சொந்த ஊர் 18 சகோ தல்லத்
07082024 புதன்
எங்கள் ஊர் பேச்சு வழக்கு பற்றி நான் முன்பே சொல்லியிருக்கிறேன்
அதோடு கேலி ,கிண்டல் உவமைகள் சொல்லடைகள் எல்லாம் கலந்து வரும்
அதன் எடுத்துக்காட்டாக ஒரு சில
(இடையில் என் கருத்துக்கள[ &அடைப்புக்குள்&]
சகோ தல்லத்
திருப்பத்தூரில் நான் ரசித்து இன்று வரை நினைவில் நிற்கும் சில உரையாடல்கள்.
1. (குழாய்) காசிமாமு
ஏன்த்தா இந்த இஸ்மாயில பாத்தியலாத்தா?
எந்த இஸ்மாயில் மாமு?
அதான்தா... பன மரத்துல பாதி இருப்பானே (அதிக உயரமாம்)...அவன் அப்பங்கூட அடமழைல தண்ணி பந்த வப்பான்தா (அவ்வளவு கஞ்சனாம் )
[&குழாய் என்ற சொல்லுக்கு ஒரு விரிவான பொருள், பின்னணி இருக்கும்&]
2. வாட்சா மாமு
இவருக்கு நிரந்தர வருமானம் இல்லாததால் SI அண்ட் Coவிலிருந்து சிறு தொகை கொடுப்பதாக ஏற்பாடு. ஓரிரு மாதங்கள் வழமையாகச் சென்று பெற்றுக்கொண்டார். ஒரு நாள் நேரடியாக தன தங்கச்சி மகன் SI சம்சுதீன் (SIS அண்ணன்) அவர்களிடம் சென்று...
"ஏன்த்தா... எனக்கு தர வேண்டிய பணத்த எங்கிட்ட மொத்தமா குடுத்திருங்கத்தா.
என் பணத்த நீங்க ஏன்த்தா வச்சிருக்கீங்க?"
: 3. காட்டாம்பலார் (காட்டாம்பூர் அம்பலகாரர்) ஹுசைன் மச்சான் (இவர் அத்தாவுடைய ஒன்றுவிட்ட தங்கச்சி மகன்)
ஒரு முறை கடைவீதியில் சந்தித்த பொழுது,
"என்ன மாப்ள ...எப்ப வந்தீய?"
"நேத்து வந்தேன் மச்சான்... நல்லாயிருக்கியலா?"
"நான் நல்ல இருக்கேன் மாப்ள. நீங்க எப்படி இருக்கீங்க?
ஏன் மாப்ள..நீங்க நேத்து சாயந்தரம் நம்ம வீட்டுப்பக்கம் வந்தியளா ?"
"ஏன் மச்சான், நான் வரலயே !!! "
"இல்ல..பக்கத்துக்கு வீட்டுல ஒரு கோழிய காணம்னு தேடிட்டு இருந்தாக" (நான் கோழி திருடனாம்!)
இன்னொரு நாள், ஒரு முறை அத்தாவிற்கும் இவருக்கும் நடந்த உரையாடல்.
அத்தா - "ஏன்த்தா ..உங்கத்தா அவரோட ரெண்டாவது கல்யாணத்துக்கு பொண்ணு பக்க கும்பகோணம் போயிருக்காராம்ல.. அவருக்கு என்ன ஒரு 40-45 வயசு இருக்குமா?"
மச்சான் - "ஏது மாமு...எனக்கே 39 தானே ஆகுது. அவருக்கு அவ்வளவு இருக்காது மாமு"
4. புளிக்கடை சையது (இவருடைய பதிலெல்லாம் பொதுவாக எண்கள் மற்றும் பின்னங்களிலேயே இருக்கும்)
"என்ன சை அண்ணா...அவன் இப்டி பேசிட்டு இருக்கானே என்ன சை அண்ணா!"
"அத விடுங்க... அவென் ஒரு ஆறே முக்காலும் அறையுங்காலும்" (6 3/4 + 1/2 + 1/4 = 71/2. அவர் ஒரு ஏழரையாம்)
"என்ன சை அண்ணா... அவென் எப்ப பாத்தாலும் சொறிஞ்சிக்கிட்டே திரியிறான்?"
"அவனா? அவனுக்கு நாப்பாத்திக்கா" (40 * 1/4 = 10. பத்து என்பது படர் தாமரை)
5. ராசு சுல்தான்
ஒரு முறை, அரிசிக்கடைக்கு சென்ற பொழுது உரிமையாளரிடம் (ஷாஹுல் ஹமீது)...
"ஏன்பா சாவுலு...நேத்து அரிசி வாங்கிட்டு போனனே...வீட்டுல அளந்து பாத்துட்டு குறையுதுன்னு சொன்னாகளேப்பா"
"ஆமாணே...அரிசி அளக்க அளக்க குறையும்லணே"
"என்னடா சாவுலு..இந்த ஊருல உன்னயத்தேன் கொஞ்சம் புத்திசாலின்னு நெனச்சிட்டு இருந்தேன்...நீயுமாடா? அரிசிய அளக்க அளக்க குறையுமோ? எங்க இந்த ஒரு மூட அரிசிய கொட்டி அளந்துக்கிட்டே இரு. ஒன்னுமில்லாம போயிருமோ?"
.
இதை படிக்கும் பொழுது நகைச்சுவையாக இருந்தாலும் அதிகம் படிக்காத நம் மக்களின் பேச்சுத்திறமை மெச்சப்பட வேண்டிய ஒன்று என்றால், அந்த காலத்திலேயே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சென்று படித்து வந்த எங்கள் சச்சாவின் பேச்சு திறமை தனித்துவம் வாய்ந்தது.
கம்பராமாயணத்தில் சில பாடல்களுக்கு அவர்கள் கொடுத்த விளக்கங்களை சில தடவைகள் கேட்டு மிகவும் வியந்திருக்கிறேன்.
ஒரு முறை சச்சாவின் பேச்சைக்கேட்டு அந்த மேடையிலிருந்த அப்போதைய தமிழக முதல்வர் திருவாளர் C N அண்ணாதுரை அவர்கள், "இங்கு திருநெல்வேலியில் ஒரு தமிழ்க்கல்லூரி திறக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. நமது ஆணையர் அவர்களின் பேச்சை கேட்ட பிறகு இங்கு ஒரு தமிழ்க்கல்லூரி தேவை தானா என்று கேட்கத்தோன்றுகிறது" என்று புகழ்ந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
திருநெல்வேலி நகராட்சி நூற்றாண்டு விழா மலரில் சச்சா எழுதிய, "வித்திட்டார் நெல்லையிலே நகராட்சி மலர்க வென்று வேரோடி வெள்ளிமுளை கிளம்ப கண்டோம்..." என்று ஆரம்பிக்கும் கவிதை அந்த நேரத்தில் மிகவும் பேசப்பட்ட ஒன்று.
இதே போல் நமது ஊரில் படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் அவரவர்களுக்குரிய பேச்சு திறமை உண்டு.
[&இங்கு சகோ தல்லத் சச்சா என்று குறிப்பிடுவது பெர்மைக்குரிய எங்கள் அத்தா ஹாஜி ஜனப் கா பீர்முகமது – நகராட்சி ஆணையர் ஒய்வு &]
பி கு
சகோ தல்லத் விருப்பபடி பெயர்கள் குறிப்பிடபடுகின்றன
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
07082024 புதன்
சர்புதீன் பீ
[பெயர்கள் போடலாமா
பிரச்சினை ஏதும் வராதா?]
[17:08, 04/08/2024] Ashraf Hameeda T: Atha said
"firstly, these are anecdotes to show how quick witted and sharp were our
relatives, God gifted basically. Also, none of the people mentioned in these
are alive now"
[17:09, 04/08/2024] Ashraf Hameeda T: Also, atha
mentioned these are all his personal experiences.
[17:29, 04/08/2024] SHERFUDDIN P: OK
No comments:
Post a Comment