Tuesday, 20 August 2024

உப்பும் சோடா உப்பும் 21082024 புதன்

 




உப்பும் சோடா உப்பும்

21082024 புதன்
அவ்வப்போது வெண்ணீரில் உப்புப் போட்டு வாய் கொப்பளிப்பது வழக்கம்
அன்றும் அப்படித்தான் ஒரு குவளையில் கொஞ்சம் உப்பைப் போட்டேன்
என்னய்யா செய்கிறீர்கள் என்றான் பேரன்
வாய் கொப்புளிக்கப் போகிறேன் என்று நான் சொல்ல
அதற்கு ஏன் baking soda சோடா உப்பை எடுக்கிறீர்கள் என்றான்
நல்ல வேளை பலமுறை இது போல் தவறு செய்தும் வயிற்றுப் பிரச்சினை எதுவும் இல்லை
பொதுவாக சாப்பாட்டில் , சுவையில் அதிகம் கவனம் செலுத்துவதோ குறை சொல்வதோ கிடையாது
“சாப்பாட்டில் உப்பே இல்லாவிட்டால் கூட சாப்பிட்டு விட்டு பிறகுதான் சொல்வீர்கள் “ என்று என் துணைவி பலமுறை சொல்லியிருக்கிறார்
சுவையில் அதிக நுணுக்கமும் தெரியாது
இதனால் பலமுறை அசடு வழிந்ததுண்டு
காரைக்காலில் வங்கி வேலையாக பாண்டி போய்விட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தேன்
துணைவி “ சாப்பாட்டு மேசையில் எல்லாம் எடுத்து வைத்து விட்டேன்
எனக்கு வேறு வேலை இருக்கிறது . எல்லாவற்றையும் பார்த்து எடுத்து சாப்பிடுங்கள் .ஏதாவது தேவை என்றால் கூப்பிடுங்கள் “ என்றபடி சமையல் அறைக்குள் போய்விட்டார்
நேரம் தவறி விட்டதால் நல்ல பசி
வயிறார சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தேன்
“எறால் புது விதமாகா சமைத்திருந்தேன் . நன்றாக இருந்ததா” என்று கேட்டார்
“எறாலா !” என்ற என் முகத்தில் வியப்புக்குறி
தட்டைத் திறந்து பார்த்து விட்டு அவர் “அதுதான் பாதிக்குமேல் சப்பிட்டிருக்கிறீர்களே “ என்றார்
எறால் என்றால் செம்மீன் , சிவப்பாக இருக்கும் என்ற நினைப்பு
அதனால் புது விதமாக வெள்ளை நிறத்தில் சமைத்திருந்த அதை காலிப்பூ cauliflower பொறியல் என்றே எண்ணி சாப்பிட்டுவிட்டேன்
இன்னொரு அண்மை நிகழ்வு
மதிய உணவு வேளை
பருப்பு மிகவும் கெட்டியாக இருந்தது
அதில் கொஞ்சம் ரசம் ஊற்றிக் கரைத்தேன்
பையன் “ ஏன் பொங்கல் மேல் ர்சத்தை ஊற்றுகிறீர்கள் “ என்றான்
எப்படி இது போல் ஒரு பழக்கம் வந்தது என்று தெரியவில்லை
பொதுவாக எங்கள் ஊர் மக்கள் அனைவருக்கும் சுவை அறிவதில் நாக்கு நீளம் என்பார்கள்
எங்கள் அத்தா , மகன் எல்லோரும் சுவை வல்லுனர்கள் என்றே சொல்லலாம்
துறையூரில் அத்தா ,மாமா நான் மூவரும் மதிய உணவு சாப்பிட்டுக்
கொண்டிருந்தோம்
“ இது அரிசி அப்பளம் “ என்று அத்தா அப்பளத்தை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு
“என்ன பீயன்னா மூனா –உனக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையா “ என்று மாமாவைப்பார்த்து நக்கல் வேறு
எனக்கோ அப்பளம் அரிசியில் செய்வது அல்ல , உளுந்தில் செய்வது என்ற தகவலே அப்போதுதான் தெரிந்தது
அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதியில் அசைவ உணவை அறிமுகப்படுத்தியது அங்கு படித்துக்கொண்டிருந்த அத்தாதான்
அத்தா ,மகனை மிஞ்சியவன் என் பேரன்
குழந்தைப் பருவத்தில் முதல் திட உணவையே உப்பில்லை என்று துப்பியவன்
லட்டு என்றால் ஆரஞ்சு நிறத்தில் இருக்க வேண்டும் ம. மஞ்சள் லட்டைத் தொட மாட்டான்
பால்கோவா என்றால் பாண்டி பான்ஸ்லே அல்லது அதற்கு இணையான நயம் சுவை இருக்க வேண்டும்
திருப்பத்தூரில் பெரியத்தா வீட்டில் தங்கி 7ஆம் வகுபபு படித்தேன்
அப்போதே பெரியத்தா மக்கள் காத்தூன் அக்கா ,பரிமளா அக்கா
“தம்பிக்கு வர்ர துணைவிக்கு சமையல் பிரசசினையே இருக்காது
எதை வைத்தாலும் சாப்பிட்டு விடுவான் “என்று கேலி செய்வார்கள்
விளையும் பயிர் முளையிலே ???
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
21082024 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment