Saturday, 31 August 2024

தமிழ் (மொழி)அறிவோம் “”மாண்ட என் மனைவி “ 01 092024 ஞாயிறு

 




தமிழ் (மொழி)அறிவோம்

“”மாண்ட என் மனைவி “
01 092024 ஞாயிறு
“”மாண்ட என் மனைவி “
மறைந்தவர் என்ற பொருள் தருவது போல் தோன்றும் மாண்ட என்ற சொல் இங்கு ஒரு சிறப்பான பொருளில் வருகிறது
என்ன பொருள் ?
எந்த சங்க காலத்துப்பாடல் ?
விடை
புறநானூறு, பாடல்191; பாடியவர் : பிசிராந்தையார்.
மாண்ட என் மனைவியோடு = மாட்சிமை பொருந்திய என் மனைவியோடு
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ரவிராஜ் – முதல் சரியான விடை
அஷ்ரப் ஹமீதா
தல்லத்
சிராஜுதீன் –விளக்கமான விடைக்கு நன்றி
சிவசுப்ப்ரமனியன்
கணேச சுப்ரமணியன் &
ஆ ரா விஸ்வநாதன்
சகோ வேலவன்அனுப்பிய விடை வேறு பாடல்
மாண்ட என்ற சொல்லுக்கு பொருள் சரியாக இருக்கிறது
பாடல்:
யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர்
யாண்கண் டனையரென் னிளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே.
பொருள் :
பிசிராந்தையார் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு வயது ஆகிக் கொண்டே இருந்தது. இருந்தும், முடி நரைக்கவே இல்லை. அவரிடம் கேட்டார்கள், "எப்படி உங்களுக்கு மட்டும் முடி நரைக்கவே இல்லை" என்று.
அதற்கு அவர் சொன்னார் "என் மனைவியும் பிள்ளைகளும் மாண்பு உடையவர்களாக இருக்கிறார்கள். ஊரில் உள்ள மற்றவர்களும், அரசனும் அறம் பிறழாமல் வாழ்கிறார்கள். அறிவு நிறைந்த சான்றோர் அடக்கத்துடன் இருக்கிறார்கள் என் ஊரில். எனவே எனக்கு முடி நரைக்கவில்லை" என்றார்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௦௧௦௯௨௦௨௪
01 092024ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment