம் மரபணு மாற்றினோம்
உரம் போட்டோம் பசுமைப் புரட்சி செய்தோம்
ஆனாலும் தீரவில்லை உணவுபற்றாகுறை “
“பருத்தியில் நெய்தோம் பட்டில் நெய்தோம்
பல்லிழையிலும், மரபட்டையிலும் நெய்தோம்
ஆனாலும் தீரவில்லை ஆடைப்பற்றக்குறை “
கவிதையின் இலக்கணம் இதில் இருக்கிறதா என்று தெரியாவில்லை
ஆனால் நன்றாக இருக்கிறது என்று பள்ளி ஆசிரியை சொல்லி விட்டாராம் !
அதன் பின் கவிதை எதுவும் எழுதவில்லை
சென்ற ஆண்டு கவிதைப்பூக்கள் என்ற முகநூல் குழவில் என்னை அறியாமல் சேர்க்கப்பட்டேன்
அதிலும் ஒன்றும் எழுதாமலே இருந்தேன்
நாட்கள் போகப்போக குழுவில் வரும் கவிதைகளின் எளிய நடையைக்கண்டு நாமும் எழுதலாமோ என்ற எண்ணம் வந்தது
மளமளவென்று புள்ளிகள் கூடி வெகு விரைவில் சிறந்த பங்களிப்பாளர்கள்பட்டியலில் பெயர் வந்தது
அதே வேகத்தில் அந்தக்குழு செயல் இழந்து பிறகு காணாமல் போய்விட்டது
பிறகு இந்த ஆண்டு துவக்கத்தில் கவிதைப்பூங்கா என்றொரு குழுவில் இணைந்தேன்/இணைக்கப்பட்டேன்
இந்தக்குழுவில் ஒவ்வொரு வரமும் ஒரு தலைப்பு கொடுத்து கவிதைப்போட்டி வைப்பார்கள்
அதில் கலந்து கொண்டு தொடர்ச்சியாக வெற்றியாளர் சான்றிதழ் இறைவன் அருளால் பெற்று வருகிறேன்
இந்தக்குழுவில் முதல், இரண்டாவது ,மூன்றாவது என்றெல்லாம் தரம் பிரிப்பதில்லை
விதிகளுக்கு உட்பட்டு நன்றாக இருக்கும் கவிதைகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் கொடுத்து விடுவார்கள்
அது 10, 20 ,50 அறுபதாகக் கூட இருக்கலாம்
சில பல காரணங்களால் குழுவில் அவற்றை நான் வெளிஇடுவதில்லை
பிரிவுத் துயர் பல கவிதைகளுக்கு கருவாக அமைந்தது –
சீதக்காதி !!
இலக்கணம் இலக்கியம் தெரியாமலே பிறர் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு கவிதை என்ற ஒன்றை எழுதுவது
சொந்த ஊரின் மணம்/
கற்றதும் பெற்றதும் /
எல்லாவற்றையும் உள்ளடக்கி ஆளும் இறைவன் அருள்
இந்தக்குழுவில் இன்னொரு போட்டி வார்த்தை விளயாட்டு –குறுக்கெழுத்து போட்டி போல
இதிலும் இறைவனருளால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறேன்
வார்த்தை விளயாட்டு -மூளைக்கு வேலை
கவிதை கற்பனைத்திறனுக்கு வேலை
இந்த இரண்டுமே மூத்த குடி மக்களுக்கு மிகவும் தேவையானை
-பல நரம்பியல் நோய்களைத் தடுக்கும் என்கிறார்கள்
இரண்டு நாள் முன்பு நான் எழுதி வெளியான் கவிதை உங்கள் பார்வைக்கு
கவிதைப்பூங்கா குழுவில் சேர விரும்பினால் சொல்லுங்கள்
என்னை யாரோ இணைதது போல் உங்களை இணைத்து விடுகிறேன்
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
PS
A glaring error has crept into my English QUIZ of 26.27 08 2024
Instead of
2 vowels, I have posted
2 nouns
Sorry for the mistake
Thanks to Ms Ashraf Hameeda for pointing out the mistake
28082024புதன்
சர்புதீன் பீ